1. ஆதியாய் அனாதியாகி ஆதிமூலப் பொருளுமாகி
ஆலிலையில் பள்ளி கொண்ட ஆதி மூலமே - ஓம் நமோ
2. பக்தர்களைக் காக்க வேண்டி பத்துவித வேடங்கொண்டு
பல பலவாம் லீலை செய்த புண்ணிய மூர்த்தியே - ஓம் நமோ
3. மத்ஸயமாகி நீரில் மூழ்கி மறைகள் நான்கும் தூக்கி வந்து
மாபெரும் பணியைச் செய்த மாயா மூர்த்தியே - ஓம் நமோ
4. மூழ்கி மறைந்த மந்திர கிரியை மத்தாக்கி கடல் கடையமுங்கி
முதுகில் சுமந்து நின்ற மனோமோகனா - ஓம் நமோ
5. பன்றியாகி ரூபம் கொண்டு பாதாளத்தில் புகுந்து சென்று
பூமிதனை தூக்கி வந்த புண்ணிய ரூபனே - ஓம் நமோ
6. சின்னஞ்சிறு பக்தன் வாக்கை சத்தியமாக்கிக் காட்ட வேண்டி
சபையில் தூணில் சாடிவந்த சத்திய மூர்த்தியே - ஓம் நமோ
7. அகிலாண்ட மத்தனையும் அடியிரண்டால் அளந்த பின்பு
அசுரன் தலையில் அடியை வைத்த ஆதி தெய்வமே - ஓம் நமோ
8. பரசுதனைக் கையில் கொண்டு பரமன் ராமன் எதிரில் வந்து
பத்மனாபன் தனுஸைத் தந்த பார்க்கவ ராமா - ஓம் நமோ
9. மமதை கொண்ட ராவணனை மூலமுடன் அழிக்க வேண்டி
மானிடனாய் அவதரித்த மாயா மூர்த்தியே - ஓம் நமோ
10. அண்ணனாகி சேவை செய்ய ஆர்வமுடன் கலப்பை ஏந்தி
அரும்பணிகள் பலவும் செய்த ஆதிஜோதியே - ஓம் நமோ
11. கர்வம் கொண்ட கம்ஸன் தனை கூண்டுடனே அழிக்க வேண்டி
கிருஷ்ணாவதாரம் செய்த கருணாமூர்த்தியே - ஓம் நமோ
12. கலியுகத்தில் கஷ்டம் போக்க குதிரை மீதிலேறிக் கொண்டு
கல்கியாக வரப்போகும் சாகுந்த ராமா - ஓம் நமோ
13. கலியுகத்தில் மக்களுக்கு கைவல்யம் கையில் தர
குருவாயூரில் கோயில் கொண்ட கிருஷ்ண மூர்த்தியே - ஓம் நமோ
14. ஆணவத்தால் அறிவிழந்து அகந்தை கொண்ட எந்தனுக்கு
அறிவையூட்டி ஆதரிக்கும் ஆதிமூலமே - ஓம் நமோ
15. பண்ணும் பாட்டும் அறியாத பித்தன் எனைப் பாடவைத்து
பக்தனாக்கப் பாடுபடும் புண்ய ரூபனே - ஓம் நமோ
16. நாமம் நம்பி சொல்பவர்க்கு நற்கதியைத் தருவேன் என்று
நின்றலறி சத்தியம் செய்த நிகமவேத்யனே - ஓம் நமோ
17. நாமம் சொல்லும் இடந்தன்னிலே நித்ய வாசம் செய்வேனென்று
நாரதர்க்கு உறுதி தந்த நித்ய வஸ்துவே - ஓம் நமோ
18. பூர்ணாவதாரம் கொண்டு பதினாறு கலைகள் கொண்டு
பவனபுரம் வந்தடைந்த பூரண ரூபனே - ஓம் நமோ