SS கல்பக கணேச பஞ்சரத்னம்! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> கல்பக கணேச பஞ்சரத்னம்!
கல்பக கணேச பஞ்சரத்னம்!
கல்பக கணேச பஞ்சரத்னம்!

1. ஸ்ரீமத் தில்வவநே ஸபேசஸதந ப்ரத்யக் ககுப் கோபுரா தோபாகஸ்த்தித சாருஸத் மவஸதி: பக்தேஷ்டகல்பத்ரும:
ந்ருத்தா நந்தமதோத்கடோ கணபதிர் ஸம்ரக்ஷதாத்வோஸ்நிசம் துர்வாஸ: ப்ரமுகா கிலர்ஷி விநுத: ஸர்வேச்வரோஸ்க்ர்யோஸ்வ்யய:

பொருள் : சீர்மிக்க சிதம்பரத்தில் நடராஜரது கோயிலின் மேல் கோபுரத்தின் அழகிய கோட்டத்தில் விளங்குபவர், கற்பக மரமாகி அடியார் விரும்புவதை நிறைவேற்றுபவர், நடனத்தில் அடங்கா ஆனந்த மதம் கொண்டவர், துர்வாசர் முதலிய முனிவர்களால் வணங்கப் பெற்றவர், எல்லோருக்கும் மூத்தவர், குறைவற்றவர், அந்த கணபதி நம்மைக் காக்கட்டும்.

2. ஸ்ரீமத் தில்வ வநாபிதம் புரவரம் க்ஷúல்லாவுகம் ப்ராணிநாம், இத்யாஹுர்முநய: கிலேதி நிதராம் ஜ்ஞாதும் ச தத்ஸத்யதாம்
ஆயாந்தம் நிசி மஸ்கரீந்த் ரமஸ்பியோ தூர்வாஸஸம் ப்ரீணயந், ந்ருத்தம் தர்சயதி ஸ்ம நோ கணபதி: கல்பத்ருகல்போஸ்வதாத்

பொருள் : தில்லைக்காடு என்ற நகரம் உயிரினம் அனைத்தின் பசியைப் போக்குகிறது என முனிவர்கள் கூறுகிறார்கள். அதன் உண்மை நிலையை அறிய இரவில் வந்த துறவிகளில் சிறந்த துர்வாசரைத் திருப்திப்படுத்தி அவர் விரும்பிய தன் நடனத்தைக் காட்டிய கற்பகமரம் போன்ற கணபதி நம்மைக் காக்கட்டும்.

(தில்லையில் சிவகாமி அன்னை அன்னம் பாலிப்பது உண்மையா என்று சோதிக்க வந்தார் துர்வாசர். இரவானதால், அவருக்கு அன்னமளிக்கவில்லை. அதனால் சபிக்க இருந்த துர்வாசருக்கு சிவகாமி அம்பிகை உணவளித்தாள். நடராஜனின் நடனம் கண்ட பின்பே உணவருந்துவேன் என மறுத்த முனிவர் முன் கணபதியைக் கொண்டு அந்த நடனத்தைக் காண்பித்தாள் என்பது தல வரலாறு.)

3. தேவாந் ந்ருத்ததி த்ருக்ஷயா பசுபதே: அப்யாக தான் காமிந:, சக்ராதீன் ஸ்வயமுத்த்ருதம் நிஜபதம் வாமேதரம் தர்சயன்
தத்வா தத்ததபீஷ்டவர்க மநிசம் ஸ்வர்காதி லோகான் விபு: நித்யே ய: சிவகாமிநாததநய: குர்யாத்சிவம்வோஸ்ந்வஹம்

பொருள் : சிவபெருமானின் நடனம் காண விரும்பி வந்த இந்திரன் முதலான தேவர்களுக்குத் தன் வலது திருவடியைத் தூக்கிக் காண்பித்து அவர்கள் விரும்பியதை அருளி, சொர்க்கம் முதலிய அவரவர் உலகிற்கு அனுப்பினார். அந்த சிவகாமி சிதம்பரநாதனின் மகன் நமக்கு மங்களத்தைத் தரட்டும்.

4. அஸ்மாகம் புரதச்சகாஸ்து பகவான் ஸ்ரீகல்பகாக் யோஸ்க்ரணீ, கோவிந்தாதி ஸுரார்சிதோஸ்ம்ருதரஸப் ராப்த்யை கஜேந்த்ராந ந:
வாசம் யச்சது நிச்சலாம் ச்ரியமபி ஸ்வாத்மாவ போதம் பரம், தாரான் புத்ரவராம்ச்ச ஸர்வவிபவம் காத்யாயனி ஈசாத்மஜ:

பொருள் : அமிர்தம் பெற கோவிந்தன் முதலானோரால் வேண்டப் பெற்ற யானைமுக கற்பக கணேசர், நம் முன் தோன்றட்டும். அவர் எல்லோருக்கும் மூத்தவர். நல்ல வாக்கையும், அகலாத செல்வத்தையும், உயர்ந்த ஆத்ம ஞானத்தையும், நன் மனைவி மக்களையும் பெருமையையும் அந்த காத்யாயனீ - சிவனின் மகன் தந்தருளட்டும்.

5. வந்தே கல்பக குஞ்ஜரேந்த்ரவதநம் வேதோக்தி பி: தில்வபூ: தேவை: பூஜிதபாத பத்மயுகலம் பாசச்சி தம் ப்ராணிநாம்
தந்தாதீ நபி ஷட்பு ஜேஷு தததம்வாஞ்ச்சா ப்ரதத்வாப்தயே, ஸ்வாப்யர்ணாச்ரயி, காமதேநு மநிசம் ஸ்ரீமுக்ய ஸர்வார்ததம்

பொருள் : கற்பக கணபதி, யானைமுகன், தில்லை வாழ் அந்தணர்களால் வேத மந்திரங்களால் திருவடிகளில் பூஜிக்கப் பெற்றவர், உயிரினத்தின் பந்தத்தை நீக்குபவர், தந்தம் முதலிய ஆறு ஆயுதங்களை ஏந்தியவர். விரும்பியதைத் தருபவர் என்ற தகுதியைப் பெற காமதேனுவால் அணுகிப் போற்றப் பெற்றவர், செல்வம் முதலிய வேண்டிய எல்லாம் தரும் கணேசரை வணங்குகிறேன்.

6. ஒளமாபத்யம் இமம் ஸ்தவம் ப்ரதிதினம் ப்ராதர் நிசம் ய: படேத், ஸ்ரீமத் கல்பக குஞ்ஜராநந க்ருபா பாங்காவ லோகாந்நர:
யம் யம் காமயதே ச தம் தமகிலம் ப்ராப்நோதி நிர்விக்நத: கைவல்யம் ச ததாந்திமே வயஸி தத் ஸர்வார்த்த ஸித்திப்ரதம்

பொருள் : உமாபதி சிவாச்சாரியாரால் செய்யப் பெற்ற, விரும்பியதைத் தருகிற இந்தத் துதியை இரவும் பகலும் படிப்பவன் ஸ்ரீகற்பக விநாயகரின் கருணைக் கடைக்கண் பார்வையால் நாடியது அனைத்தையும் தடையின்றிப் பெறுவான். தன் இறுதி நாட்களில் எல்லா புருஷார்த்தத்தையும் நிறைவுறச் செய்கிற கைவல்யத்தையும் பெறுவான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar