1. ஸ்ரீ ராம ராமா..
1. ஸ்ரீ ராம ராமா வென்று ஜெய மாருதி - ஸதா
சிந்தித் திருக்கும் பக்த ஜெய மாருதி
ஜெய மாருதி ஜெய மாருதி
2. நீலக்கடலை ஒரு நீர்த்தாரைப் போல் - தாவிக்
குதித்த பக்த ஜெய மாருதி
ஜெய மாருதி ஜெய மாருதி
3. பொல்லாத ராவணனை லங்கேசனை - ஒரு
புழுவாய் மதித்த பக்த ஜெய மாருதி
ஜெய மாருதி ஜெய மாருதி
4. ஸீதையை சிறைமீட்ட ஜெய மாருதி - ஸதா
சிந்தித்திருக்கும் பக்த ஜெய மாருதி
ஜெய மாருதி ஜெய மாருதி
2. சஞ்சீவி மலையைக்....
சஞ்சீவி மலையைக் கொணர்ந்தவன்
சிரஞ்சீவி என்னும் பட்டம் பெற்றவன் ஹனுமான் (2)
அஞ்சனா தேவி கொஞ்சும் புத்திரன்
சஞ்சலம் துடைத்த ராம மித்திரன் - காத்திரன் (சஞ்)
ராமகதை தன்னில் மகிழ்பவன் -ஸீதா
ராமனை ஹ்ருதயத்தில் பூஜிப்பவன்
ராம நாமத்தின் பெருமை உணர்ந்தவன்
சோமனின் அம்ஸத்தைப் பெற்றவன் - கற்றவன் (சஞ்)
எங்கெல்லாம் ராம நாமம் உண்டோ அங்கெல்லாம் இருப்பது உண்டு
தம் அங்கம் மறந்த நிலை கொண்டு
ஜெய் ஜெய் ராம முகுந்த ஹரி ஹரி ஹரி ஜெய் ஜெய் ராம் (3)
அஞ்சலியுடன் துதிப்பதுண்டு அன்றும் இன்றும் (சஞ்)
3. அனுமனைப் பாடு மனமே....
அனுமனைப் பாடு மனமே - உன்னை
அணுவும் அணுகாது பயமே
நாள்தோறும் ஸ்ரீ ராம ஜெயமே சொல்லும்
வாழ்க்கையில் எல்லாம் இன்ப மயமே.
1. என்றும் அவனை நினைத்தால் போதும்
எதிர்ப்புகள் எல்லாம் மறந்தே போகும்
கவலை என்பது மலை என்றாலும்
கவலை வேண்டாம் அவன் கை தாங்கும்
2. சக்தியும் நல்ல புத்தியும் கொடுக்கும்
சமய சஞ்சீவி ராமனின் தூதன்
நம்பிக்கையோடு அவனைத் தொழுதால்
நமக்கென வருவான் நல்லருள் புரிவான்.
4. ஜெய் ஹனுமான்...
பல்லவி
ஜெய் ஹனுமான், ஜெய் ஹனுமான்
வாயு மைந்தா ஜெய் ஹனுமான் (2)
ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான்
வானர வீரா ஜெய் ஹனுமான் (ஜெய ஹனுமான்)
ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான்
வானர ராஜா ஜெய் ஹனுமான் (ஜெய ஹனுமான்)
ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான்
இராம பக்தா ஜெய் ஹனுமான் (ஜெய ஹனுமான்)
ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான்
இராம தூதா ஜெய் ஹனுமான் (ஜெய ஹனுமான்)
ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான்
மகானு பாவா ஜெய் ஹனுமான் (ஜெய ஹனுமான்)