SS நவகிரக மந்திரங்கள் - குரு - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> நவகிரக மந்திரங்கள் - குரு
நவகிரக மந்திரங்கள் - குரு
நவகிரக மந்திரங்கள் - குரு

ஓம் ப்ருஹஸ்பதயே நம:

(இவர் தேவகுரு. இவருடைய பார்வையால் தோஷங்கள், கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். )

குரு (ப்ருஹஸ்பதி) த்யான ஸ்லோகம்

வராக்ஷ மாலா தண்டஞ்ச கமண்டலு தரம் விபும்
புஷ்ப ராகாஞ்சிதம் பீதம் வரதம் பாவயேத் குரும்

குரு த்யான ஸ்லோகம் (வேறு வகை)

1. தேவாநாஞ்ச ரிஷீணாஞ்ச குரும் காஞ்சன ஸந்நிபம்
பக்தி பூதம் த்ரிலோகேஸம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்

2. தப்த காஞ்சன வர்ணாபம் சதுர்புஜ சமன்விதம்
தண்டாக்ஷ ஸூத்ர ஹஸ்தம் ச கமண்டலு வரான் விதம்

3. பீதாம்பரதரம் தேவம் பீத கந்தானு லேபனம்
புஷ்பராக மாயாபூஷம் விசித்திர முகுடோஜ்வலம்

4. ஸ்வர்ணாஸ்வரத மாரூடம் மீதத்வஜ ஸுசோபிதம்
மேரோ: ப்ரதக்ஷிணம் சம்யகா சரந்தம் ஸுசோபனம்

5. அபீஷ்ட வரதம் தேவம் சர்வக்ஞம் ஸுர பூஜிதம்
சர்வ கார்யார்த்த ஸித்தியார்த்தம் ப்ரணமாமி குரும்சதா

மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க்கு அரசன் மந்த்ரி
நறைசொரி கற்பகப் பொன் நாட்டினுக்கு அதிபனாகி

நிறை தனம் சிவிகை மன்றல் நீடு போகத்தை நல்கும்
இறைவன் குரு வியாழன் இணையடி போற்றி! போற்றி!

குரு காயத்ரீ மந்திரம்

ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு: ப்ரசோதயாத்

குரு ஸ்தோத்ரம்

ப்ருஹஸ்பதே அதி யதர்யோ அர்ஹா த்யுமத்விபாதி க்ரதுமஜ்ஜனேஷு
யத்தீதயச்சவஸர்த ப்ரஜாத ததஸ்மாஸு த்ரவிணம் தேஹி சித்ரம்

அதிதேவதா மந்த்ரம்:

இந்த்ரமருத்வ இஹ பாஹிஸோமம் யதாசார்யாதே அபிபஸ்ஸுதஸ்ய
தவ ப்ரணீதீ தவ சூர சர்மன் னாவிவாஸன்தி கவயஸ்ஸுயக்ஞா

ப்ரத்யதி தேவதா மந்த்ரம்:

ப்ருஹ்மஜஞ்ஞானம் ப்ரதமம் புரஸ்தாத் விஸீமதஸ்ஸு ருசோவேன ஆவ:
ஸபுத்னியா உபமா அஸ்ய விஷ்டாஸ்ஸதஸ்ச யோனிம்ஸ தஸ்ச விவ:
அதிதேவதா ப்ரத்யதி தேவதா ஸமேத பகவதே குரவே நம:

குரு - அஷ்டோத்தரசத நாமாவளி

ஓம் குரவே நம:
ஓம் குணாகராய நம:
ஓம் கோப்த்ரே நம:
ஓம் கோசராய நம:
ஓம் கோபதிப்ரியாய நம:
ஓம் குணிநே நம:
ஓம் குணவதாம் ச்ரேஷ்டாய நம:
ஓம் குருணாம் குரவே நம:
ஓம் அவ்யயாய நம:
ஓம் ஜேத்ரே நம:

ஓம் ஜயந்தாய நம:
ஓம் ஜயதாய நம:
ஓம் ஜீவாய நம:
ஓம் அநந்தாய நம:
ஓம் ஜயாவஹாய நம:
ஓம் ஆங்கிரஸாய நம:
ஓம் அத்வராஸக்தாய நம:
ஓம் விவிக்தாய நம:
ஓம் அத்வரக்ருத்பராய நம:
ஓம் வாசஸ்பதயே நம:

ஓம் வசிநே நம:
ஓம் வச்யாய நம:
ஓம் வரிஷ்டாய நம:
ஓம் வாக்வி சக்ஷணாய நம:
ஓம் சித்தசுத்திகராய நம:
ஓம் ஸ்ரீமதே நம:
ஓம் சைத்ராய நம:
ஓம் சித்ர சிகண்டிஜாய நம:
ஓம் ப்ருஹத்ரதாய நம:
ஓம் ப்ருஹத்பாநவே நம:

ஓம் ப்ருஹஸ்பதயே நம:
ஓம் அபீஷ்டதாய நம:
ஓம் ஸுராசார்யாய நம:
ஓம் ஸுராராத்யாய நம:
ஓம் ஸுரகார்யக்ருதோத்யமாய நம:
ஓம் கீர்வாண போஷகாய நம:
ஓம் தந்யாய நம:
ஓம் கீஷ்பதயே நம:
ஓம் கிரிசாய நம:
ஓம் அநகாய நம:

ஓம் தீவராய நம:
ஓம் திஷணாய நம:
ஓம் திவ்ய பூஷணாய நம:
ஓம் தேவபூஜிதாய நம:
ஓம் தநுர்த்தராய நம:
ஓம் தைத்யஹந்த்ரே நம:
ஓம் தயாஸாராய நம:
ஓம் தயாகராய நம:
ஓம் தாரித்ர்யநாசநாய நம:
ஓம் தந்யாய நம:

ஓம் தக்ஷிணாயநஸம்பவாய நம:
ஓம் தநுர்மீநாதிபாய நம:
ஓம் தேவாய நம:
ஓம் தநுர்பாணதராய நம:
ஓம் ஹரயே நம:
ஓம் அங்கிரோவர்ஷ ஸஞ்ஜாதாய நம:
ஓம் அங்கிர: குலஸம்பவாய நம:
ஓம் ஸிந்து தேசாதிபாய நம:
ஓம் தீமதே நம:
ஓம் ஸ்வர்ணகாயாய நம:

ஓம் சதுர்புஜாய நம:
ஓம் ஹேமாங்கதாய நம:
ஓம் ஹேமவபுஷே நம:
ஓம் ஹேமபூஷணபூஜிதாய நம:
ஓம் புஷ்யநாதாய நம:
ஓம் புஷ்யராக மணிமண்டநமண்டிதாய நம:
ஓம் காசபுஷ்பஸமாநாபாய நம:
ஓம் இந்த்ராத்யமர ஸங்கபாய நம:
ஓம் அஸமாநபலாய நம:
ஓம் ஸத்வகுணஸம்பத் விபாவஸவே நம:

ஓம் பூஸுராபீஷ்டதாய நம:
ஓம் பூரி யசஸே நம:
ஓம் புண்ய விவர்த்தநாய நம:
ஓம் தர்மரூபாய நம:
ஓம் தநாத்யக்ஷõய நம:
ஓம் தநதாய நம:
ஓம் தர்மபாலநாய நம:
ஓம் ஸர்வவேதார்த்த தத்வஜ்ஞாய நம:
ஓம் ஸர்வாபத் விநிவாரகாய நம:
ஓம் ஸர்வபாபப்ரசமநாய நம:

ஓம் ஸ்வமதாநுகதாமராய நம:
ஓம் ரிக்வேதபாரகாய நம:
ஓம் ரிக்ஷராசிமார்க ப்ரசாரவதே நம:
ஓம் ஸதாநந்தாய நம:
ஓம் ஸத்யஸந்தாய நம:
ஓம் ஸத்யஸங்கல்ப மாநஸாய நம:
ஓம் ஸர்வாகமஜ்ஞாய நம:
ஓம் ஸர்வஜ்ஞாய நம:
ஓம் ஸர்வவேதாந்தவிதே நம:
ஓம் ப்ரஹ்மபுத்ராய நம:

ஓம் ப்ராஹ்மணேசாய நம:
ஓம் ப்ரஹ்மவித்யா விசாரதாய நம:
ஓம் ஸமாநாதிக நிர்முக்தாய நம:
ஓம் ஸர்வலோக வசம்வதாய நம:
ஓம் ஸஸுராஸுர கந்தர்வ வந்திதாய நம:
ஓம் ஸத்யபாஷணாய நம:
ஓம் ப்ருஹஸ்பதயே நம:
ஓம் ஸுராசார்யாய நம:
ஓம் தயாவதே நம:
ஓம் ஸுபலக்ஷணாய நம:

ஓம் லோகத்ரய குரவே நம:
ஓம் ஸ்ரீமதே நம:
ஓம் ஸர்வகாய நம:
ஓம் ஸர்வதோவிபவே நம:
ஓம் ஸர்வேச்வராய நம:
ஓம் ஸர்வதாதுஷ்டாய நம:
ஓம் ஸர்வதாய நம:
ஓம் ஸர்வபூஜிதாய நம:

குரு கவசம்

சீரியன் மனத்துள் வேண்டும்
சித்து தந்து அளித்துச் செய்யும்
பாரியல் கருமம் கூட்டிப்
பரவுமெய்ஞ் ஞான வாழ்வு
மேரியல் செல்வப் பேறும்
யாவையும் ஒருங்கு நல்கும்
தேரியல் அறிஞன் தேவர்
தேசிகன் திருத்தாள் போற்றி.

அரும்பிரு கற்பதிப் போர்
ஆண்டகை சென்னி காக்க
வருந்திரு நெற்றி காக்க
வானவர் குரவன் கன்னம்
விரும்பினன் காக்க நாட்டம்
வேண்டுவ தருவோன் காக்க
பருங்குமிழ் பொருவு நாசி
பண்ணவர் அரசன் காக்க.

பாட்டு அமர் செவ்வாய் வேத
பாரகன் காக்க துண்டம்
கூட்டமுற்ற றிவன் காக்க
குலவரைப் புயம் இரண்டும்
வேட்டமர் சுகம் தந்து ஆள்வோன்
விரும்பினன் காக்க செங்கை
வாட்டும்வச் சிரங்கைக் கொள்ளும்
வானவன் வழாது காக்க.

பருவரை பொருவு மார்பம்
பயிலுங்கீட் பதி புரக்க
விருதனம் வாக்கு வல்லோன்
என்றும் வந்து எய்திக் காக்க
வருசுகம் நல்கும் நாதன்
வயங்குஎழில் வயிறு காக்க
பொருவரு நீதி வல்லோன்
பொற்புஉறு நாபி காக்க.

எங்கும் சென்று அளிக்கும் ஈசன்
எழிற்கடி புரக்கவூருத்
தங்கு புண்ணியன் புரக்க
சங்கமெய்ஞ் ஞானம் ஈயும்
புங்கவன் புரக்க பாதம்
புகல்உல கெல்லா மாகும்
அங்கணன் புரக்க மேனி
அமர் குருப் புரத்து காக்க.

காலையும் உச்சிப் போதும்
கதிரவன் குடபான் மேவு
மாலையும் வானோர் போற்ற
வருகுரு கவசம் என்னு
நூலை அன்போ டுரைக்கு
நுண்ணியன் வேட்டாங்கு எய்திச்
சோலைஅம் தருவிண் ணாட்டுச்
சுரரையும் வெற்றி கொள்ளும்.

ப்ருஹஸ்பதி ஸ்தோத்ரம்
(ஸ்காந்த புராணத்தில் உள்ளது)

(இதைப் படிப்பதால் வயிற்றுவலி, குன்மம் முதலிய ரோகங்கள் விலகும். பலம், பொருள், ஸந்தானம், தீர்க்காயுஸ் முதலியவைகள் உண்டாகும். பாபங்களும் விலகும். கோசார ரீதியாய் 1,3,8,12 முதலிய இடங்களில் குரு இருந்தாலும், அதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகும்.)

1. குருர்ப்ருஹஸ்பதிர்ஜீவ: ஸுராசார்யோ விதாம் வர:
வாகீசோ திஷணோ தீர்கச்மச்ரு: பீதாம்பரோ யுவா:

2. ஸுதாத்ருஷ்டிர் க்ரஹாதீசோ க்ருஹபீடாபஹாரக:
தயாகரா: ஸெளம்யமூர்தி: ஸுரார்ச்ய: குட்மலத்யுதி:

3.லோகபூஜ்யோ லோககுரு: நீதிக்ஞோ நீதிகாரக:
தாராபதிஸ்சாங்கிரஸோ வேதவேத்ய: பிதாமஹ:

4. பக்த்யா ப்ருஹஸ்பதிம் ஸ்ம்ருத்வா நாமான்யேதானிய: படேத்:
அரோகீ பலவான் ஸ்ரீமான் புத்ரவான் ஸ பவேந்நர:

5. ஜீவேத்வர்ஷசதம் மர்த்யோ பாபம் நச்யதி நச்யதி:
ய: பூஜயேத்குருதினே பீதகந்தாக்ஷதாம்பரை:

6. புஷ்பதீபோபஹாரைச்ச பூஜயித்வா ப்ருஹஸ்பதிம்:
ப்ராமணான் போஜயித்வா ச பீடாசாந்திர்பவேத்குரோ:

குரு ஸ்தோத்திரப் பாடல்

மறைமிகு கலைநூல் வல்லோன்
வானவர்க்கு அரசன் மந்திரி
நறைசொரி கற்பகப் பொன்
நாட்டினுக்கு அதிப னாகி
நிறைதனம் சிவிகை மண்ணில்
நீடு போகத்தை நல்கும்
இறையவன் குரு வியாழன்
இருமலர்ப் பாதம் போற்றி!

(வேறு)

குணமிகு வியாழ குருபகவானே
மணம் உள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்!
ப்ரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா
க்ரஹதோஷமின்றி கடாக்ஷித் தருள்வாய்!!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar