SS சிவதூதி நித்யா! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சிவதூதி நித்யா!
சிவதூதி நித்யா!
சிவதூதி நித்யா!

செந்நிற ஆடை பூண்டு, நவரத்ன கிரீடம் அணிந்து கோடை காலத்து மத்யான சூரியன் போல பூரண ஒளிமிக்கவளாகக் காட்சி தருகிறாள் சிவதூதி நித்யா. இவள் பூண்டிருக்கும் நானாவிதமான ஆபரணங்களின் ஒளியால், இவளது உருவத்தின் ஒளி இன்னும் கூடி தேஜோமயமாக காட்சி தருகிறாள். புன்முறுவல் பூத்த முகமும் எட்டு திருக்கரங்களும் கொண்டு விளங்கும் தேவியைச் சுற்றிலும் நின்று மகரிஷிகள் பாடித் துதிக்கிறார்கள்.

தன் இடக்கைகளில் பாசம், கேடயம், கதை, ரத்னங்கள் நிரம்பிய பாத்திரம் ஆகியவையும், வலக்கைகளில் அங்குசம், கக்தி, கோடரி மற்றும் தாமரையை ஏந்தியபடி காட்சிதரும் சிவதூதி, தீமைகளை அழித்து நன்மை அளிப்பவள்.

சும்ப நிசும்பர்கள் எனும் அசுரர்களால் உலகுக்கு துன்பம் உண்டானபோது, தேவர்கள் அனைவரும் அம்பிகையைத் துதித்தார்கள். அப்போது அம்பிகையிடமிருந்து ஒரு தேவி தோன்றினாள். தீய சக்திகளை அழிப்பதற்காகவே தோன்றி இருந்தாலும், அவர்களும் திருந்த ஒரு சந்தர்ப்பம் கொடுக்க எண்ணினாள் தேவி. பகைவனுக்கு அருளும் நன்னெஞ்சு இவளுக்கு, அதனால் தான் தோன்றக் காரணமான அந்த பரமேஸ்வரனையே அழைத்து சும்ப நிசும்பர்களிடம் தூதாக அனுப்பினாள். சிவபெருமானையே தூதாக அனுப்பியதால், இவளுக்கு சிவதூதி என்று பெயர்.

இந்த தேவி, அநியாயங்களைப் பொறுக்காதவள்; அநீதிகளையும் அதர்மத்தையும் அழிப்பதில் அதி தீவிரம் கொண்டவள். குயுக்தியான எண்ணங்களும், கோணல் மதி கொண்டவர்களும் மனத்தாலும் எண்ண முடியாத தேவதை சிவதூதி.

நேர்வழியில் நடப்பவர்களுக்கும், அடுத்தவரைக் கெடுக்க நினைக்காத மனம் கொண்டவர்களுக்கும் அருளைவாரி வழங்குபவள். தன்பக்தன் ஆசைப்படும் எல்லாவற்றையும் அளித்து அவனை சந்தோஷப்படுத்துபவள். அதேசமயம் அவனுக்கு எதிராக உள்ள எல்லாவற்றையும், அவனுக்குத் தீங்கு செய்யும் எந்த சக்தியையும் அழிக்கவும் இவள் தயங்குவதில்லை.

சிவசங்கரி என்றே சிவதூதியைப் போற்றுகிறோம். அதாவது, என்றும் மங்களத்தை மட்டுமே கொடுப்பவள் என்று பொருள். உலக வாழ்க்கைக்கு மட்டும் அல்ல; ஆன்ம வாழ்வுக்கும்தான். சிவம் என்றால் மங்களம் என்று பொருள்! உலக வாழ்வில் நம் அனைவருக்கும் நன்மை மட்டுமே வேண்டும். துன்பத்தை யாருமே விரும்புவதில்லை.

தன் பக்தனின் உள்ளத்தே ஆன்ம தாகத்தை ஊற்றெடுக்கச் செய்து, ஞானத்தை ஊட்டுகிறாள். சிவ தத்துவ ப்ராப்தி எனும் ஞானத்தை அளித்து தன் பக்தனுக்கு சிவ தத்துவத்தை உணரச்செய்து, சிவ தத்துவமாக, ஏன், சிவமாகவே மாற்றி விடுகிறாள் இந்த சிவசங்கரி! அன்னையின் பெருமையைச் சொல்லும் போது, ஸேவக ஜன தாப ஹரே என்கிறது ஓர் பாடல். அதாவது,

தன்னையே சரணம் என்று பணியும் பக்தனின் உள்ளத்தில் உள்ள இறை என்னவாக இருந்தாலும், அதனை நீக்கி அவனுக்குள் இருக்கும் ஆனந்தத்தை அவனே உணரச்செய்து தன் பக்தனை ஆனந்த மயமாக்குவதே சிவதூதியின் சிறப்பு!

சிவதூதி நித்யாவுக்கான அர்ச்சனை:
ஓம் சிவதூத்யை நம:
ஓம் ஸுநந்தாயை நம:
ஓம் ஆனந்தின்யை நம:
ஓம் விஷபத்மின்யை நம:
ஓம் பாதாலகண்ட மத்யஸ்தாயை நம:
ஓம் ஹ்ருல்லேகாயை நம:
ஓம் வனகேசர்யை நம:
ஓம் கலாயை நம:
ஓம் ஸப்த தச்யை நம:
ஓம் சுத்தாயை நம:
ஓம் பூர்ண சந்த்ர நிபானனாயை நம:
ஓம் ஆத்ம ஜ்யோதிஷே நம:
ஓம் ஸ்வயம் ஜ்யோதிஷே நம:
ஓம் அக்னி ஜ்யோதிஷே நம:
ஓம் அநாஹதாயை நம:
ஓம் ப்ராண சக்த்யை நம:
ஓம் க்ரியா சக்த்யை நம:
ஓம் இச்சா சக்த்யை நம:
ஓம் ஸுகாவஹாயை நம:
ஓம் ஞான சக்த்யை நம:
ஓம் ஸுகானந்தாயை நம:
ஓம் வேதின்யை நம:
ஓம் மஹிமாயை நம:
ஓம் ப்ரபாயை நம:
ஓம் ருஜவே நம:
ஓம் யஜ்ஞாயை நம:
ஓம் யஜ்னஸாம்னாயை நம:
ஓம் ஸாமரஸ்ய விநோதின்யை நம:
ஓம் கீத்யை நம:
ஓம் ஸாமத்வன்யை நம:
ஓம் ஸ்ரோதாயை நம:
ஓம் ஹும்க்ருத்யை நம:
ஓம் ஸாம வேதின்யை நம:
ஓம் அத்வராயை நம:
ஓம் கிரிஜாயை நம:
ஓம் க்ஷúத்ராயை நம:
ஓம் நிக்ரஹாயை நம:
ஓம் அனுக்ரஹாத்மிகாயை நம:
ஓம் புராண்யை நம:
ஓம் சில்பி ஜனன்யை நம:
ஓம் இதிஹாஸாயை நம:
ஓம் அவபோதின்யை நம:
ஓம் வேதிகாயை நம:
ஓம் யக்ஞ ஜனன்யை நம:
ஓம் மஹாவேத்யை நம:
ஓம் ஸதக்ஷிணாயை நம:
ஓம் ஆன்வீக்ஷிக்யை நம:
ஓம் த்ரய்யை நம:
ஓம் வார்தாயை நம:
ஓம் கோரக்ஷகாயை நம:
ஓம் கதிதாயை நம:

மனதில் நல்ல எண்ணத்துடனும் மன நிறைவுடனும் சிவதூதியை அதற்குரிய  வழிமுறையில் ஆராதனைகள் செய்தால், சிறப்பான பலன்கள் உண்டாகும்.

உதாரணமாக, தேங்காயும் வெல்லமும் சேர்த்து ஹோமம் செய்தால் நிறைந்த ஐஸ்வர்யம் உண்டாகும். செங்கழுநீர் பூவை நெய்யில் தோய்த்தும், செந்தாமரைப் பூவை பாலில் தோய்த்தும், செண்பகப் பூவை த்ரிமதுவில் தோய்த்தும் செய்யப்படும் ஹோமத்தால் மனதுக்கினிய கன்னிகையை மனைவியாக அடையலாம்.

எருமைப்பால் மற்றும் ஆட்டுப் பாலினால் பெறப்பட்ட நெய்யைக் கொண்டு செய்யப்படும் ஹோமத்தால் ரத்னங்கள், அன்னம், சௌக்யம் என எல்லா வளங்களும் கிட்டும்.

செவ்வரளியாலோ, வெள்ளை அரளியாலோ இருபத்தியோரு இரவுகள் தொடர்ந்து ஹோமம் செய்தால், அவன் நிறை செல்வவளத்தையும் அடைந்து மகத்தான நிலைக்கு உயர்வான்.

சிவதூதி நித்யாவுக்கான பூஜை:
முதலில் ஸ்ரீலலிதா தேவியை மகா நித்யாவாக த்யானிக்க வேண்டும்.

யா பஞ்சதச்யாத்மக மந்த்ர ரூபா
பஞ்சோபசார ப்ரிய மானஸாம்பா
பஞ்சாக ஹர்த்ரீம் மஹதீம் சிவாம்தாம்
அ: கார ரூபாம் ப்ரணமாமி நித்யாம்

என்று கூறி, சிவதூதி நித்யா தேவியின் படத்துக்கோ யந்த்ரத்துக்கோ பூக்களைப் போடவும். பின்னர் சந்தனம், குங்குமத்தால் பொட்டு இடவும். பின்னர் அன்றைய நித்யாவான சிவதூதி நித்யாவை, அவளது யந்த்ரத்திலோ படத்திலோ த்யானிக்கவும்

சிவப்ரதாமீச்வர வாயு பூதாம்
சிவாக்யமஞ்சஸ்த பதாரவிந்தாம்
சிவங்கரீம் சிவதூதிகாக்யாம்
ருகாரரூபாம் ப்ரணமாமி நித்யாம்

என்று கூறி, சிவதூதி நித்யா தேவியின் படத்துக்கோ யந்த்ரத்துக்கோ பூக்களைப் போடவும். பின்னர் சந்தன குங்குமத்தால் பொட்டு வைக்கவும்.

மேற்கூறிய நாமாவளியால் தேவிக்கு, அவளுக்கு உகந்த செவ்வரளிப் பூக்களால் அர்ச்சனை செய்து பின்னர் தூப தீபம் காட்டவும். தேவிக்கு உரிய நைவேத்யமான வெல்லம் சமர்பிக்கவும். (முடிந்தால் தேங்காய் பழம், வெற்றிலை பாக்கு நைவேத்யம் செய்ய வேண்டும்.) பின்னர் சிவதூதி தேவியின் காயத்ரியைக் கூறி கற்பூர ஆரத்தி செய்து பூக்களைப் போட்டு பிரார்த்தனை செய்யவும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar