|
முதல் பக்கம்>
இறைவழிபாடு> வடிவுடையம்மன் சுப்ரபாதம்!
|
|
வடிவுடையம்மன் சுப்ரபாதம்!
|
|
கடவுள் வாழ்த்து !
கடலோரம் துயில் கொள்ளும் மரகதயே உன்னை திடமாக எழுப்பிட ஐங்கரன் அருளாலே கைகுவித்து தினந்தோறும் அழைத்திடவே திரிபுரையே வடிவுடையே அபயகரங் கொண்டெம்மை அரவணைப்பாய்; அம்மா
திருப்பள்ளி எழுச்சி
அருட்புனலே திருவருளே வடிவுடை மரகதமே உன்னை விருப்புடனே பற்றினேன் நெஞ்செனும் மஞ்சத்தின் இருந்தினேன் பொறுப்புடனே அருள்வாயே மயங்கிய சிவனாரை காத்தவனே அருட்பார்வையால் அடியவன் சிறியவன் பிள்ளையை பார்ப்பவளே
வெறுப்பும் திகைப்பும் ஏதற்கோ என்மீது, பாவியெனை சிறப்புடன் வாழ்த்தியருள் சிவனாரின் மனையே சிவகாமி யுமையே பிறந்திட்டேன் உன்னருளால் வளர்ந்திட்டேன் இனியுள் பொறுப்பு விருப்பமுடன் விழித்தெழுவாய் எழுந்தருள்வாய் அம்மா !
உலகாளும் உமையவளே ஓங்காரப் பொருளானவளே கலையாவும் தந்தவளே அங்கயற் கண்ணி நீயே பலகாலும் பரவுகின்றோம் கணபதியைத் தொழுதோம் நிலையான வாழ்வருள விரித்தருள்வாய் விழித்தருள்வாய் !
அலை யாடும் வங்கக் கடலோரம் ஆதிபுரி வாழ்வே உயிர்க்கெல்லாம் உயிரான உமையவளே பார்வதியே பயிர் படைத்து பஞ்சபூதமாய் உருவான உண்மையவளே துயில் நீக்கி எமைகாக்க எழுந்தருள்வாய் அம்மா !
ஒற்றியூர் வாழ்வே உலகை(க்) காப்பவளே, ஆதி புற்றிடங் கொண்ட படம்பக்க நாதரின் நாயகியே பற்றினேன் பாதம் தயைசெய்வாய் தாமரைக் கண்ணியே வெற்றிதான் வாழ்விலே உன்னருள் கிடைத்திட்டால்
வண்டாக வந்துன்னை தேவரெல்லாம் வணங்கி கொண்டாடும் தெய்வமே பாலைவனத்தேனே பார்வதியே கண்மூடி தவமிருந்தாய் மாங்காட்டில் காமாட்சியாய் மண்மீது கருணை பொழிய கண்விழித்தருள்வாய் அம்மா !
ஆதியிலே சங்கரனோடு ஆடியது சொக்கட்டான் பாதியிலே சங்கரனார் கூறியதால் சொக்கிய தாய் மோதியது கிணற்றுக்குள் மூடியது வேதியன் தான்? போதித்தான் கௌறீசனாய் வந்தங்கே ஈசனே
சாதித்தாய் தனியாக நின்றந்த வடக்கு வாயிலிலே வாதிட்ட சிவனாரும் திருடனஞ் செய்துன்னை சேர்ந்திட்டான் மறந்தனையோ சிறுபிள்ளை என்னை சோதித்தது போதும் சுந்தரியே எழுந்தருள்வாய் அம்மா !
இராமகதை எழுதினான் கம்பனவன் நரசிம்மன் தாயுந்தன் சன்னதியில் அமர்ந்தே செய்தான் தேமதுர தமிழினிலே சங்கநாதஞ் செய்தான் பாதியிலே நிலவொளி மறைய, நரசிம்மன் வேதனை தீர்த்திடவே சுடரொளி காட்டிநீயும் இராமகதை முடித்து வைத்தாய் நரசிம்ம கம்பனுக்கு தேவியே வருவாய் கம்பனல்லநான் கடையேன் என்னை தேடியே வருவாய் எழுந்தருள்வாய் அம்மா !
ஏகபாத மூர்த்தியின் உருக் கண்டவளே ஏனிந்த மௌனம் எழிலார் கண்ணியே ஆமிந்த சாமியவர் அர்த்தநாரியானது யேன் போதாத காலமடி உனைவிட்டு சென்றாரோ ஆதார அரண் நீயே அரனார்க்கும் அறியாயோ வேதாகம விநோதன் பித்தன் சடையன்திரு நீலகண்ட தேவன் நிலமன் தானாக வந்தருள்வான் தாயே எங்களை காத்திட, எழுந்தருள்வாய் அம்மா !
அருட்பெருஞ்சோதி அண்ணல் வள்ளலார்க்கு அண்ணியாய் பெருங்கருணை தந்தவளே தயாபரியே தாயே என்றும் பொருட்செல்வம் அழிந்துவிடும் அருட்செல்வம் தந்து திருவுருவை காட்டி யென்னையும் ஆட்கொள்வாய் திருமாலின் சோதரியே வடிவுடைய மாணிக்கமே கடலமுதாய் காட்சி தந்தவளே கற்பகமே ஒளிச்சுடராய் வந்தெம்மை வாழ்விப்பாய் கலிதீர்க்கும் கருணையே கண்தீரந்து எழுந்தருள்வாய் !
அரனார் அன்பால் செல்வந் தொலைந்து தீபமேற்றிட கலியனார் குளத்து நீரை அகிலிலிட்டே எரித்தார் தீபம் மலைத்து நின்றனர் மற்றவர் ஆயினும் ஒரு நாள் வெறுத்து போனது தீபம் எரியாமல் தண்ணீரால் நில்லாது எரிவிக்க எண்ணெய் உயிர்க்கு உதிரம் போல் மெல்ல பழகினார் ரத்தம் எடுத்து எரிந்தது தீபம் மகிழ்ச்சியோ தங்கிடவில்லை மாய்த்திட உயிரை பணயம் என்றவர் முன்னே வந்தவளே எழுந்தருள்வாய் அம்மா !
பரமனின் நண்பன் சுந்தரன் காதல் கன்னி பரவை நாச்சியார்க்கு தூதாய் பரமனே செல்ல இடரின்றி இடப்பாகவுமையே உன்னருள் அன்று தொடர்ந்ததால் சாதித்தான் ஈசனும் அதனால்- மக நட்சத்திர மாசியிலே மகிழடி சேவை யென்றாய் மணக்கோலங் கொண்டவளே நீயும் நாணி எங்கு மறைந்துள்ளாய் மறையின் பொருளே வடிவுடை மாணிக்கமே எழுந்தருள்வாய் அம்மா !
பட்டினத்தார் வந்துன்னை வணங்கி பண்பட்டார் கட்டிவைத்த சோறுஞ் சொல்லித் தந்த வார்த்தையும் எத்தனை நாள் உன்னுடன் வருமென்று கேட்டார் சட்டியில் இருப்பதை எடுத்துண்பது இயற்கை கட்டியம் சொன்னேன் எனக்கந்த வாய்ப்பேயில்லை முட்டிமோதிய உன்னருள் வேண்டினேன் உமையே தட்டிக் கழித்திடல் தாயே உனக்கு அழகாமோ தட்டிக் கொடுத்திடவே, எழுந்தருள்வாய் அம்மா !
காலைக் கதிரவன் உன் விழியாகும் மாலைத் தண்மதி வாலைக் குமரிநீ உன்னருள் தந்து சாலை வனமாக்கு நாளை எண்ணிட வைத்தாய் நானுன் பிள்ளை இனி வேளை வந்த தென்ö றண்ணி என்னையும் காத்தருள் சூலை நோயால் நாவுக்கரசர் நமசிவாய சொன்னார் வாளை எடுத்த அடியார் சிவனார் வடிவால் மறந்தார் தாளை பிடித்த தனயன் என்னையும் சூலினி காளி தோளை தட்டி காலமுணர்த்திட எழுந்தருள்வாய் அம்மா !
நாயன்மார் நாவினில் சுழன்று நல்லதைச் செய்தாய் நானுமோர் பாவியோ சுந்தரி வந்தருள் என்னிதயம் தேடிடும் பார்வதி சங்கரி சம்புவின் மனைவி நீயே ஆடிடும் கூத்தும் அருள் அண்டத்தைக் காக்கும் வாடிய பயிராய் வதங்கிய நேரம்ம்தில் வான்மழையாய் தேடியே வந்தவள் தேவர்கள் தலைவியாம் தேவி நீயே ஓடிடும் என் மனதை ஒருநிலை படுத்தி உயர்த்தி வாழ்த்திட வருவாய் எழுந்தருள்வாய் அம்மா !
உலகச் சக்கரம் சுழலும் இன்பதுன்பம் தோன்றும் கலகம் கலக்கம் மனதை ஆட்டிப் பபடக்கும் விலகும் மாயை விருப்பு வெறுப்பும் உன்னருளால் பலரும் போற்றும் பவானி அருள்வாய் அபிராமி சிவகாமி சிந்தைமகிழ் பிறை சூடிய பெருமான் துணை பவரோக மறக்க உனையே துதிக்க மனமருள் இகபர சுகமருள் வடிவுடை திரிபுர சுந்தரி நீ சுகமருள் துயில் விடுத்து எழுந்தருள்வாய் அம்மா ! |
|
|
|
|