|
லக்ஷ லக்ஷ கின்ன தேவர் மனிதர் பூஜை செய்திடும் லக்ஷ பக்ஷி ஒலியிலே உந்தன் கரை விளங்குமே வசிஷ்ட உயர் பிப்பலாத கச்யபருக்குச் சுகமளிக்கும் (உன்னிரு) திருவடிக்கமலமே வணங்கினேன் நர்மதே.
சனத் குமார கஸ்யப அத்ரி நாரதர் முனி சூர்ய சந்த்ரநந்தி இந்தரனுக்கு நலமளிக்கும் நர்மதே முனிவர் பரமர் மனதில் வைத்து பூஜை செய்யும் தேவியே திருவடிக் கமலமே வணங்கினேன் நர்மதே.
லக்ஷலக்ஷ லக்ஷமான பாபநாசம் செய்திடும் ஜீவ ராசி முழுமைக்கும் புக்திமுக்தி உன் ப்ரவாகமே ப்ரம்ம விஷ்ணு சிவனுக்கு ஸ்தான சக்தி அளித்திடும் (உன்னிரு) திருவடிக்கமலமே வணங்கினேன் நர்மதே.
ஆஹா ஆனந்த சப்தமே சிவஜடாமுடி ஜீவமே கிராத சூழ, பிராமனாதி துரத்தரர்கள் பாபத்தை அனைத்து பிராணி மனித தேவர்க்கு சுகமளிக்கும் தேவியே (உன்னிரு) திருவடிக் கமலமே வணங்கினேன் நர்மதே.
மூன்று வேளை படித்திடும் பக்தர் நர்மதாஷ்டகம் துர்கதி மாளுமே சிவனருள்கை கூடுமே ரௌரவாதி மறுபிறப்பு நரகநிலைபோகுமே |
|
|