|
முதல் பக்கம்>
இறைவழிபாடு> நர்மதாஷ்டகம் (நர்மதை நதி)
|
|
நர்மதாஷ்டகம் (நர்மதை நதி)
|
|
ஓங்கி பொங்கி வந்திடும் கடலலை உன் தோற்றமே மரணபயம் போகுமே பாபஎண்ணம் நீங்குமே பூதபைசாச பயம் பகைவர் உள்ளம் நீக்கிடும் (உன்னிரு) திருவடிக்கமலமே வணங்கினேன் நர்மதே.
மீன்கள் ஆமை முதலைகள் எண்ணிலடங்கா ஜீவனும் சக்ரவாகப் பறவைகள் அனைத்தும் காக்கும் நர்மதே மீன்களுக்கும் தேவ பதவி அளிக்கும் தீர்த்தராஜனே (உன்னிரு) திருவடிக்கமலமே வணங்கினேன் நர்மதே.
கலகலவென ஒலியுடன் உலகப் பாவம் போக்கிடும் கம்பீர அபய நீரினால் பாபம் கஷ்டம் நீங்குமே மகரிஷிமுனி மார்க்கண்டேயருக்கு நீப்ரளயகால அடைக்கலம் (உன்னிரு) திருவடிக் கமலமே வணங்கினேன் நர்மதே.
சம்சாரப் பிறவி பயம் போக்கும் உந்தன் நீர்ப்ரவாகமே சௌகன மார்க்கண்டேய தேவர் உன்நீரினை அருந்தினர் பிறப்பு இறப்பு பயதுக்கம் விரைந்து விரைந்து போகுமே (உன்னிரு) திருவடிக்கமலமே வணங்கினேன் நர்மதே.
லக்ஷ லக்ஷ கின்ன தேவர் மனிதர் பூஜை செய்திடும் லக்ஷ பக்ஷி ஒலியிலே உந்தன் கரை விளங்குமே வசிஷ்ட உயர் பிப்பலாத கச்யபருக்குச் சுகமளிக்கும் (உன்னிரு) திருவடிக்கமலமே வணங்கினேன் நர்மதே.
சனத் குமார கஸ்யப அத்ரி நாரதர் முனி சூர்ய சந்த்ரநந்தி இந்தரனுக்கு நலமளிக்கும் நர்மதே முனிவர் பரமர் மனதில் வைத்து பூஜை செய்யும் தேவியே திருவடிக் கமலமே வணங்கினேன் நர்மதே.
லக்ஷலக்ஷ லக்ஷமான பாபநாசம் செய்திடும் ஜீவ ராசி முழுமைக்கும் புக்திமுக்தி உன் ப்ரவாகமே ப்ரம்ம விஷ்ணு சிவனுக்கு ஸ்தான சக்தி அளித்திடும் (உன்னிரு) திருவடிக்கமலமே வணங்கினேன் நர்மதே.
ஆஹா ஆனந்த சப்தமே சிவஜடாமுடி ஜீவமே கிராத சூழ, பிராமனாதி துரத்தரர்கள் பாபத்தை அனைத்து பிராணி மனித தேவர்க்கு சுகமளிக்கும் தேவியே (உன்னிரு) திருவடிக் கமலமே வணங்கினேன் நர்மதே.
மூன்று வேளை படித்திடும் பக்தர் நர்மதாஷ்டகம் துர்கதி மாளுமே சிவனருள்கை கூடுமே ரௌரவாதி மறுபிறப்பு நரகநிலைபோகுமே அழகு உடல் ஒளியுடன் சிவலோகம் சேருமே. |
|
|
|
|