|
சேரமன்னன் குலசேகர ஆழ்வார் திருமாலின் திகழும் கவுஸ்துபத்தின் அம்சமாக அவதரித்தார். இவர் இயற்றிய முகுந்த மாலா ஸம்ஸ்க்ருதத்தில் 40 பாடல்களாக ஸ்ரீமந்நாராயணனை குறித்து இசைக்கப்பட்டு வருகிறது. அந்த மாலையின் முத்துக்களை இங்கு காண்போம்.
1. முகுந்தனின் நாமத்தை எப்பொழுதும் ஜபிக்க வேண்டும். 2. தேவகி நந்தனுக்கு பல்லாண்டு பாடுதல். 3. திருமாலின் திருவடியை மறவாமல் இருக்க வேண்டும். 4. திருமால் எப்பொழுதும் தன் இதய தாமரையில் இருக்க வேண்டும். 5. திருமால் பக்தி ஒன்றே போதும். 6. தான் எந்த இடத்தில் இருந்தாலும், மரண காலத்திலும் திருமாலின் திருவடிகளை நினைத்திருக்க வேண்டும். 7. கண்ணனை இப்பொழுதே சரணடைய வேண்டும். 8. எப்பொழுதும் புன்முறுவல் பூக்கும் நந்தகோபன் திருமகனை நினைக்கிறேன். 9. பகவானே ஒரு அற்புத தடாகம். அதில் மூழ்கி தேஜஸாகிய ஜலத்தைப் பருகி ஸம்ஸாரம் என்னும் பாலைவனத்திலிருந்து நீங்க வேண்டும். 10. முராரியின் திருவடிகளே உயர்ந்த அமுதம். 11. ஸ்ரீதரனை நினைத்தால் யமபயம் நீங்கும். 12. ஸ்ரீமஹாவிஷ்ணுவே ஸம்ஸாரஸாகத்தில் இருக்கும் ஓடம். 13. இந்த ஸாகரத்திலிருந்து விடுபட நாராயணனை தியானிப்பாயாக. 14. கண்ணனின் திருவடித்தாமரையை ஓடமாக கருது. 15. மாதவனே, எத்தனை பிறவி எடுத்தாலும் உன்னையே பூஜை செய்வேன். 16. நாக்கே கேசவனை துதி செய், மனமே முராரியை பஜனை செய், கைகள் ஸ்ரீதரனை அர்ச்சனை செய், காதுகள் அச்சுதனைப் பற்றி கேள், கண்கள் கண்ணனைப் பார், மூக்கே முகுந்தனின் துளசியை நுகர். தலையே நாரணனை வணங்கு. 17. நாராயணனை மருந்தாக மனத்தில் அர்ச்சனை செய். 18. ஓம் என்னும் ப்ரணவத்தை ஸ்ரீமந்நாராயணனை கொண்டு ஜபிக்க வேண்டும். 19. விஷ்ணு எல்லா தெய்வங்களுக்கும், பஞ்சபூதங்களுக்கும் பெரியவன். 20. கண்ணனை வழிபட்டால் வாழ்க்கை நிறைவாகும். 21. கஜேந்திரனைக் காத்த வரதா உன்னைத் தவிர நான் யாரையும் அறியோம். 22. ஆயர்க்குலத்தில் தோன்றிய மணிவிளக்கே சிறந்த இரத்தினம். 23. நாக்கே - எப்பொழுதும் கண்ணனை ஜபி. 24. கண்ணனாகிய மருந்தை பருகி ஸம்ஸாரம் என்னும் நோயைப் போக்கு. 25. நாராயணனை நினைப்பது மட்டுமே நன்மைத் தரும். 26. முன்பிறவியில் லஷ்மிநாதனை நினைக் காதலால் கர்பவாசம் கொண்டேன். 27. நான் திருமாலின் அடியவர்க்டியவராக இருப்பேன். 28. அற்பமான செல்வத்தை விட்டு மாதவனை நினைப்பேன். 29. மன்மதனே என்னை விட்டு விலகு. ஏனெனில் சக்ரதாரியான விஷ்ணுவை நான் நினைத்திருக்கிறேன். 30. நாக்கே- எப்பொழுதும் நாராயணனை த்யானம் செய். 31. சரீரம் அழியக்கூடியவை அதனால் கோவிந்தனை ஜபம் செய். 32. திருமார்பனே நான் உன்னை பற்றி சிறிதளவே அறிவேன். 33. கண்ணா என்னை காப்பாற்றுங்கள். 34. புருஷனில் சிறந்தவனே என்னை காத்தருள வேண்டும். 35. எப்பொழுதும் நாரணனையே ஜபிப்பேன், பூஜிப்பேன், நினைப்பேன். 36. எப்பொழுதும் பகவந்நாமம் ஜபியுங்கள். 37. ஆண்டவனை மறக்காதீர்கள். 38. விஷ்ணுவே முக்தி அளிப்பவன். 39.பாற்கடலில் பள்ளி கொண்ட மாதவனுக்கு நமஸ்காரம். 40. குலசேகரனான நான் விஷ்ணுவின் மீது பக்தி கொண்டுள்ளேன்.
நமாமி நாராயண பாதபங்கஜம், கரோமி நாராயண பூஜநம் ஸதா! வதாமி நாராயண நாம நிர்மலம், ஸ்மராமி நாராயண தத்வமவ்யயம்!! |
|
|