|
1. வேதோ நித்யமதீயதாம் ததுதிதம் கர்ம ஸ்வநுஷ்டீயதாம் தேனேசஸ்ய விதீயதாமபசிதி: காம்யே மதிஸ்த்யஜ்யதாம்
பாபௌக: பரிதூயதாம் பவஸுகே தோஷோஸ்நு ஸந்தீயதாம் ஆத்மேச்சா வ்யவஸீயதாம் நிஜக்ருஹாத் தூர்ணம் விநிர்கம்யதாம்
2. ஸங்க: ஸத்ஸு விதீயதாம், பகவதோ, பக்தி: த்ருடாஸ்தீயதாம் சாந்த்யாதி: பரிசீயதாம், த்ருடதரம் கர்மாசு ஸந்த்யஜ்யதாம்
ஸத்வித்வான் உபஸ்ர்ப்யதாம், ப்ரதிதனம் தத்பாதுகா ஸேவ்யதாம் ப்ரஹ்மைகாக்ஷரமத்யதாம், ச்ருதிசிரோவாக்யம் ஸமாகர்ண்யதாம்
3. வாக்யார்த்தச்ச விசார்யதாம், ச்ருதிசிர: பக்ஷ: ஸமாச்ரீயதாம் துஸ்தர்காத் ஸுவிரம்யதாம், ச்ருதி மதஸ்தர்கோஸ்நுஸந்தீயதாம்
ப்ரஹ்மாஸ்மீதி விபாவ்யதாம் அஹரஹர்கர்வ: பரித்யஜ்யதாம் தேஹேஸ்ஹம் மதிருஜ்ஞயதாம் புதஜனைவர்வாத: பரித்யஜ்யதாம்
4. க்ஷுத்வ்யாதிச்ச சிகித்ஸ்யதாம், ப்ரதிதினம் பிக்ஷௌஷதம் புஜ்யதாம் ஸ்வாத்வன்னம் ந து யாச்யதாம், விதிவசாத்ப்ராப்தேன ஸந்துஷ்யதாம்
சீதோஷ்ணாதி விஷஹ்யதாம் ந து வ்ருதா வாக்யம் ஸமுச்சார்யதாம் ஓளதாஸீன்யமபீப்ஸ்யதாம் ஜனக்ருபா நைஷ்ட்டுர்ய முத்ஸ்ருஜ்யதாம்
5. ஏகாந்தே ஸுகமாஸ்யதாம், பாதரேசேத: ஸமாதீயதாம் பூர்ணாத்மா ஸுஸமீக்ஷ்யதாம், ஜகதிதம் தத்பாதிதம் த்ருச்யதாம்
ப்ராக்கர்ம ப்ரவிலாப்யதாம் சிதிபலான்னப்யுத்தரை:
ச்லிஷ்யதாம் ப்ராரப்தம் த்விஹ புஜ்யதாம் அதபரப்ரஹ்மாத்மனா ஸ்தீயதாம்
1) வேதத்தைத் தினமும் ஓதுங்கள். அது கூறுகிற கர்மாக்களைத் தவறாமல் கடைப்பிடித்து ஈசனை வழிபடுங்கள். மனதின் இச்சையை விட்டொழித்துப் பாவத்திலிருந்து விடுபடுங்கள். உலக சுகத்திலுள்ள தோஷத்தை உணர்ந்து எதிர்கொள்ளுங்கள். ஆத்மாவில் பற்றினைக் கூட்டி உண்மையான வீடுபேற்றைப் பெற முயலுங்கள்.
2) நல்லோர் இணக்கத்துடன் இறைவனிடம் திடபக்தி கொள்ளுங்கள்! சமம், தமம் முதலிய ஆத்ம குணங்களைப் பழகுங்கள்! திடமாகப் பிணைக்கிற கர்மபந்தத்தை விலக்குங்கள். சத்குருவை நாடி தினமும் அவருக்குச் சேவை செய்யுங்கள். ஓம் என்ற ஓரக்ஷரப் பொருளான பிரம்மத்தை வேண்டுங்கள். உபநிஷத வாக்கியங்களைக் கேளுங்கள்.
3) வேதாந்த மஹாவாக்கியப் பொருளை ஆராயுங்கள்! உபநிஷத்தின் கொள்கையைப் பின்பற்றுங்கள்! வீணான தர்க்கத்தைத் தவிர்த்து ஸ்ருதிகள் கூறும் உண்மையை அனுசரியுங்கள். (அஹம் பிரம்மாஸ்மி) நான் பிரம்மமாக உள்ளேன் என்று இடைவிடாது எண்ணுங்கள்! தினமும் தற்பெருமையைத் தவிருங்கள். உடலே நான் என்ற எண்ணத்தை விடுங்கள். அறிவாளிகளிடம் வாதத்தைத் தவிருங்கள்.
4) பசி எனும் நோய்க்குத் தகுந்த மருத்துவம் செய்யுங்கள். பிக்ஷையேற்று உண்ணுங்கள். விதி வசத்தால் கிடைப்பதல்லாமல், சுவையான உணவை நாடாதீர்கள். வெப்பம் குளிர்ச்சி என்ற வேறுபாடில்லாமல் நல்வார்த்தை பகருங்கள். ஒருவரிடம் <உதாசீனம், மற்றொருவரிடம் கருணை என்ற பாகுபாடின்றி, பற்றின்றி வாழுங்கள்.
5) தனிமையில் பிரம்மத்தில் உள்ளத்தைப் பதியுங்கள். பூரண ஆத்மாவை உள்ளத்தில் நன்கு காணுங்கள். அக்காட்சியால் வெளி உலகம் என்ன என்பதைக் காண்பீர்கள். முன்வினையைக் கரைத்திடுங்கள். பேரறிவின் துணையுடன் இனி வினைகளுடன் ஒட்டாதீர்கள். இந்த வாழ்வில் செயல்படத் தொடங்கிய வினையை அனுபவித்து பரபிரம்மமாகவே திளையுங்கள்.
(ஆதி சங்கரர் அருளியது) |
|
|