SS
சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
அனுமானே! அனுமானே!ராமபக்த அனுமானே!அனுமானே! அனுமானே!சீதாராம அனுமானே!அன்புக்கு அருளும் அனுமானே!ஆற்றல் மிக்க அனுமானே!அகிலம் காக்கும் அனுமானே!ஆஞ்ச நேயனே அனுமானே!அருள்வாய் நலமெல்லாம் அனுமானே!இன்னல் அகற்றிடும் அனுமானே!இனிமையாய் பேசிய அனுமானே!ஈடு இணையற்ற அனுமானே!ஈசனின் உருவே அனுமானே!ஈசனும் போற்றிய அனுமானே! (அனுமானே!.....)உண்மையின் உருவே அனுமானே!ஊக்கம் அளிக்கும் அனுமானே!எளிமையின் சின்னமே அனுமானே!எண்ணத்தில் தூயவன் அனுமானே!ஏற்றம் தருவாய் அனுமானே!ஒழுக்கத்தின் உறைவிடம் அனுமானே!ஓங்கி உயர்ந்த அனுமானே!பிரம்மச்சாரியே அனுமானே!பிரம்மிக்க வைத்த அனுமானே!துறவறம் பூண்ட அனுமானே!தூயவனாய் வாழ்ந்த அனுமானே!அறத்தைத் துறக்காத அனுமானே!அதர்மம் அழிக்கும் பெருமானே! (அனுமானே.....)சுயநலம் இல்லா அனுமானே!பிறர்நலம் விரும்பிய அனுமானே!பண்பின் உறைவிடம் அனுமானே!பாசத்தின் அடிமை அனுமானே!வியப்பின் குறியே அனுமானே!விண்ணவர் போற்றும் அனுமானே!அல்லவை தேயனும் அனுமானே!நல்லவை நடக்கனும் அனுமானே!அறச்செயல் செய்யனும் அனுமானே!வான் மழை பெய்யனும் அனுமானே!நிலமெல்லாம் செழிக்கனும் அனுமானே!நீ அதற்கு அருள்வாய் அனுமானே! (அனுமானே....)வாயு மைந்தனே அனுமானே!விண்ணில் பறந்த அனுமானே!நிலமகள் போற்றிய அனுமானே!கடலைக் கடந்த அனுமானே!நெருப்பை வைத்த அனுமானே!தீயவை பொசுக்கிய அனுமானே!அஞ்சும் நிறைந்த அனுமானே!அஞ்சும் போற்றிய அனுமானே!அஞ்சனை மைந்தா அனுமானே!அஞ்சா நெஞ்சனே அனுமானே!அச்சம் அகற்றுவாய் பெருமானே!கடமை ஆற்றிய அனுமானே!கண்ணியம் மிகுந்த அனுமானே!அறச்செயல் காத்த அனுமானே!அரக்கரை ஒடுக்கிய அனுமானே!தீரத்தின் மறுபெயர் அனுமானே!தினம் உன்னைத் தொழுவேன் அனுமானே!தீமை அகற்றுவாய் பெருமானே!மலையைக் கொணர்ந்த அனுமானே!மயக்கம் போக்கிய அனுமானே!உயிரைக் கொடுக்கும் அனுமானே!உயிரைக் காக்கும் அனுமானே!நோய்க்கு மருந்தே நீதானே!நோய்களைத் தீர்க்கும் அனுமானே!உனக்கு யார் நிகர்? பெருமானே!வல்லமை கொண்ட அனுமானே!வலிமைக்குக் கடவுளே அனுமானே!நல்லவை பல செய்த அனுமானே! - எமைநலமுடன் காப்பாய் அனுமானே!