|
அன்புடன் அருள் எனக்களிக்கவா.. பாற்கடலில் பள்ளிக் கொண்ட பரந்தாமா! பரிவுடனே ஆதிசேடன் துணை கொண்டவா! கருடாழ்வார் தனில்லேரி வலம் புரிபவா! கருங்கடல் போன்ற கார்மேக நிறம் கொண்டவா-கர்ணன்
கவச குண்டலத்தைப் பரித்து நின்றவா - நீர்! கர்ணன் ஆவியைப் பிரித்து நின்றவா! பார்த்தனைப் பாதுகாக்க துடித்து நின்றவா! பரிதி ஒட்டியே பாரதம் முடித்தவா! ஈரேழு லோகம் அளந்து நின்றவா! இரணியன் மார்பை பிளந்து நின்றவா - நர
சிம்ம அவதாரம் எடுத்து நின்றவா! சிறுவன் பிரகலாதனை காத்து நின்றவா! இராமாவதாரம் எடுத்து நின்றவா! இராவண சம்ஹாரம் முடித்து நின்றவா!
அம்மான் கம்சனை அன்று அழித்துவா! ஆயர்பாடியில் அகம் மகிழ்ந்தவா! மலை பிடுங்கி நந்தர் குலம் காத்தவா! மாதவா, யாதவா, வேதவா - கீதா போதகா!
அசோதை வீட்டில் தவழ்ந்து வளர்ந்தவா! அன்பரைக் காக்க அவதரித்தவா! அரக்கரை அழிக்கக் கருதரித்தவா! அன்புடன் அருள் எனக்களிக்கவா!
|
|
|