|
சித்தமொத்தனன் என்றோதும் திருநகர்ச் செல்வமென்ன உத்தமத்தொருவன் சென்னி விளங்கிய உயர்பொன்மௌலி ஒத்துமெய்க்கு உவமை கூர ஓங்கு மூவுலகத் தோர்க்கும் தத்தம் உச்சியின்மேல் வைத்தது ஒத்தெனத் தளர்வு தீர்ந்தார்
குறிப்பு: இந்தப் பாடலைப் பாடியவர் கம்பர். கம்பராமாயணத்திலுள்ள பாடல் இது. இதைப் படிக்கும்போது, ராமபிரானை மனதில் நினைக்க வேண்டும். திருவிளக்கின் முன் கற்கண்டு, பால் வைத்து பாடுவது இரட்டிப்பு பலன் தரும். ராமபிரானின் பட்டாபிஷேகப் பாடலான இதைப் படித்தால், ராமனின் தலையில் எப்படி கிரீடம் சூட்டப்பட்டதோ, அத்தகைய பெருமையை நமது குழந்தைகளும் பெற்று உயர்பதவியை அடைவார்கள் என்பது நம்பிக்கை. |
|
|