|
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும் மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய் மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள்தான் ஊமையோ அன்றிச்செவிடோ, அனந்தலோ? ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ? மாமயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.
குறிப்பு: இந்த கலியுகத்தில் வயதுக்கு வந்த பெண் குழந்தைகளை வளர்ப்பதும், பாதுகாப்பதும் மிகுந்த சிரமமாயிருக்கிறது. அவர்கள் பள்ளி, கல்லு õரி, பணிக்குச் சென்று திரும்பும் வரை பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டுள்ளனர். அவர்கள் பத்திரமா க சென்று திரும்பவும், அவர்களது மனதில் ஆன்மிக உணர்வு மேம்பட இந்தப் பாடல் வழிவகுக்கும். பெருமாள் மற்றும் ஆண்டாளை மனதில் எண்ணி இதைப் பாட ÷வண்டும். பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி இந்தப் பாடலை சனிக் கிழமைகளில் மூன்று முறை பாடுங்கள். இசையறிந்தவர்கள் ராகத்துடன் பாடலாம். பெருமாளுக்கு தயிர்சாதம் நிவேதனம் செய்ய வேண்டும்.
|
|
|