|
காவ்ய கண்ட வாசிஷ்ட கணபதி முனி இயற்றியது
1. பத்ரதர மூர்த்திம் பத்ரதம கீர்த்திம் ருத்ர தனயம் தம் காயத மஹாந்தம் நந
மங்களகரமான மூர்த்தியை, மங்களகரமான கீர்த்தியுள்ளவரை, ருத்திரனின் தனயனான பரம்பொருளின் மகிமையைப் பாடுவோம்.
2. ஜ்யோதிரிஹ ஸூக்ஷ்ம ஜ்வாலம் அதிதீப்தம் பாதி குலகுண்டௌ யோகிம் அனுஜாப்தம் ?
பிரகாசமாக உள்ள ஜோதி, சூட்சும ஜ்வாலையாக, யோகிகளுக்கு பிரியமாக குலகுண்டத்தில் ஒளிர்கிறது.
3. தம் கணபதிம் யோ விஸ்மரதி லோகே ஸந்ததமபாக்யோ மஜ்ஜதி ஸ: சோகே ?
கணபதி கடவுளே! உன்னை மறந்தவன் எப்போதும் பாக்கியமற்றவனாகச் சோகத்தில் மூழ்கி இருப்பான்.
4. சீத நக ஜாயா: ஸூனுரதி ஹ்ருத்யாம் பூரி கருணோ மே பூரயதி வித்யாம் ?
குளிர்ந்த மலையின் மகளின் (பார்வதி) புதல்வன் பூரண கருணையோடு இதயத்துக்கு உகந்த வித்யையை எனக்கு முழுவதுமாக அருள்வாராக!
5. வாரணமுகோ மே வாரயது கஷ்டம் ஸர்வமபி தேயாத் சர்வ ஸுத இஷ்டம் ?
யானை முகத்தோன், சிவ புத்திரன் கஷ்டங்களை நீக்கி, இஷ்டங்களை அளிப்பானாக!
6. நிர்ஜித ஜராதிம் நிர்தலித ரோகம் தந்தி வதனோமே வர்த்தயது யோகம் ?
வயோதிகத்தையும், மனோ வியாதிகளையும், உடல் உபாதைகளையும் விலக்கி, கஜமுகன் என் ஆன்மிக யோகத்தை வளர்க்கட்டும்!
7. ஹஸ்தி முக யாசே காடரஸ பக்த்யா ஆவிச விபோ மாம் திவ்ய நிஜ சக்த்யா ?
யானை முகத்தோனே! மிகுந்த பக்தியோடு யாசிக்கிறேன். உன் திவ்ய சக்தியோடு எனக்குள் ஆவிர்பவிப்பாயாக!
8. தேஹி நிஜ தேஜ: கிங்கர ஜனாய ஈச்வர கணானாம் பாரத ஹிதாய ?
ஈஸ்வர கணத்தைச் சேர்ந்த உன் சேவகனுக்கு பாரத தேச நலனுக்காக உண்மையாகச் சேவையாற் றும் சக்தியை அருள்வாய்!
9. ஸர்வத ஜனோண்யம் வாஞ்சதி ந முக்திம் தேச குசலாய ப்ரார்த்தயதி சக்திம் ?
எல்லாம் அளிக்கும் சுவாமி நீ! நான் முக்தி யைக் கேட்கவில்லை. தேச நலனுக்கு உழைக்கத் தேவையான சக்தியை அருளும்படி பிரார்த்திக்கிறேன். -தமிழில் : ராஜி ரகுநாதன் |
|
|