1. சுதா வர்ஷிண்யை நம; 2. -ஸ்ரீ நீலகண்ட தமிதே நம; 3. கால பாசன மோசின்யை நம; 4. கட்க தராயை நம; 5. பானபாத்ர ஹஸ்தாயை நம; 6. பாசாங்குச தாரிண்யை நம; 7. துர்ஜன சித்த பரிபாக லீலாயை நம; 8. வல்மீகஸ்தாயை நம; 9. மஹாமாயை நம; 10. முத்துமார்யை நம; 11. பந்நகா பரணாயை நம; 12. நீலகண்ட நாயிகாயை நம; 13. க்ஷீராப்தி ஸம்பவாயை நம; 14. விஷ பக்ஷகபதி ஸஞ்ஜீவின்யை நம; 15. அம்ரு தேசியை நம; 16. அம்ருத வர்ஷிண்யை நம; 17. ஜகஜ்ஜனன்யை நம; 18. யக்ஞேச வத்ஸலாயை நம; 19. நிம்பவாஸின்யை நம; 20. ஓம் சீதலா தேவ்யை நம;
கருணை பெற
கருணை வடிவே! கவின்மிகுத் தாயே! கவியமைக்க அருளை வழங்கிய அன்னையே! என்றும் அகமலர்ந்தென் மருளை யகற்ற மலர்ப்பதம் நாடினேன் மாதவத்தால் இருளைக் களைவாய்என் சீதளா! ஈவாய் இசை நயமே!
வளமை பெற
விளக்கில் ஒளியாய் விழிக்குள் மணியாய் விளங்கிடுவாய்! உளக்குறை நீக்கி உனதருள் கூட்டும் உமையவளே! வளத்தினைக் கூட்டிடும் சீதளா தேவியே! மாரியம்மே! இளநீரால் நீராட்ட இன்பத்தால் என்னுள் இனிக்கிறதே! |