SS சப்த மாதர் தியானம்! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சப்த மாதர் தியானம்!
சப்த மாதர் தியானம்!
சப்த மாதர் தியானம்!

பிராம்மி தியானம்

சதுர்புஜாம் சதுர்வக்த்ராம்
பீதமால்யாம் ப்ரோஜ்வலாம்

வரதாபய ஹஸ்தாம் ச ஸாக்ஷமாலாம் ஸகண்டிகாம்
ஜடாமகுட ஸம்யுக்தாம் ஹம்ஸவாஹன ஸுஸ்திதாம்
ஸர்வாபரண ஸம்யுக்தாம்
ப்ராஹ்மீம் த்யாத்வா பூஜயேத் ॥

நான்கு முகங்களையும் நான்கு கைகளையும் உடையவளும், மஞ்சள் நிற ஆடை, மாலை இவற்றால் மிகவும் பிரகாசிக்கின்றவளாயும், வரத, அபய முத்திரைகளைக் கைகளில் ஏந்தியிருப்பவளும், உத்திராக்க மாலையை அணிந்திருப்பவளும், கையில் மணியைத் தரித்திருப்பவளும் ஜடா மகுடத்தைக் கொண்டவளும், அன்ன வாகனத்தில் அமர்ந்திருப்பவளும், எல்லாவித ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருப்பவளுமான பிராம்மி தேவியைத் தியானம் செய்து பூஜிக்கிறேன்.

மாகேசுவரி தியானம்

ஏகவக்த்ராம் த்ரிநேத்ராம் ச மஹாதேவீம் சதுர்புஜாம்
ஜடாமகுட ஸம்யுக்தாம்

சுக்லவர்ணாம் ஸுசோபிதாம்
வரதாபய ஹஸ்தாம் தாம் ம்ருகம் டக்காம் ச தாரிணீம்
வ்ருஷவாஹன ஸமாரூடாம்
வந்தே மாஹேச்வரீம் சுபாம் ॥

ஒரு முகம், மூன்று கண்கள், நான்கு கரங்கள் கொண்டவளும், ஜடாமகுடத்தைத் தரித்திருப்பவளும், வெண்மை நிறத்துடன் மிக அழகாக ஒளிர்பவளும், வரத, அபய முத்திரைகளைக் கொண்டவளும், மான், உடுக்கை இவற்றைக் கைகளில் ஏந்தியிருப்பவளும், வ்ருஷப வாகனத்தில் அமர்ந்திருப்பவளும், மகாதேவியும் மங்கள வடிவினளும் ஆன மாகேஸ்வரியை (மகேசுவரி) தியானம் செய்து பூஜிக்கிறேன்.

கௌமாரி தியானம்

ஏகவக்த்ராம் த்விநேத்ராம் ச சதுர்புஜ ஸமன்விதாம்
ஜடாமகுட ஸம்யுக்தாம்

நீலவர்ணாம் ஸுயௌவனாம்
வரதாபய ஹஸ்தாம் தாம் வஜ்ரம் சக்திம் ச தாரிணீம்
ஸர்வலக்ஷண ஸம்பன்னாம் கௌமாரீம் தாம்
விபாவயேத் ॥

ஒரு முகம், இரண்டு கண்கள், நான்கு கைகள் உடையவளும், ஜடாமகுடத்தை அணிந்திருப்பவளும், நீலநிற மேனியை உடையவளும், இளம் வயதுடையவளும், வரத, அபய முத்திரைகளுடன் வஜ்ராயுதம், சக்தி (வேல்) ஆயுதம் இவற்றைக் கைகளில் கொண்டவ
ளும், சாமுத்ரிகா லக்ஷணங்கள் யாவும் ஒருங்கே அமையப் பெற்றவளுமான கௌமாரி தேவியை தியானிக்கிறேன்.

வைஷ்ணவி (நாராயணி) தியானம்

ஏகவக்த்ராம் த்விநேத்ராம் ச சதுர்புஜ ஸமன்விதாம்
வரதாபயகராம் ச்யாமாம் சங்கம் சக்ரம் ச தாரிணீம்

நவயௌவன ஸம்பன்னாம்
ஸ்ரீமத் கருட வாஹனாம்
ஸர்வலக்ஷண ஸம்பன்னாம் வைஷ்ணவீம்
தேவிகாம் பஜே ॥

ஒரு முகம், இரண்டு கண்கள், நான்கு கைகள் உடையவளும், அபய,வரத முத்திரை, சங்கம் (சங்கு), சக்கரம் இவற்றைக் கைகளில் ஏந்தியவளும், இளம் வயதுடையவளும், கருட வாகனத்தில் அமர்ந்திருப்பவளும், சாமுத்ரிகா லக்ஷணங்களை ஒருங்கே அமையப் பெற்ற வைஷ்ணவீ தேவியை வணங்குகிறேன்.

வாராகி தியானம்

ஏகவக்த்ராம் த்விநேத்ராம் ச சதுர்புஜ ஸமன்விதாம்
க்ருஷ்ணாம்பரதராம் தேவீம் வஜ்ர சக்ரஸம்யுக்தாம்

ஹலமுஸல ஹஸ்தாம் தாம் வராபயகராம்புஜாம்
ஸிம்ஹவாஹன ஸமாரூடாம் கிரீட மகுடோஜ் வலாம்
ஸர்வாலங்கார ஸம்பன்னாம் வாராஹீம் பூஜ
யேத் புத:॥

ஒரு முகம், இரண்டு கண்கள், நான்கு கைகள் இவற்றைப் பெற்றிருப்பவளும், கருப்பு நிற ஆடையை உடுத்தியவளும், வஜ்ரம், சக்கரத்தை ஏந்தியிருப்பவளும், உலக்கை, தடி ஏந்தியவளும், வரத அபய முத்திரைகளைத் தனது தாமரைப் போன்ற கைகளில் தாங்கியவளும், சிம்மவாஹனத்தில் பவனி வருபவளும், கிரீட மகுடத்தை அணிந்து ஒளிர்பவளும், சகல அலங்காரங்களுடன் விளங்குபவளும் சான்றோர்களால் பூஜிக்கப்படும் வாராகி தேவியை பூஜிக்கிறேன்.

இந்திராணி (மாகேந்திரி) தியானம்

ஏகவக்த்ராம் த்விநேத்ராம் ச சதுர்புஜ ஸமன்விதாம்
ஸரத்ன மகுடோபேதாம் ஹேம வர்ண ஸ்வரூபிணீம்

வராபயகராம்போஜாம்
வஜ்ரம் சக்திம் ச தாரிணீம்
மாஹேந்த்ரீம் மாதரம் வந்தே
கஜவாஹன ஸம்ஸ்திதாம்॥

ஒரு முகம், இரண்டு கண்கள், நான்கு கைகளை உடையவளும், ரத்தினங்களால் ஆன மகுடத்தை அணிந்திருப்பவளும், பொன்னிற மேனியை உடையவளும், வரத அபய முத்திரைகளைத் தனது தாமரைப் போன்ற கைகளில் தாங்கியவளும், வஜ்ராயுதம், சக்தி ஆகியவற்றைக் கரங்களில் கொண்டவளும், யானை வாகனத்தின் மீது வீற்றிருப்பவளுமான மாகேந்திரி தாயை இந்திராணியை) பூஜிக்கிறேன்.

சாமுண்டா (சாமுண்டி)

சதுர்புஜாம் த்ரிநேத்ராம் ச காலமேக ஸமப்ரபாம்
தம்ஷ்ட்ராகராலவதனாம் வ்யாக்ர சர்மாம்பரோஜ்வலாம்

ஸகட்காம்சூல ஹஸ்தாம் ச கபாலாபயதாரிணீம்
கிங்கிணீ மாலயா யுக்தாம் கரண்ட மகுடான்விதாம்
சிரோமாலா ஸமாயுக்தாம் ப்ரேத வாஹன
ஸம்ஸ்திதாம்  பீனஸ்தனீம் யௌவனாம் ச
சாமுண்டாம் பாவயேத் ஸதா॥

நான்கு கைகள், மூன்று கண்கள் ஆகியவற்றை உடையவளும், கருத்த மேகம் போன்ற மேனியை உடையவளும், கடைவாய்ப் பல் நீட்டிக் கொண்டிருக்கும் முகமுடையவளும், புலித்தோலை ஆடையாகக் கொண்டு ஒளிர்பவளும், கத்தி, சூலம், கபாலம், அபய முத்திரை இவற்றைக் கைகளில் பெற்றிருப்பவளும், கரண்ட மகுடத்தைத் தரித்திருப்பவளும், சிறிய மணிகள் மற்றும் தலைகளால் ஆன மாலையை அணிந்திருப்பவளும், ப்ரேத (சவம்) வாகனத்தின் மீது வீற்றிருப்பவளும், பருத்த முலைகளும் இளைய வயதுடையவளுமான சாமுண்டியை எப்போதும் தியானிக்கிறேன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar