SS
சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
1. மலர் மேல் உறை மாதவி மார்பகத்தேகுலவும் ஒரு குங்கும நீலவனேமலர் தாமரைக் கண்ணுடை நாயகனேநலமே பெறக் காத்தருள் வேங்கடவா2. மறை நான்முக ஐமுக ஆறுமுகப்பெரியோர்களின் சீர்மிகு தலைமணியேசரணாகதி யென்பவர்க்கன்புறவேபெரும்பேர் நிதி காத்தருள் வேங்கடவா3. பொது எல்லைகள் தாண்டிய பாவமதைநிதமே புரிந்தின்னமும் புரிவதிலேஅதிவேகமே கொண்டுள எங்களையேஇதமாகவே காத்தருள் வேங்கடவா4. அருள் ஈ வதில் ஆர்வமாய் நீ அடியார்வரம் வேண்டியதை விட ஈபவனேபெரும் நான்மறை ஓதிடும் ஓர் பொருளேதிருமார்பனே காத்தருள் வேங்கடவா5. நயம் சேர் இசைக்குங் குழல் இன்னமுதால்வயமாயிடுங் கோபியர் சூழ்பவனேமயல் காமனின் பேரெழில் கோடி பெரும்முயல்வே யெமைக் காத்தருள் வேங்கடவா6. பலர் போற்றிடும் பேரருள் மூர்த்தியனேநலமே புணர் சீதையின் நாயகனேதளிர் மேனியனே ஒரு வில்லவனேஒளியே எமைக் காத்தருள் வேங்கடவா7. இருதாமரை பூத்திடும் சந்திரனாய்திரு சீதையின் கேள்வனாய் நின்றவனேஇருள் ராவணனுக்கொரு சூரியனேசரணா யினோம் காத்தருள வேங்கடவா8. நெறியாரடங்கின் உறை எளியவனேதிருத்தாயினைத் தேவியாய்ப் பெற்றவனேபிறர் யாருடை தாளையும் வணங்கிலமேபெரியோய் எமைக் காத்தருள் வேங்கடவா9. திருவேங்கடேசா நாதனே நாதன் நீஒரு வேங்கடேசா உன்னையே எண்ணினோம்பெருவேங்கடேசா நின்னையே நின்னையேஅருள் வேங்கடேசா அருள் வேங்கடவா 10. நெடுநாள் வரை யாம் உனை தொழுவதற்கேமுடியாமையால் இன்றுனைத் தொழப் புரிந்தோம்அடி போற்றிடும் நித்தியர்க்கருள்வது போல்அடியேமையும் காத்தருள் வேங்கடவா11. அறியாமையால் புரி தீவினை புரியாதுளத் தற நீக்கிடுபொறுத்தே அருள் பொறுத்தே அருள் பெருமாமணி வேங்கடவா