SS
சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
வருவாய் வருவாய் கோவிந்தாவரணும் வரணும் கோவிந்தா (வருவாய்)நலமே செய்ய கோவிந்தாவளமே தந்திட கோவிந்தா (வருவாய்)அறமே வளர்க்க கோவிந்தாதர்மம் நிலைக்க கோவிந்தா (வருவாய்)பண்பை பெருக்க கோவிந்தாஅன்பை பெருக்க கோவிந்தா (வருவாய்)சொல்வளம் தந்திட கோவிந்தாசெல்வமும் நல்கிட கோவிந்தா (வருவாய்)மனநலம் காத்திட கோவிந்தாஉடல் நலம் பேணிட கோவிந்தா (வருவாய்)மழைவளம் சிறக்க கோவிந்தாபயிர் வளம் தழைக்க கோவிந்தா (வருவாய்)நல்லவை செய்யவே கோவிந்தாஅல்லவை போக்கவே கோவிந்தா (வருவாய்)வல்லமை தந்திட கோவிந்தாபுலமை அருளிட கோவிந்தா (வருவாய்)பொய்மை அகற்றிட கோவிந்தாஉண்மை நிலைத்திட கோவிந்தா (வருவாய்)வறுமை நீங்கவே கோவிந்தாஏழ்மை அகற்றவே கோவிந்தா (வருவாய்)கல்வியை தந்திட கோவிந்தாகலையும் அருளிட கோவிந்தா (வருவாய்)கூப்பிட்ட குரலுக்கு கோவிந்தாகும்பிட்ட பக்தனுக்கு கோவிந்தா (வருவாய்)கலங்காத நெஞ்சம் தர கோவிந்தாகலங்கரை விளக்கமாய் கோவிந்தா (வருவாய்)ஞானம் அருளிட கோவிந்தாஅஞ்ஞானம் நீங்கிட கோவிந்தா (வருவாய்)ஒற்றுமை வளர்ந்திட கோவிந்தாவேற்றுமை மறந்திட கோவிந்தா (வருவாய்)அபயக் கரமே கோவிந்தாபாதமே தொழுதேன் கோவிந்தா (வருவாய்)மலரின் மணமே கோவிந்தாகனியின் சுவையே கோவிந்தா (வருவாய்)தேனினும் சுவையே கோவிந்தாதெவிட்டாத அமுதமே கோவிந்தா (வருவாய்)இன்மொழி பேசி கோவிந்தாநல்லாசி நல்கும் கோவிந்தா (வருவாய்)தாயும் தந்தையும் கோவிந்தாஎல்லாம் நீயே கோவிந்தா (வருவாய்)நாமங்கள் சொல்லிட கோவிந்தாபாவங்கள் விலகுமே கோவிந்தா (வருவாய்)நெடியவனே திருமாலே கோவிந்தாஅடியோரை வாழ்த்திடும் கோவிந்தா (வருவாய்)கீதையைத் தந்தவனே கோவிந்தாகோதை நாயகனே கோவிந்தா (வருவாய்)திருமலை வேங்கடவா கோவிந்தாதிருவருள் புரிவாய் கோவிந்தா (வருவாய்)ராமசந்திரா கோவிந்தாசீதா ராமா கோவிந்தாராதா கிருஷ்ணா கோவிந்தாராமா கிருஷ்ணா கோவிந்தா (வருவாய்)