|
முதல் பக்கம்>
இறைவழிபாடு> ஜெய ஜெய ஸ்ரீராமகிருஷ்ணா!
|
|
ஜெய ஜெய ஸ்ரீராமகிருஷ்ணா!
|
|
கல்பதருவான பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரையும் அவருடைய துறவறச் சீடர்களையும் பக்தர்களையும் அவர் லீலை புரிந்த இடங்களையும் போற்றும் துதி.
ஜய ஜய ராமகிருஷ்ண புவன மங்கல ஜய மாதா ச்யாமா ஸுதா அதி நிரமல ஜய விவேகானந்த பரம தயால ப்ரபூர மானஸ ஸுத ஜய ஸ்ரீராகால
உலகத்திற்கு மங்களத்தை வழங்கும் ஸ்ரீராமகிருஷ்ணருக்குப் போற்றி போற்றி! சியாம சுந்தரியின் மகளும் தூய்மையின் சிகரமுமான அன்னைக்குப் போற்றி! எல்லையில்லாக் கருணை நிறைந்த சுவாமி விவேகானந்தருக்குப் போற்றி! ஸ்ரீராமகிருஷ்ண பிரபுவின் மானஸ புத்திரனான ஸ்ரீராகாலுக்குப் (பிரம்மானந்தர்) போற்றி!
ஜய ப்ரேமானந்த ப்ரேமமய கலேவர ஜய சிவானந்த ஜயலீலா ஸஹசர யோகீ யோகானந்த ஜய நித்ய நிரஞ்சன ஜய சசீ குருபதே கத தனுமன
இறைவனின் பிரேமை மயமான பிரேமானந்தருக்குப் போற்றி!
கடவுளின் அவதார லீலையில் உடன் வந்திட்ட சிவானந்தருக்குப் போற்றி!
யோகியான யோகானந்தருக்கும் என்றும் தூய்மையான நிரஞ்சனானந்தருக்கும் போற்றி!
குருவின் பாதத்தில் உடலையும் மனதையும் அர்ப்பணித்திட்ட சசி எனும் ராமகிருஷ்ணானந்தருக்குப் போற்றி!
ஸேவாபர யோகீவர அத்புத ஆனந்த அபேத ஆனந்த ஜயகத மோஹபந்த யோகரத த்யாகவ்ரத துரீய ஆக்யாத சரத ஸுதீர சாந்த யேன கணநாத
சேவையில் ஆழ்ந்த சீர்மிகு யோகி அத்புதானந்தருக்குப் போற்றி!
மாயைத் தளைகளிலிருந்து விடுபட்ட அபேதானந்தருக்குப் போற்றி!
தியாகம் எனும் சபதம் ஏற்று யோகத்தில் எப்போதும் திளைத்த துரியானந்தருக்குப் போற்றி!
ஸ்ரீவிநாயகரைப் போன்று எப்போதும் நிலைத்த அமைதியுடைய சாரதானந்தருக்குப் போற்றி!
ஜீவே சிவ ஸேவாவ்ரத கங்காதர வீர ஜய ஸ்ரீவிஞ்ஞானானந்த ப்ரசாந்த கம்பீர ப்ரவீண கோபால மாத்ரு ஸேவா பராயண ஸாரதா ஸாரதாபதே கதப்ராணமன
மனிதச் சேவையில் மகேசனை எப்போதும் கண்ட கங்காதர எனும் சுவாமி அகண்டானந்தருக்குப் போற்றி!
மிக ஆழ்ந்த அமைதியும் கம்பீரமும் கொண்ட ஸ்ரீவிஞ்ஞானானந்தருக்குப் போற்றி!
அன்னையின் சேவையில் ஆழ்ந்து திளைத்திட்ட கோபால் எனும் அத்வைதானந்தருக்குப் போற்றி!
வாழ்வையும் மனதையும் தூய அன்னையின் சேவையில் அர்ப்பணித்த ஸாரதா ப்ரசன்ன எனும் திரிகுணாதீதானந்தருக்குப் போற்றி!
பாலக சரித்ர ஜய சுபோத சரல நாகவர தியாகவீர விவேக ஸம்பல கதாம்ருத வரிஷண கௌர ஜலதர கிரீச பைரவ ஜய விச்வாஸ ஆகார
குழந்தையைப் போன்றவரும், அணுகுவதற்கு எளிமையானவருமாகிய சுபோதானருக்குப் போற்றி!
தியாகத்தையும் விவேகத்தையும் செல்வமாகக் கொண்ட நாகமஹாசய எனும் வீரனுக்குப் போற்றி!
வெண்மேகம் போன்றவரும் குருதேவரின் அமுத மொழிகளைத் தந்திட்டவருமாகிய மகேந்திரநாத் குப்தருக்குப் போற்றி!
தனது குருவிடம் அசையாத நம்பிக்கை கொண்ட பைரவரான கிரீஷுக்குப் போற்றி!
ராமக்ருஷ்ண தாஸ தாஸ ஜய ஸபாகார ராமக்ருஷ்ண லீலாஸ்தான ஜய பார பார ராமக்ருஷ்ண நாம ஜய ச்ரவண மங்கல பக்த வாஞ்சித ஜய சரண கமல
ராமகிருஷ்ணரின் அடியார்களுக்கும் அவர்களுடைய அடியார்கள் யாவருக்கும் போற்றி! ஸ்ரீராமகிருஷ்ணர் லீலை புரிந்த எல்லா இடங்களுக்கும் போற்றி! கேட்டவர்களுக்கு சகல மங்கலங்களையும் அருளும் ஸ்ரீராமகிருஷ்ணரின் திருநாமத்திற்குப் போற்றி! பக்தர்களின் விருப்பங்களுக்கு வரமளிக்கும் அந்தத் தாமரைப் பாத மலர்களுக்குப் போற்றி!
|
|
|
|
|