|
கீதா சாஸ்த்ரம் (ஆத்மாவுக்கும் உடலுக்கும் உள்ள உறவு)
வாஸாம்ஸிஜீர்ணானி யாத விஹாய நவானி க்ருஹ்ணாதி நரோபராணி ததா சரீராணி விஹாய ஜிர்ணான் யன்யானி ஸம்யாதி நவாணி தேஹி
வாஸாம்ஸி - வஸ்திரங்களை, ஜீர்ணானி - ஜீரணமான, யாதா விஹாய - எப்படி நீத்து விட்டு, நவானி க்ருஹ்ணாதி- புதியதை எடுத்துக் கொள்கிறானோ, நர-மனிதன், அபராணி - மற்றவைகளை, ததா சரீ ராணி - அப்படியே சரீரங்களை, விஹாய ஜீர்ணானி - நீத்துவிட்டு ஜீரணமாய்போன, அன்யானி - மற்றவைகளை, ஸம்யாதி - அடைகிறான். நவானி தேஹி - புதிய தேகத்தை.
ஒருவன் கிழிந்து போன ஆடைகளை கழற்றி எரிந்து விட்டு புதிய ஆடைகளை அணிவது போல், உடலில் உறையும் ஆன்மாவும் நைந்து போன உடலை உதறி எறிந்து விட்டு வேறு புதிய உடலில் நுழைகிறது.
கருத்து: ஆத்மாவும் சரீரமும் (உடல்) வெவ்வேறானவை என பல கோணங்களில் சொல்லப்பட்டுள்ளது. உடல் தேய்ந்த பின் ஆத்மா வேறோடு உடலை எடுக்கிறது. உடல் உறுதியுடன் இருக்கும்போதே ஆத்மாவை உணர ஆத்ம சாதனம் பழக வேண்டும். உடலற்ற தன்மையை அடையும் வரை ஆத்மா தேய்ந்த உடலை மாற்றுவது தொடர்கிறது. ஆத்மா அழியாதது, தேகம் அழிய கூடியது. தேகாதி பொய் எனவே தேர்ந்த உபசாந்தருக்கு மோகாதி உண்டோ மொழியாய் பராபரமே
- தாயுமானவர். |
|
|