|
வயல்களில் பயிர்களை பாதுகாக்க அத்தி மரத்தின் கீழ் பிள்ளையாரை வைத்து வழிபடும் வழக்கம், நம் முன்னோர்களிடம் உண்டு. அறுவடை முடிந்தபின் குடியானவர்கள். அந்தப் பிள்ளையாருக்குச் செய்யும் பூஜையை விவரிக்கும் பாடல்.
பூவாம் துளசி பிள்ளையாருக்கு சாத்த வெள்ளியரளி மாலை வேலவருக்கு சாத்த காசரளிமாலை காத்தவனுக்கு சாத்த வெள்ளைபிள்ளையாருக்கு நல்லெண்ணெயாம் காப்பு
ஒடு முச்சும் தேங்காய் உடைப்பேன் பிள்ளையாருக்கு பால் இளநி தேங்காய் நான் படைப்பேன் பிள்ளையாருக்கு கொத்தோடு மாங்காய் குலை நிறைந்த தேங்காய் அச்சோடு வெல்லம் ஆலை வெல்லம் நூறு
கொப்பரையாம் பாவு ஒப்புதமாம் வேறு தாரோட வாழை தலை வாழை நூறு காயோடு வாழை கரு வாழை நூறு பூனை தலை போல பொரி உருண்டை நூறு
எலித்தலை போல எள்ளுருண்டை நூறு ஆனைக்காது போல அதிரசங்கள் நூறு தட்டோடு மாலை தண்டமாலை நூறு கொத்தோடு மாலை கொண்ட மாலை நூறு
அத்தனையும் சேர்ந்து அமோகமாம் பூஜை சித்தி விநாயகனும் சினம் தணிந்தே வருவார் முத்தி அருள் புரிவார் முச்சூடும் வரம் கொடுப்பார் சக்தியுள்ள எங்கள் முன்னோர் அத்திமரப் பிள்ளையாரே! |
|
|