|
சிவபெருமானின் அம்சமான பைரவர், எல்லாவித பயங்களையும் போக்குபவர். உயரத்தைக் கண்டால் அச்சம், இருட்டினால் பயம் இப்படி விதவிதமான பயநோய்களால் பாதிக்கப்பட்டு எப்போதும் ஒருவித அச்சத்துடனேயே இருப்பவர்கள், பைரவரை மனதால் நினைத்து பூஜை அறையில் தீபம் ஏற்றிவைத்து இந்தத் துதியினை தினமும் சொல்லிவந்தால், நிச்சயம் நல்ல பலன் கிட்டும். அஷ்டமி தினம் ஒன்றில் பைரவருக்கு தயி ர்சாதம் நிவேதனம் செய்து அதனை பிறருக்கு விநியோகம் செய்வது நல்லது.
கறையணி கண்டதத் தம்மான் கருத்தினிலே தோன்றினானை
மறையணி பூணுவானை மழுவொடு சூலத் தானை
குறையணி அகந்தையாளர் குணத்தினை அடக்குவானை
சிறையறு வடுகன் தாளைச் சிந்தையில் வாழ்த்துவோமே!
திருவுறைச் சொல்லுமாகித் தெறிமனம் பொருளுமாகி
வருபொருட் செல்வம் ஞானம் வளர்புகழ் தானேயாகிப்
பெருவினை அகல நாளும் பிதற்றுவார் உள்ளே தோன்றும்
திருவினை, வயிரவதேவை திருந்தடி வாழ்த்துவோமே!
புலரிதன் கதிர்களாகிப் புவிக் கெலாம் ஒளியானானை
மலரினை மலர்த்துவானை உலககெலாம் ஆகி வேறாய்
உயிருடன் ஒன்றுவானை நிலமதில் வயிரவன் தாள் நினைந்து நாம் வாழ்த்து வோமே! |
|
|