வாடிய பயிரைக் கண்டபோதே வாடிய வள்ளலார் ராமலிங்க அடிகள் நோயுற்ற மனிதர்தம் பிணிபோக்கிட வைத்தீஸ்வரன் கோயில் வைத்யநாத சுவாமியை வேண்டிப் பாடிய வைத்யநாத பதிகம் இது. இதனைச் சொல்வதால் நோய்கள் யாவும் நீங்கும். நலம் பெருகும்.
உண்டதே உணவுதான் கண்டதே காட்சி இதை உற்றறிய மாட்டார்களாய்
உயிருண்டு பாவபுண்ணிய முண்டு வினைகளுண்டுறு பிறவி உண்டு துன்பத்
தொண்டதே செயுநரகவாதை உண்டு இன்பமுறு சொர்க்க முண்டிவையும் அன்றித்