|
உலக உயிர்கள் உடல்நலத்தோடு வாழவேண்டும் என்பதற்காகவே மகாவிஷ்ணு எடுத்த அவதாரம், தன்வந்திரி. அதனால்தான், மருந்து தீர்க்காததையும் மகாவிஷ்ணு தீர்த்துவைப்பார் என்பார்கள்.
எத்தகைய கடுமையான பிணியாக இருந்தாலும் சிறிது தீர்த்தத்தை எடுத்து முன்னால் வைத்துக்கொண்டு, தன்வந்திரி மந்திரத்தை உச்சரித்து, (ஜபித்து) வேண்டிக்கொண்டுவிட்டு, அந்தத் தீர்த்தத்தை சிறிது தெளித்தாலோ அல்லது உள்ளுக்குக்கொடுத்தாலோ உடல்நலம் விரைவில் சீராகும் என்பது நிச்சயம் என்கின்றன புராணங்கள்.
உலகத்துக்கே மருந்தாக விளங்கும் தன்வந்திரி பகவானைப் போற்றிடும் இந்த துதிகளைச் சொல்வது ஆயுள், ஆரோக்யம் வளர்ச்செய்யும் என்பது நிச்சயம்.
ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்த்ரயே அமுதகலச ஹஸ்தாய
சர்வாமய நாசநாய த்ரைலோக்ய நாதாய ஸ்ரீமகாவிஷ்ணவே நமஹ
பாற்கடலில் அவதரித்த பரந்தாமா போற்றி
வசுதேவர் குலக்கொழுந்தே வாசுதேவா போற்றி
அமுதகலசம் ஏந்திவந்த அச்சுதனே போற்றி
வினைநோய்கள் தீர்த்து வைப்பாய் விஸ்வரூபா போற்றி
மூவுலகும் காக்கவந்த முகுந்தனே போற்றி
பிணியாவும் தீர்த்துவைக்கும் பெருமாளே போற்றி
மண்ணுயிரைக் காக்கின்ற மகாவிஷ்ணு போற்றி
தண்ணருளால் நோய் தீர்க்கும் தன்வந்த்திரியே போற்றி! |
|
|