|
யா வேதாந்தார்த்த தத்வைக ஸ்வரூபா பரமார்த்தத: நாம ரூபாத்மனா வ்யக்தா ஸா மாம் பாது ஸரஸ்வதீ
உண்மையில் வேதாந்தம் உணர்த்தும் ஒன்றேயான தத்துவ வடிவில் விளங்குபவளும், பெயர் மற்றும் உருவங்களாகத் தோன்றுபவளுமான சரஸ்வதிதேவி என்னைக் காத்தருளட்டும்!
யா ஸாங்கோபாங்க வேதேஷு சதுர்ஷ்வேகைவ கீயதே அத்வைதா ப்ரஹ்மண: சக்தி: ஸா மாம் பாது ஸரஸ்வதீ
அங்கங்களும், உப அங்கங்களும் கூடிய நான்கு வேதங்களிலும் யார் இரண்டற்ற ஒன்றேயானவள் என்று போற்றப்படுகிறாளோ, அந்த பிரம்மத்தின் சக்தியாகிய சரஸ்வதி என்னைக் காத்தருளட்டும்!
யா வர்ண பத வாக்யார்த்த ஸ்வரூபேணைவ வர்த்ததே அனாதிநிதனானந்தா ஸா மாம் பாது ஸரஸ்வதீ
எழுத்து, சொல், வாக்கியம், பொருள் ஆகியவற்றின் வடிவில் திகழ்பவளும், முதல், முடிவு, எல்லை என்று எதுவும் அற்றவளுமான சரஸ்வதி தேவி என்னை ரட்சிக்கட்டும்!
அத்யாத்மமதிதைவம் ச தேவானாம் ஸம்யகீச்வரீ ப்ரத்யகாஸ்தே வதந்தீ யா ஸா மாம் பாது ஸரஸ்வதீ தேவர்களுக்கு ஆத்மாவாகவும், தெய்வமாகவும் ஈசுவரியான நீ விளங்குகிறாய். அவர்களுக்கு உள்ளே உறைந்து வாக்கைத் தூண்டும் தேவி யாரோ அந்த சரஸ்வதி என்னைக் காக்கட்டும்.
அந்தர்யாம்யாத்மனா விச்வம் த்ரைலோக்யம் யா நியச்சதி ருத்ராதித்யாதி ரூபஸ்தா யஸ்யாமாவேச்ய தாம் புன: த்யாயந்தி ஸர்வரூபைகா ஸா மாம் பாது ஸரஸ்வதீ
மூவுலகிற்கும் அந்தர்யாமியாக இருந்து இயங்குபவள் யாரோ, ருத்ரன், சூரியன் முதலிய வடிவங்களில் விளங்குபவள் யாரோ, அனைத்தையும் யாரிடம் லயம் செய்து யோகிகள் தியானிக்கின்றனரோ, அந்த பிரம்ம வடிவாக இருப்பவளான சரஸ்வதிதேவி என்னைக் காத்தருளட்டும்!
யா ப்ரத்யக் த்ருஷ்டிபிர் ஜீவைர் வ்யஜ்யமானானுபூயதே வ்யாபினீ ஜ்ஞப்தி ரூபைகா ஸா மாம் பாது ஸரஸ்வதீ
உள் நோக்கிய பார்வை கொண்ட ஜீவர்களால் உணரப்படுபவளும், நீக்கமற நிறைந்தவளும், ஞானவடிவினளுமாகிய சரஸ்வதிதேவி என்னைக் காத்தருளட்டும்!
நாமஜாத்யாதிபிர்பேதை: அஷ்டதா யா விகல்பிதா நிர்விகல்பாத்மனா வ்யக்தா ஸா மாம் பாது ஸரஸ்வதீ
பெயர், குணம் முதலிய வேறுபாடுகளால் எட்டு விதமாக எண்ணப்படுவளும், நிர்விகல்ப ஆத்ம வடிவில் தோன்றுபவளுமான சரஸ்வதி தேவி என்னைக் காத்தருளட்டும்!
வ்யக்தாவ்யக்தகிர: ஸர்வே வேதாத்யா வ்யாஹரந்தி யாம் ஸர்வ காமதுகா தேனு: ஸா மாம் பாது ஸரஸ்வதீ
வேதம் முதற்கொண்டு எல்லா சொற்களும், எண்ணங்களும் யாரைப் பாடுகின்றனவோ, அந்த எல்லா வரங்களையும் நல்கும் காமதேனுவான தேவி சரஸ்வதி என்னைக் காக்கட்டும்!
யாம் விதித்வாகிலம் பந்தம் நிர்மத்யாகில வர்த்மனா யோகீ யாதி பரம் ஸ்தானம் ஸா மாம் பாது ஸரஸ்வதீ
யாரை அறிவதால் ஒரு யோகி அனைத்துத் தளைகளையும் எல்லா வழிகளிலும் ஒழித்து மேலான நிலையை அடைகிறானோ, அந்த சரஸ்வதிதேவி என்னைப் பேணிக் காக்கட்டும்!
நாமரூபாத்மகம் ஸர்வம் யஸ்யாமாவேச்ய தாம் புன: த்யாயந்தி ப்ரஹ்மரூபைகா ஸா மாம் பாது ஸரஸ்வதீ ஐம் அம்பிதமே நதீதமே தேவிதமே ஸரஸ்வதி அப்ரசஸ்தா இவ ஸ்மஸி ப்ரசஸ்திமம்ப நஸ்க்ருதி
பெயர் மற்றும் வடிவங்களாலான அனைத்தையும் யாரிடம் லயம் செய்து யோகிகள் தியானிக்கின்றனரோ, அந்த பிரம்ம வடிவாக இருப்பவளான சரஸ்வதிதேவி என்னைக் காத்தருளட்டும்!
ஐம், சிறந்த தாயே! நதிகளில் சிறந்தவளே! தேவிகளில் உயர்ந்தவளே! சரஸ்வதி தேவியே! செல்வங்கள் அனைத்தையும் இழந்தவர்களைப் போன்று நாங்கள் இருக்கிறோம்; தாயே! எங்களுக்கு எல்லா செல்வங்களையும் கொடுத்தருள்வாய். |
|
|