|
குருவின்மீது அசாத்திய பக்திகொண்டு பொங்கிப் பிரவகிக்கும் துங்கபத்ரா நதியில் கண்மூடி நடக்க, நீர் விலகி வழிகொடுக்க, அந்த உத்தம பக்தனாம் அப்பண்ணாச்சாரியார் ராகவேந்திரரை சரணடைந்து இயற்றியதே இந்த ஸ்லோகங்கள். இதை பக்தியுடன் படித்தும், பாராயணம் செய்தும் ராகவேந்திரரை சரணடைந்தால் நம் நியாயமான கோரிக்கைகளை ராயர் நிறைவேற்றுவார் என்பது நிதர்சனமான உண்மை. ஹயக்கிரீவரையே சாட்சியாக்கி, ராகவேந்திரரே தன் சீடருக்கு ஆசிர்வதித்து முடித்துவைத்த மகாசக்தி வாய்ந்த ஸ்தோத்திரம் இது. தனது முதல் அற்புதத்தை தனது ப்ரிய சீடருக்கு அளித்து, அதனை மேன்மேலும் உயர்வாக்கிய ராகவேந்திரரின் அன்பிற்கும் கருணைக்கும் ஈடுஇணை ஏதுமில்லை.
பல நன்னூல்கள் துணைகொண்டு என்னளவில் தமிழ்ப்படுத்திய இம்முயற்சியில் குரு ராகவேந்திரரின் நல்லாசி இருக்கிறதென்று பரிபூரணமாக நம்புகிறேன். நிறைகள் அனைத்தும் ஸ்ரீராயருக்கு சமர்ப்பணம்.
ஸ்ரீபூர்ண போத குருதீர்த்த ப்யோப்தி பாரா காமாரிமாஷ விஷமாக்ஷ ஸீர்ஸ ஸ்ப்ரு சந்தி பூர்வோத்தராமித தரங்க சரத்ஸுஹம்ஸா தேவாலி ஸேவித ப்ராங்க்ரி பயோஜ லக்னா.
இந்த ஸ்தோத்திரம் பூர்ணத்துவமான பூர்ண ப்ரக்ஞர் குருராயரைப் பற்றியதால் உயர்ந்தது. ஸ்ரீமத்வாச்சாரியாரின் சாஸ்திரத்திற்கு (எல்லைக்கு) உட்பட்டது. சிரஸில் சந்திரனைத் தாங்கி ஜடையினில் கங்கையை முடிந்து வைத்திருக்கும் திரிநேத்திரனான ஈஸ்வரனாலும் கொண்டாடப்படுகிறது. பலப்பல உயரிய பூர்வ தர்ம சாஸ்திரங்களையும் அறநெறிகளையும் துல்லியமாக தெளிவுற அறிந்த உயர்ந்த துறவிகளால் போற்றப்படுகிறது. ஹரியான ஸ்ரீமன் நாராயணனின் அநேக கல்யாண குணங்களைத் துதிசெய்து சேவிக்கும் தேவாதி தேவர்களாலும் புகழப்படுகிறது. (அப்பண்ணாச்சாரியார் அருளியது) |
|
|