|
உபநிஷத் என்பதற்கு பிரம்ம வித்தையை எளிய முறையில் ஆணித்தரமாக விளக்குதல் என்பது பொருள். உபநிஷத்துக்களுள் முக்கியமானவை 108. இந்தத் தொகுப்பில் ஒன்றாக விளங்குவது, தக்ஷிணாமூர்த்தி உபநிஷதம். இது, கிருஷ்ணயஜுர் வேதத்தைச் சார்ந்தது. மார்க்கண்டேயரிடம் சனகாதி முனிவர்கள் கேட்ட கேள்விகளுக்கு, அவரால் விரித்துரைக்கப்பட்டதாக இது அமைந்துள்ளது. அந்த உபநிஷத்...
ஓம் ஸஹநாவவது இதி சாந்தி:
ஓம் ப்ரஹ்மாவர்த்தே மஹாபாண்டீர வடமூலே மஹாஸத்ராய ஸமேதா மஹர்ஷய:
சௌனகாதயஸ்தே ஹ ஸமித்பாணயஸ்தத்வ ஜிஜ்ஞாஸவோ
மார்க்கண்டேயம் சிரஞ்ஜீவின - முபஸமேத்ய பப்ரச்ச: கேன த்வம் சிரம் ஜீவஸி கேன வானந்த மனுபவஸீதி
ஓம் ஸஹநாவவது... சாந்தி பாடம்.
1. ஓம் பிரம்மாவர்த்தப் பிரதேசத்தில் மஹா பாண்டீரம் எனும் ஆலமரத்தடியில் ஒரு பெரிய ஸத்ர யாகத்துக்காகக் கூடியிருந்தனர் சௌனகர் முதலிய ரிஷகள். அவர்கள் ஸமித்தைக் கையுறையாகக் கொண்டு மார்க்கண்டேய மகரிஷியை அணுகி, நீங்கள் எவற்றால் சிரஞ்சீவியாகவும், எவற்றால் ஆனந்த அனுபவம் உடையவர்களாகவும் விளங்குகிறீர்கள்? என்று கேட்டார்கள்.
பரம ரஹஸ்ய சிவதத்வ ஜ்ஞானேனேதி ஸ ஹோ வாச யேன தக்ஷிணாமுக: சிவோஸபரோக்ஷீ க்ருதோ பவதி தத்பரமரஹஸ்ய சிவ தத்வஜ்ஞானம்
ய: ஸர்வோபரமே காலே ஸர்வானாத்மன் - யுபஸம்ஹ்ருதய ஸ்வாத்மானந்தஸுகே மோததே ப்ரகாசதே வா ஸ தேவ:
அத்ரைதே மந்த்ரரஹஸ்ய ச்லோகா பவந்தி
மேதா தக்ஷிணாமூர்த்தி மந்த்ரஸ்ய ப்ரஹ்மா ருஷி:
காயத்ரீச் சந்த: தேவதா தக்ஷிணாஸ்ய: மந்த்ரேணாங்க ந்யாஸ:
ஓம் ஆதௌ நம உச்சார்ய ததோ பகவதே பதம்
தக்ஷிணேதி பதம் பச்சாத் மூர்த்தியே பதமுத்தரேத்
அஸ்மச்சப்தம் சதுர்த்யந்தம் மேதாம் ப்ரஜ்ஞாம் பதம் வதேத்
ப்ரமுச்சார்ய ததோவாயுபீஜம்ச்சஞ்ச தத: படேத்
அக்னிஜாயாம் ததஸ்த்வேஷ சதுர்விம்சாக்ஷரோ மனு:
2. அவர் (மார்க்கண்டேயர்) கூறினார்:
பரம ரஹஸ்ய சிவதத்துவ ஞானத்தால்தான். எதனால் தக்ஷிணாமூர்த்தியான சிவன் அபரோக்ஷமாவாரோ அதுவே பரம ரஹஸ்ய சிவ தத்துவ ஞானம். பிரளய காலத்தில் அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டு ஸ்வாத்மானந்த சுகத்துடன் எவர் பிரகாசிக்கிறாரோ அவர்தான் அந்த தேவர். அவரைப் பற்றிய மந்திர ரஹஸ்ய சுலோகங்கள் இவை.
பிரம்மா ரிஷி. காயத்ரீ சந்தம். தக்ஷிணாமூர்த்தி தேவதை. மந்திர பாகங்களால் அங்க நியாஸம்.
முதலில் ஓம் என்று உச்சரித்துப் பிறகு பகவதே என்றும், தக்ஷிணாமூர்த்தியே என்றும் அஸ்மத் சப்தத்தின் நாலாவது வேற்றுமையான மஹ்யம் என்றும், மேதாம் ப்ரஜ்ஞாம் என்றும், வாயுபீஜமான ய வுடன் ச்ச கூட்டியும், முடிவில் அக்னி பத்னியான ஸ்வாஹா பதம் சேர்த்தும் உச்சரித்தால் தோன்றுவது 24 எழுத்து உள்ள மந்திரம்.
அதாவது, ஓம் நமோ பகவதே தக்ஷிணா மூர்த்தயே மஹ்யம் மேதாம் ப்ரஜ்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா.
த்யானம்
ஸ்படிக ரஜதவர்ணம் மௌக்திகீ - மக்ஷமாலா- மம்ருத கலச வித்யாம் ஜ்ஞானமுத்ராம் கராக்ரே ததத - முரககக்ஷம் சந்த்ரசூடம் த்ரிநேத்ரம் வித்ருத விவித பூஷம் தக்ஷிணாமூர்த்தி மீடே
3. தியானம்.
ஸ்படிகம் போன்று வெண்மையானவரும், கைகளில் முத்தாலான அக்ஷமாலை, வித்யாஸ்வரூபியான அமிர்தகலசம், ஞான முத்திரை ஆகியவற்றை தரிப்பவரும், பாம்பை ஆபரணமாகக் கொண்டிருப்பவரும், சந்திரனைச் சூடிக் கொண்டிருப்பவரும், முக்கண்ணரும், பலவித அணிகலன்களை உடைய வருமான தக்ஷிணாமூர்த்தியைப் போற்றுகிறேன்.
ஆதௌ வேதாதிமுச்சார்ய ஸ்வராத்யம் ஸவிஸர்ககம்
பஞ்சார்ணம் தத உத்ருத்ய அந்தரம் ஸவிஸர்ககம் அந்தே ஸமுத்தரேத் தாரம் மனுரேஷ நவாக்ஷர:
4. ஆதியில் ஓம் என்று உச்சரித்து முதல் உயிரெழுத்தை விஸர்க்கத்துடன் உச்சரித்துப் பிறகு பஞ்சாக்ஷரியை விஸர்க்கத்துடன் கூட்டி முடிவில் ஓங்காரம் உச்சரித்தால் வருவது நவாக்ஷரி மந்திரம். அதாவது ஓம் அம் அ: சிவாய நம: ஓம் த்யானம்
முத்ராம் பத்ரார்த தாத்ரீம் ஸ பரசுஹரிணம் பாஹுபிர் பாஹுமேகம் ஜான்வாஸக்தம் ததானோ புஜகபில ஸமாபத்த கக்ஷ்யோ வடாத:
ஆஸீனச் சந்த்ரகண்ட ப்ரதிகடித ஜடா க்ஷீர
கௌரஸ்த்ரிநேத்ரோ தத்யாதாத்ய: சுகாத்யைர் - முனிபிரபிவ்ருதோ பாவ சுத்திம் பவோ ந:
5. தியானம்:
மங்களங்களை அருளும் அபய முத்திரையும், மானும், பரசுவும் (மூன்று கைகளில் தரித்து) ஒரு கையை முழந்தாள் மேல் வைத்துக் கயிறு போல் உடலில் பாம்பைக் கட்டிக்கொண்டு, சடையில் சந்திரகலை தரித்து, பால் போல் வெண்ணிறத்துடன் பிரகாசிப்பவரும் ஆலமரத்தடியில் வீற்றிருப்பவரும் சுகர்முதலிய முனிவர்களால் சூழப்பெற்றவருமான முக்கண்ணர் ஆதிபரமேஸ்வரர் நமக்கு பரிசுத்தமான பாவனையை அருளட்டும்.
தாரம் ப்ரூம் நம உசார்ய மாயாம் வாக்பவமேவ ச தக்ஷிணாபத முச்சார்ய தத: ஸ்யான் மூர்த்தயே பதம்
ஜ்ஞானம் தேஹி பதம் பச்சாத் வஹ்னிஜாயாம் ததோ ந்யஸேத்.
6-7. ஓங்காரத்துடன் ப்ரூம் நம: என்று உச்சரித்து மாயா பீஜமும் வாக்பவ பீஜமும் சேர்த்து தக்ஷிணாமூர்த்தியே என்று சொல்லி ஜ்ஞானம் தேஹி ஸ்வாஹா என்பது மந்திரம். அதாவது ஓம் ப்ரூம் நமோ ஹ்ரீம் ஐம் தக்ஷிணாமூர்த்தயே ஜ்ஞானம் தேஹி ஸ்வாஹா.
பஸ்மவ்யாபாண்டுராங்க: சசி சகலதரோ ஜ்ஞான முத்ராக்ஷமாலா வீணா புஸ்தைர் - விராஜத்கரகமலதரோ யோக பட்டாபிராம:
வ்யாக்யா பீடே நிஷண்ணோ முனிவர நிகரை: ஸேவ்யமான: ப்ரஸன்ன:
ஸவ்யாஸ: க்ருத்திவாஸா: ஸதத - மவது நோ தக்ஷிணாமூர்த்திரீச:
8. விபூதிப் பூச்சால் வெண்மையாய் விளங்கும் திருமேனியுடன் சந்திரகலையைச் சிரசில் தரித்துக் கரகமலங்களில் ஞான முத்திரை, அக்ஷமாலை, வீணை, புஸ்தகம் ஆகியவற்றை ஏந்தியும் ஸர்ப்பாபரணமும் யானைத் தோலாடையும் அணிந்து, யோக பட்டாபிராமனாக வியாக்கியான பீடத்தில் எழுந்தருளிச் சிறந்த முனிவர்களால் சேவிக்கப் பெற்று, விளங்கும் ஈசன் தக்ஷிணாமூர்த்தி நம்மை எப்பொழுதும் காத்தருளட்டும்.
வைராக்ய - தைஸம்பூர்ணே பக்திவர்தி ஸமன்விதே
ப்ரபோத பூர்ணபாத்ரே து ஜ்ஞப்தி தீபம் விலோகயேத்
9. வைராக்கியமாகிற எண்ணெய் நிறைந்ததும் பக்தி எனும் திரியுடன் கூடியதுமான பிரபோத பூர்ண பாத்திரத்தில் ஒளிரும் ஞான தீபத்தை தரிசனம் செய்ய வேண்டும்.
ஸர்காதிகாலே பகவான் விரிஞ்சி - ருபாஸ்யைனம் ஸர்க ஸாமர்த்யமாப்ய
துதோஷ சித்தே வாஞ்சிதார்த்தச்ச லப்த்வா
தன்ய: ஸோபாஸ்யோபாஸகோ பவதி தாதா
10. சிருஷ்டியின் ஆதிகாலத்தில் பகவான் பிரம்மா இந்த தக்ஷிணாமூர்த்தியை உபாஸித்து சிருஷ்டி செய்யும் திறமையை அடைந்து மனதில் மகிழ்வெய்தினார். விரும்பிய பயனை அடைந்து தன்யரானார் அந்த பிரம்மா. அதனால் உபாஸகராகவும் உபாஸ்யராகவும் விளங்குகிறார்.
ய இமாம் பரம ரஹஸ்ய சிவ தத்வ வித்யாமதீதே ஸ ஸர்வ பாபேப்யோ முக்தோ பவதி ய ஏவம் வேத ஸ கைவல்யமனுபவதீத்- யுபநிஷத்
11. எவரொருவர் இந்தப் பரம ரகசிய சிவ தத்துவத்தை ஓதுகிறாரோ அவர் எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுபடுவார். இதை உள்ளபடி அறிந்தவர் கைவல்யத்தை அனுபவிப்பார் என்பது உபநிஷத்து. |
|
|