SS பாலசந்திர விநாயகர் பதிகம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> பாலசந்திர விநாயகர் பதிகம்
பாலசந்திர விநாயகர் பதிகம்
பாலசந்திர விநாயகர் பதிகம்

(சிரவையாதீனம் இரண்டாம் குருமகாசந்நிதானம்
தவத்திரு கந்தசாமி சுவாமி அருளியது)

காப்பு வெண்பா

திந்திருணிச் சோலைச் சிரவைநகர் வாழ்பால
சந்திரவி நாயகன்மேற் சாற்றுதுதிக் -கிந்திரவி
போல விசைமெய்ப் புகழடியார் தம்பதங்கள்
கோலமுறு மெய்த்துணையாகும்.

எழுசீர் விருத்தங்கள்

1. சீதவாண்மதிபாம் பிதழிவானதிதோய்
செஞ்சடாடவியுமுக் கண்ணும்,
பாதபங்கயமும் பவளமால்வரைநேர்
படிவமுந் துலங்கமூடிகமேல்,
ஆகரச்சித்தி புத்திமத்தியிற்றோ
யருட்பெருஞ் சேவையயீந் தருள்வாய்,
பாதவப் பொதும்பர்ச் சிரவணபுரம்வாழ்
பாலசந்திரவிநா யாகனே.

2. புண்ணியப் பொலிவு பூத்தநின்வடிவம்
புந்தியங்கோயிலி லமைய
வெண்ணியவடியார்க் கெண்ணியபயன்
முற்றெளிதளித்தருளலு நினையேன்;
புண்ணியலுலக வழக்கில் வீழ்ந் தயர்ந்தேன;
புரிபிழைபொறுத்துன தருட்சீர்,
பண்ணியல் விழைந்தேன் சிரவணபுரம்வாழ்
பாலசந்திரவிநாயகனே.

3. ஆடிடும்பருவந் தனில்விளையாட்டா
லாற்றிய நின்வழிபாடும்,
நாடிடுந்தொண்டர் தாம்புரிதவம்போல்
நயந்துன தன்பர்சே காத்திற்,
கூடிடும்படிசெய் நின்பெருங்கருணைக்
குறிப்படியேனுணர் குவதோ?
பாடிடுமன்பர் சிரவணபுரம் வாழ்
பாலசந்திரவிநாயகனே.

4. மலையெனவென்னை மாயைமிக்கடர்த்து
வருத்தினுமலையெனப் பொலிநின்
னிலையென தகத்தி னினைத்தவக்
கணத்தே நீடிருட்பிழம்பைவெங் கதிரோன்
குலையெனத்தடியுங் காட்சி போலொழித்துட்
குளிர்தரப்புரியம்வான் முகிற்கம்
பலையெனச்சுரும்பார் சிரவணபுரம்வாழ்
பாலசந்திரவிநாயகனே.

5. வாழ்விளைக்காட்டிப் போகமிக்கூட்டி
மயக்குவல்வினையுடன் றுன்பத்
தாழ்வினைக்கூட்டிச் சுழற்றிடும்பாவச்
சழக்கு முற்றற்றொழிந் திடவே,
போழ்வினைப்பத்தி ஞானமீந்தென்னைப்
புரப்பதுன்கடன்; புக லானேன்
பாழ்வினைத் தொடர்தீர் சிரவணபுரம்வாழ்
பாலசந்திரவிநாயகனே.

6. சுதந்திரமெனக்கின் றாக்கியேமாயை
சூறைதோய்துரும் பெனப் பிறப்போ
டதந்தரவேங்கி மயங்கிநின்னடிக்
கீழடைக்கலமாயினே னுய்யும்
விதந்தரவல்ல வுன்னருளன்றி
வேறுதிக்கறிகிலேன் ஞானப்
பதந்தரவிரங்காய் சிரவணபுரம்வாழ்
பாலசந்திரவிநாயகனே.

7. நெக்கு நெக்குள்ளங் கண்களானந்த
நீர்பொழிந்துடல் புளகிதமாய்
மிக்குவந்துன்சீர் பாடியென்னுச்சி
மிசைகு வித்திடுகத் துடனே
க்குவந்தேத்துந் திருவருட்சித்திச்
சிறப்பிசைந்தாடன்மிக் கியற்றும்
பக்குவந்தருவாய் சிரவணபுரம்வாழ்
பாலசந்திரவிநாயகனே.

8. மதியமைத்திட்ட சென்னியாய்நின்றாள்
வணங்கிடுமெனதுசென் னியின்மேல்
விதியமைத்திட்ட விதியையற் றொழிய
விலக்குபு விசுவரூ பந்தேர்
கதியமைத்திட்ட சித்தி முற்றவுமென்
கைவரப்பணித்தருள் கொங்குப்
பதியமைத்திட்ட சிரவணபுரம்வாழ்
பாலசந்திரவிநாயகனே.

9. பூவிரிதருமைந் தருநிழலிறைவன்
புகலியிற்புரிவனஞ் செழிப்பக்
காவிரிநதிதந் தருளல்போலுன்சீர்
களைக்களைப் பின்றியேக் கெடுக்கும்
நாவிரிமதுர வாக்குவல்லபத்தை
நண்ணிடப்பண்ணிமெய்ப் பண்ணார்
பாவிரிவேற்பாய் சிரவணபுரம்வாழ்
பாலசந்திரவிநாயகனே.

10. தன்மையுமனச்சாட் சியுமிலாமனிதர்
தஞ்சகசாலநட்பதனாற்
புன்மைமிக்குபயப் பிரட்டனாயுள்ளம் புழுங்கு
மென்றனைக்கடைக் கணித்துன்
பொன்மையார்பாதத் திருமுடி சூட்டிப்
பூரணானந்தவாழ் வருள்வாய்
பன்மைசால் வள மைச்சிரவணபுரம்வாழ்
பாலசந்திரவிநாயகனே.

11. நத்தியலன்பர் வைப்பிசையிராமா
னந்தசற்குருபர னுண்மைப்
பத்திமிக்கிசையுங் கோவைமேடாகோ
பால நாமம்பெறுந் தொண்டன்
சத்தியப்பொன்னார் மேனிசால்
பால சந்திரற்கணிகந்த சாமி,
துத்தியமன்பி லோதுநரிருமைச் சுகங்க
ளுந்தோய்தல்சத்தியமே.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar