SS
சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
(சிரவையாதீனம் இரண்டாம் குருமகாசந்திதானம்தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அருளியது)காப்பு -வெண்பா.பில்கும் வளச்சிரவை பேணியன்பர் வேணமுற்றுநல்குந் திருவருள்வி நாயகன்மேல் -மல்குமின்பத்துத்தியப்பா வோதத் துணையன் னவன் றுணைத்தாட்பத்தியடி யார்பொற் பதம்.நூல்எண்சீர் விருத்தங்கள்.1. பிரணவத்தினுட் பொருணிலையுணரும்பெரியர்நெஞ்சகம் பிரிகிலதமையுங்கிரணவான்றுவர் மேனியுமலவன்கீற்றணிந்தசெங் கேழ்ச்சடைமுடியுஞ்சரணவாரிசங் களுஞ்சதுர்ப் புயமுந்தழைத்தசேவையென் விழித்துணையகலாதரணமாக நேர் திகழ்சிரவணவூரவிர்ந்திடுந்திரு வருள்விநாயகனே.2. வரமுலாமணி வாசகன்மலர்வாய்வாசகத்திறம் வயக்கிடு முன்னைத்திரமுலாம்பொருள் கட்குமுற்பழமைசிறந்து பிற்படும் புதுமைக்கும்புதுமையுரமுலாவுமெய் மூத்தபிள்ளைப்பேரோங்குன்மாட்சிமை யுணர்பவரெவரேஅரமுலாம் பணி யாய்சிரவணவூரவிர்ந்திடுந்திரு வருள்விநாயகனே.3. உருகிடாக்கருங் கல்லிணைமனமுமுடையநாயகவுன் புகழ்வாரிபருகிடாதவெண் மைத்தகைவாக்கும்பத்திமிக்கு நின் படிவமொண்டிறைநீர்பெருகிடாவிழி களும்படைத் துழலும்பேயனேன்பிர பஞ்சமாயையினுள்அருகிடாதரு கணைசிரவணவூரவிர்ந்திடுந்திரு வருள்விநாயகனே.4. ஏணியேபெருந் தோணியேயெனமுன்பெய்துவார்க்குப தேசம்விற்றிழிமண்காணியேயெனக் கருதிவீணேநாள்கழித்துமாயையிற் களித்தனன்குனித்துநாணியேற்றுவிற் போற் கிழப்பருவநண்ணவோர்ந்துள நாணிலேற்குன்மெய்யேர்பெற வருள்சிரவணவூரவிர்ந்திடுந்திரு வருள்விநாயகனே.5. தத்தமைந்துழன் மனமொருநிலையிற்சார்ந்திடாதுறும் படிகமொத்துலகப்பித்தமைந்தணை பொருண்மயமாகிப்பிரமைகொண்டுநின் பிடிவிடுத்தயர்ந்தேன்முத்தமைந்தபுன் முறுவல்வல் லவைத்தாய்முயங்குபேரருண் முதல்வநிற்கபயம்அத்தமைந்தினி லாள்சிரவணவூரவிர்ந்திடுந்திரு வருள் விநாயகனே.6. விடையினோடிழி கரம்புலைச்சியின்மெய்வேவுதூர்வையை வீசுகாற்றுன்மேலடையவீசவர்ச் சனைபுரிந்தனவென்றமரர்யோகரெய் தரும்ப தமளித்தாயுடையநாயக வுன்றிருப்பதங்களுவந்துபோற்றிடு மொதியனேன்பணிகளடைய வேற்றருள் வாய்சிரவணவூரவிர்ந்திடுந்திரு வருள்விநாயகனே.7. கண்டதேபெருங் காட்சிகொண்டதுவேகலந்தகோலமாக் கருதியைம்புலன்வாயுண்டதேபுசித் துட்சலிபொருசற்றுற்றிலேனுனக் குழுவலன்பிசைமெய்த் தொண்டதே புரிந் தலகிலானந்தத்துறையுண்மூழ்கநீ துணைசெய்நாள்புகல்வாய்அண்டரேத்திறை வாசிரவணவூரவிர்ந்திடுந்திரு வருள் விநாயகனே.8. தெண்டிரைக்கடல் கொண்டுழுந்தளவாத்திரட்டியுண்டருள் செந்தமிழ்முனிவன்குண்டிகைப்புனல் புவிமிசை கவிழ்த்துக்குட்டவோடினை கொள்கைமற்றதையுட்கொண்டிசைப்புதுப் பூசனைபுரியக்கோலமேவிரா மானந்தவடிவாய்அண்டிடப்புரிந் தமைசிரவணவூரவிர்ந்திடுந்திரு வருள்விநாயகனே.9. பணியெனப்படி வுற்றுயராலின்பாற்கவின்றிடு மாற்கருள்புரிந்தாய்பிணியெனப்பல வாசைசூழ்ந்தென்றும்பிரிவறப்பணி பூண்களூண்கொள்ளத்துணியெனத்திரி வேற்கு நின்பத்தித்தொண்டியற்றுமெய்ச் சுவையுறத்திருநீறணியெனக்கனிந் தருள்சிரவணவூரவிர்ந்திடுந்திரு வருள்விநாயகனே.10. கௌவையார்கலி யுடைகொளம்புவியின்கண்வயங்குமாடவர்களேமேலோர்கொவ்வைவாய்மட மாதர்தாழ் வென்னுங்கூற்றமுற்றுமே மாற்றமென்றுணரச்செவ்வைநாவலர் காவலன்சேரன்சிந்தைநாணுறத் திருக்கயிலையின்மேலௌவையாரைமுன் விடுஞ்சிரவணவூரவிர்ந்திடுந்திரு வருள்விநாயகனே.11. நித்தியஞ்செய்நை மித்தியச்சிறப்பு நிரனிறைப்படநிறை திருப்பணிசாலத்தியற்புதம் பொலிசிரவணவூரவிர்ந்திடுதிரு வருள்விநாயகனைச்சத்தியச்சம ரசத்திருத்தொண்டர் தாசனாங்கந்தசாமியுள்ளன்பால்துத்தியம்புரி பதிகமேத் தெடுப்பார்துன்பமற்றசிற் சுகத்திசைவாரே.