SS
சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
(சிரவையாதீனம் இரண்டாம் குருமகாசந்நிதானம்தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அருளியது)காப்பு வெண்பாசீல நிறைவார் சிரவணந கர்க் கணிசைகோல தண்ட பாணிக் குருபரன்றோண் - மேலமையச்சூட்டும் பதிகத் துணையாகுந் தொண்டர்திருத்தாட்டுணையிற் றோய்மகரந் தம்.நூல் - எண்சீர் விருத்தங்கள்1. வரம்பொலிபுன் முறுவலணிச் செவ்வாயுங் கருணைமழைவிழியுந் திகழ்காமர் வதனமுஞ்செங் கடம்பாருரம்பொலிவை வேற்படையுந் தண்டமுடன் றொடைமீதுற்றதிருக் கரங்களும்பண் பெற்றவரு மறையின்சிரம்பொலிமோ லியிலிசைபொற் பங்கயத்தாள் களுமென்சிந்தைவிழிப் பாலமைந்து திகழவைத்தாண் டருள்வாய்குரம்பொலிமா விசைமறுகார் சிரவைநகர்க் கோயில்கொண்டதண்ட பாணியருட் குமரகுரு பரனே.2. அவிவிருந்தா ரமரர்கட்கு மாயுள்வரம் பொழியுமவிவிருந்த தெனக்கலைக ளளவுணர்த்து மென்னிற்புவிவிருந்தா மாக்கைபெறும் போக்கையொரு பொருளாப்புகன்றிடவிங் கென்னுளதுன் புகழ்பரந்து சிறந்தகவிவிருந்தா னந்தமதைச் செவிமதகுட் செலுத்திக்கருத்தமைக்குந் தவஞானக் கண்ணியற்கண் ணியருட்குவிவிருந்தாங் காட்சிநல்காய் சிரவைநகர்க் கோயில்கொண்டதண்ட பாணியருட் குமரகுரு பரனே.3. தத்தமது கன்மமுற்றும் விளைவாய்ப்பின் பயனைத்தந்திடுதன் முக்காலுஞ் சத்தியமென் றுணர்ந்தும்பித்தமதா லோமாயா மயக்காலோ கன்மப்பிணிப்பாலோ வெதனாலோ பெரும்பாவம் புரியச்சித்தமமைந் தனரவருட் சேர்ந்தயரா துண்மைச்சிறப்புறுகௌ மாரர்தம்மு ளுறப்புரிவாய் வாசக்கொத்தமர்பூங் கடம்புரத்தாய் சிரவைநகர்க் கோயில்கொண்டதண்ட பாணியருட் குமரகுரு பரனே.4. ஆலமெலாந் திரண்டுருண்டோர் மானிடமாய்ப் புவிமீதடைந்ததென மயக்கெவர்க்கு மளித்துமக மாயாசாலமெலாம் புரிந்துகொடும் பாவியென நாமந்தாங்கிமடிந் திடத்துணிவார் தம்முறவால் வீணேகாலமெலாங் கழித்தயர்ந்துன் கழற்கபய மானேன்கடைக்கணருள் சுரந்தருண்மெய்க்கௌமாரர் பாற்றோய்கோலமெலாங் கொடுத்தருள்வாய் சிரவைநகர்க் கோயில்கொண்டதண்ட பாணியருட் குமரகுரு பரனே.5. இச்சையற்றோ ரேபெரியோ ரென்றுணர்ந்தும் புவிமீதெவைகளையு மென்னுடைய தென்றிடவே திரிந்துமிச்சைமனப் பேயாட்டச் சதமெனவே நம்பும்வெண்மையறி வுடையேனுள் ளுண்மையுணர் வடையப்பச்சைமயிற் பரிமிசையாங் காட்சியளித் துன்பொற்பாதமலரென் சிரத்தின் மீதமைத்தாண்ட ருள்வாய்கொச்சைநக ரென்னவணிச் சிரவைநகர்க் கோயில்கொண்டதண்ட பாணியருட் குமரகுரு பரனே.6. நிணம்பொருந்துந் தூலவுட லிங்கிதுகொண் டெய்தும்நித்தியத்தோ டனித்தியந்தேர் நினைவமையேன் றுத்திப்பணம் பொருந்து மரவினைவாய்க் கௌவிமிதித் தகவும்பச்சைமயில் பெற்றமைமெய்ப் பண்பறியே னதன்மேல்மணம்பொருந்தி யவிர்தருநின் றாட்டுணைகன் டதனுள்வயங்கிடுநின் மெஞ்ஞான மயமறிந்துய் குவனோகுணம்பொருந்து மன்பர்தொழச் சிரவைநகர்க் கோயில்கொண்டதண்ட பாணியருட் குமரகுரு பரனே.7. கீரனைத்துன் புறப்பிடித்த பேய்வரையி னோடுங்கெடவடிவேற் படைவிடுத்த கிருபைமகோ ததியேபாரனைத்து மெனையலைக்கு மலமாயா கன்மப்பகையொழித்துத் திருநெடுமால் பண்ணவர்கட் கோதுஞ் சீரனைத்தும் பலபடவே விதந்துவியந் தேத்திச்சித்தாடல் புரிந்தாவித் திரள்களின்றுன் பொழித்துட்கோரனைத்துங் கொடுக்கவருள் சிரவைநகர்க் கோயில்கொண்டதண்ட பாணியருட் குமரகுரு பரனே.8. மானந்த விழிமாதர் தங்காதன் மோகவாரிகடந் துற்ற தமிழ் வாரிதியப் பாலாரானந்தக் கடலாடி யான்றானென் றிடல்போமருணகிரி நாதன்விழி யருந்தும்விருந் தாகும்வானந்த வருட்சோதி மயத்திருத்தாண் முடிமேல்வைப்பாய் நாயேனெய்ப்பில் வைப்பாய்வாழ் வுறவேகூனந்தன் மதிச்சிகரிச் சிரவைநகர்க் கோயில்கொண்டதண்ட பாணியருட் குமரகுரு பரனே.9. ஆன்மாவிற் சிறந்துளதா முரிமையுளத் துணர்ந்துள்ளணிபொலிநாட் டமைந்து றுந்தம் மவயச்சீ ருணரார்கான்மாவிற் பற்பலுயிர் கொன்றுநிண மென்புகறித்துழல்வார்த் திருத்துசித்திக் கணமெனக்கீந் தருள்வாய்தேன்மாவிற் கலந்திடுமென் னம்மைகலந் தின்பந்திளைக்குமணி மார்பிடத்திற் சிறக்குமருணை கொளெங்கோன்மாவிற் பனத்துதியாய் சிரவைநகர்க் கோயில்கொண்டதண்ட பாணியருட் குமரகுரு பரனே.10. ஞாலப்போக் கினிலலைந்து பொன்றேடித் தருக்குநரர்பொருளா மதியாதே நகைத்திகழும் படியோர்காலப்போக் கினிலுனது பணிபுரியுங் தொண்டர்கணங்களிப்ப வொருதாய்போற் காணுமட்ட சித்திச்சீலப்போக் கினனையளித் திக்கலிகா லத்தின்றிருக்கினைப்பொய்த் தருக்கினைப்புன் செருக்கினைமாய்த் தின்பக்கோலப்போக் கினையருள்வாய் சிரவைநகர்க் கோயில்கொண்டதண்ட பாணியருட் குமரகுரு பரனே.11. வண்டாடுங் குழல்வள்ளி தெய்வானைக் கின்பார்மணவாளா நின்றிருத்தாண் மணக்குமலை முற்றுந்தொண்டாடுங் கௌமாரர் சூழவணைந் தன்பாற்சுவைத்துதிப்பா மாலையினஞ் சூட்டிநின்மெய்க் கோலங்சுண்டாடும் வரமளிக்க நினதுதிரு வுள்ளங்கனிந்திரங்கி யருள்புரியுங் காலமெதோ திடுவாய்கொண்டாடுந் தவர்க்கருள்வான் சிரவைநகர்க் கோயில்கொண்டதண்ட பாணியருட் குமரகுரு பரனே.12. மலவிருளை நீக்கவருண் மலயமுனி கலையாய்வந்தவிரா மானந்த வள்ளலென வுள்ளங்குலவியிசை யணிபொருந்துஞ் சிரவைநகர்க் கோயில்கொண்டதண்ட பாணியருட் குமரகுரு பரனையிலவிதழார் கலவிமய லொழிந்தகவு மாரரிணைப்பாதத் துகள்கொள்கந்த சாமிதுதித் தணிபாநிலவியவா யுடையவர்சே யுடையதிருப் பாதநீழலிலெந் நாளுமின்பாய் வாழவல்லார் நிசமே.