|
முதல் பக்கம்>
இறைவழிபாடு> மாரியம்மன் பதிகம்
|
|
மாரியம்மன் பதிகம்
|
|
 |
(சிரவையாதீனம் இரண்டாம் குருமகாசந்நிதானம் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அருளியது)
காப்பு வெண்பா
செம்மை நலம்பலவும் சேர்சிரவை வாழ்மாரி யம்மை துதிப்பதிக மாக்குதுணை - மும்மை மதங்காட்டு மாதங்க வத்திரக்கோன் பேரற் புதங்காட்டு பாதாம் புயம்.
நூல்
எழுசீராசிரிய விருத்தங்கள்
1. மிஞ்சணிவாச மஞ்சரிக்குழலும் விரியருள்விழிகளு மூரற் கொஞ்சணிமொழிச்செவ் வாய்த்திருமுகமுங் குரு கொலித்தடங்கையுங் தொழும்பர் நெஞ்சணிபெறச்செய் பதங்களும்பிறவு நினைதொறு மென்முனின் றருள்வாய் மஞ்சணி மாரி வளச்சிரவணவூர் வளரிசை மாரியம்பிகையே.
2. களம்பெறுமனத்தே னாயினு முன்னைத் தாயெனநம்பி வாழ்த் தலினென் னுளம்பெறுகுறைகண் முற்றொழித்தின்ப முதவுதலுன்கட னுரைத்தேன் தளம்பெறுகமல முகமலர் மிசைதோய் தவளநித்திலக்குறு முறுவல் வளம்பெறகருணைத்தாய் சிரவணவூர் வளரிசை மாரியம்பிகையே.
3. கொள்ளையாருயிர்முற் றோம்புமாலமிசங் குலவியற்பரசிரா மனைமுன் பிள்ளையாக்கொள்ளுங் கருணையெந்தாய்நீ பிணப்பலி கொள்வையென் றுடனே கள்ளைவைத்துண்ணு மூர்க்கரைக்கொன்று காருணியத்திறம் பெருக்காய் வள்ளையங்குழைக்கா தாய்சிரவணவூர் வளரிசை மாரியம்பிகையே.
4. பிணம் விழாதிருக்கு மிடத்திலேதெய்வம் பிரத்தியட்சப்படு மெனுஞ்சற் குணம்விழாத் தொண்டர் தம்முபதேசக் கொள்கைதேரிந்நகர் மாந்தர் கணம் விழாத்துவக்குந் திருப்பணிகண்டுட் கடலெனப்பொங்கியற் கருணை மணம் விழாத் தெய்வ மேசிரவணவூர் வளரிசை மாரியம்பிகையே.
5. பொங்கலின் பெருக்கும் பலவுபசாரப் பூசனைப் பொலிவும் பன் மலர்தோய் தொங்கலினழகு மங்கலநாதத் தொனியுமார் விழாச்சிறப் பேற்றுத் தங்கலின்றியபே ரருள்பொழிவிழி முன் சார்ந்தடிவணங்குநர்க் கெல்லாம் மங்கலின்றியவாழ் வருள்சிரணவூர் வளரிசை மாரியம்பிகையே.
6. விளக்கெடுத்தெமது குலமெலாமென்ன விழாவெடுத் தமைதிரு நாளில் விளக்கெடுத்தணைவார் வேண்டுகைமுற்றும் விழிமலர் கொடுபொழிந் தருள்வாய் துளக்கெடுத்திடுபேய் பிரமராக்கதைசெய் துன்புடன்வறுமையா தியுறா வளக்கெலிப்பிடுதா யேசிரவணவூர் வளரிசை மாரியம்பிகையே.
7. பேயெனத் தெய்வ வினமுறவுயிரைப் பெலியிட்டுத்தின்றுதம் முயிரைத் தோயெனநரகத் தமிழ்த்திடத்துணியுந் துட்டர்கட்கோர்நம னென்னச் சேயெனவுனக்கு நான்விளம் பிடல்சத் தியம்படச்செகம்புகழ் சித்தி வாயெனக்கருள்செய் வாய்சிரவணவூர் வளரிசை மாரியம்பிகையே.
8. கர்த்தவீரியன்ற னாயிரத்தொகைசால் கரங்கண்முற்று ரங்கழிந் தொழியச் சீர்த்தவோர்பரசாற் றடிந்தருள்செல்வச் செயத்திருமைந்தனை யுவந்து பார்த்தகண்கொண்டு நோக்கி யுள்ளச்சம் பதிந்திடாவீரமேற் படுத்துன் வர்த்தனப் பால் வார்த் தருள்சிரவணவூர் வளரிசை மாரியம்பிகையே.
9. கோதுருவாகுங் கழைச்சிலையணைபூங் கோல்படாச்சிந்தயைங் கோயின் மீதுருவாகி விளங்கிடுமயிலே வியன்விளாங் குறிச்சியா நாமம் ஒதுருநகரந் தன்னையுமாட்சி யுஞற்றிமற்றந் நக ரினரும் மாதுருவென்போற் றிடச்சிரவணவூர் வளரிசை மாரியம்பிகையே.
10. நாற்றிசைதோயுற் றார்கண்மற்றார்கள் நட்பினர் தம்முடனுனது சாற்றிசைபொலிமங் களவிழாப்பொலிவைக் தரிசனஞ்செய்துநின் பாதம் போற்றிசைவிருந்து புரியுமிந்நகரம் பொலிவுறவாழிய வருள்வாய் மாற்றிசை பொற்கொம் பேசிர வணவூர் வளரிசை மாரியம்பிகையே.
11. பூணிசைந்தவிர்பூங் கொம்புறழ்பேரற் புதம்பொலிதிருவுருக்கொண்டு மாணிசைதருமங் களச்சிரவணவூர் வளரிசை மாரியம்பிகைமேற் காணியென்றவ்வூர் பெற்றமெய்ப்பாலார் கந்தசாமிச்சுதன் சூட்டும் வாணியார்பதிக மோதுநர்க்கின்ப வளந்தரும்வாழிய மாதோ. |
|
|
|