SS
சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
(சிரவையாதீனம் இரண்டாம் குருமகாசந்நிதானம் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அருளியது)காப்பு -வெண்பாசிரவணம் பட்டியின்பாற் சேர்வீர மாச்சிவரமருவும் தோத்திரப்பா வாய்ப்பச்- சிரமருவுங்கையுடையா னாதக் கழலுடையா னன்பருட்டோய்மெய்யுடையான் காப்பாகு மே.நூல்அறுசீர் விருத்தங்கள்.1. களங்கமுறாச் செக்கரணி கலந்தமுழுமதிபோலுங் கவின் மிக்கோங்கிவிளங்கணிதோய் திலகவத னமும்பரந்தவிழிமலரு மின்னேயென்னத்துளங்கியலிட் டிடைபொலிபட்டுடைதொடிக்கை யும்பதமுந் தோற்றியாள்வாய்வளங்குலவு நலம்பலவுந் தோய்சிரவைநகர்வீர மாச்சித்தாயே.2. பழித்துணையாம் பாவமுளம் பற்றாதுதராசமையும் பண்பேபோலமொழித்துணைவாய்த் தெவ்வுயிர்க்கு நலமேசெய்திடுங்கருணை முதிர்ச்சிநல்கிவிழித்துணையூ டுன்பதமே கருதிவழிபடுமன்பின் விரிவுற்றோங்கவழித்துணையா கிடவேண்டுங் காண்சிரவைநகர்வீர மாச்சித்தாயே.3. பாயசங்குக் குடம்பலியிட் டவைபுரியபாயசத்தப் பண்பற்றின்பார்பாயசம்பற் பலமணஞ்சால் சாதனங்களிட்டுருகிப் பரிவினோடும்ஆயசம்வற் சரத்துடனித் தியம்புரிந்துபணிவோர்கட் கதக்காமிச்சைவாயசம்பத் தத்தனையுந் தருஞ்சிரவைநகர்வீர மாச்சித்தாயே.4. முருந்துறழ்வெண் ணகைச்செவ்வாய்க்கருங்குழற்சிற் றிடைகொளருண் முதல்வியுன்னைப்பொருந்துமொரு குலதெய்வ மெனச்சொலினவ்வாறுநிற்பாய் புதுமைசான்றவிருந்துறழ வருவாருன் றனைப்போற்றிற்பயனின்றி வீணாவாரோமருந்துருவா யுயிர்குலத்தே வாஞ்சிரவைநகர்வீர மாச்சித்தாயே.5. கோயில்விளங் கிடக்குடிகள் விளங்குமென்பாரௌவை முனங் குளிர்தீஞ்சொல்லால்தாயில்விளங் கிடச்சிறந்த கோயிலில்லையென்றதனாற் றமியே மெம்மைச்சேயில்விளங் கிடக்கொளுனை வாழியெனவிழாவெடுத்துச் சேவித்தேமுன்வாயில்விளங் கிடவாசி புகல்சிரவைநகர்வீர மாச்சித்தாயே.6. அணித்தாகும் பலபலவாம் பதிகளிடத்தமைவாருமம்மை யென்றுட்கணித்தாகும் பணியினுமும் பட்டுடையுமலர்த்தொடையுங் கனிவிற்கொண்டேபணித்தாக மிகச் செய்வோர் கோரிக்கைகொண்டுசௌபாக் கியங்கண்முற்றும்மணித்தானத் தடங்கையினல் குதிசிரவைநகர்வீர மாச்சித்தாயே.7. தாயிருக்கப் பிள்ளையுள்ளந் தளர்வதுண்டோதிருவருட்சீர்ச் சலதியானநீயிருக்க யாங்கண்மெலி வுறலாமோவிதுமுறையா நீதியாமோகாயிருக்குங் கன்மனத்தெம் பிழைகுறியாதுட்பொலியுங் கருணைபொங்கும்வாயிருக்க வஞ்சலென்னா தென்சிரவைநகர்வீர மாசித்தாயே.8. கற்புநிலை யும்பொலிவார் கட்டழகும்பெறுமடவார் கணமும்விண்ணார்வெற்புமுடி தோய்விளக்கிற் குலத்தைவிளக்கிடும் புதல்வர் மெய்மைப்பேறும்பொற்புயரும் பதிவாழ்வும் பெற்றுநின்றொண்டினர்வாழப் புரியவுன்பால்வற்புறுத்து வேற்கிரங்கி யருள்சிரவைநகர்வீர மாச்சித்தாயே.9. வாசனைநை வேத்தியங்கள் பாற்பொங்கலாதியிட்டு மகிழ்வினோடுன்பூசனைவை பவமங்க ளச்சகுணத்திருச்சேவை போற்றுவோர்க்குத்தேசனைத்தும் பெறவளித்திட்டுன் கருணைக்கண்ணோக்கஞ் செலுத்தியென்றும்மாசனைத்துந் தவிர்த்தருள்வாய் சரண்சிரவைநகர்வீர மாச்சித்தாயே.10. விதுவேண்டும் பூரணமா ரருண்முகக்கண்பெற்றநின்பால் விவேகமின்றிஇதுவேண்டு மதுவேண்டு மென்றிரக்கேனடியேனுக் கெவையுந்தந்தேபொதுவேண்டும் புதுஞான நலமுமளித்தாள்வதுன்றன் பொறுப்பேவிண்ணோர்மதுவேண்டு மலர்ப்பொதுளார் கான்சிரவைநகர்வீர மாச்சித்தாயே.11. கோலமிகப் பொலிகொங்கு நாட்டினுக்கோர்முகமானக் குலவிச்சூலார்மாலமைபூந் துடவைகொண்மங்களச்சிரவை நகர்வீர மாச்சித்தாயைப்பாலனெனக் கைக்கொண்டப் பாலனெனப்புரிந்தருண்மெய்ப் பாலைவேண்டிச்சீலமுறு வான்கந்த சாமிதுதியோதுநர்மெய்த் திருவுள்ளாரேவாழி விருத்தம்.கொங்கமையுஞ் சிரவணநன் னகர்வாழிசிவபெருமான் குமரர்வாழிசங்கமைகைக் கரிவரதன் வாழியம்மையார்களின்பந் தழைத்துவாழியங்கமையா லயம்பசுக்க ளன்பர்மழைகற்புடைய ரரசர்வாழியெங்கமையு நலங்களெல்லாம் பல்லாண்டுவாழியின்ப மிசைந்துமாதோ.