SS
சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
(சிரவையாதீன அடியார்களிலொருவராகியதவத்திரு அரங்கமுத்து சுவாமிகள் அருளியது)1. கஞ்சத்தேன் உண்டுற்றே கவின் தரும் சுரும் பினம்காவூ டேபோய் ஓயாதே களியிசை பயில்தரல்போல்நெஞ்சத்தே வந்தித்தேன் நினைந்து உளம் தினம் தினம்நீயோர் சேமேல் வாராயோ நெடுவினை பொடிபடவேவஞ்சத்தே மிஞ்சுற்றார் மனம் துணிந்திடும் பவம்மாளா தோதான் ஓதாயே மலர்கணை தமைவிடுவேள்செஞ்சப்போர் மங்கத்தான் செயும் பெரும் கணின் வளம்தீயார் காணார் ஆவாரோ சிரவையில் வளர்சிவனே.2. பற்றற்றார் சித்தத்தே பரந்திடும் பெரும் பூதம்பாரா தேநாள் போலாமோ பரவிடு நிலையருள்வாய்சுற்றத்தார் கொத்துற்றே கணங்கிடும் கொடும் கபம்தோயாது ஓர்வாழ்வு ஈவோனே சுருதியின் முழுமுதலேகுற்றத்தாம் தக்கர்க்கே குறைந்திடும் சிரம் தரும்கோபா வேசா தீயாடீ குறுமுனி பணியொருவாசெற்றத்துஆம் அக்கப்போர் செயும் கள்அஞ்சு எயும திறம்தேவா நீதான் ஓதாயோ சிரவையில் வளர்சிவனே.3. அத்தத்தே பச்சைத்தாய் அமைந்திடும் கவின் கண்இங்குஆரா தேநாள் வீணாமோ அருள்ஒரு சிறிது இலையோமத்தத்துஏர் இச்சிப்பாய் மலம்செயும் பவம்தரும்வாதுஓ யாதோ மாதேவா மதிவளர் சடை முடியாய்நத்தத்தான் புடபத்தான் நசைந்திடும் பெரும் புகழ்ஞானா காரா மேலோனே நலமிகும் அடியவரேசித்தத்தே தித்திக்கா தினம் செபம் சொலும் தவம்தீரா தேவாழ் வாராநீள் சிரவையில் வளர்சிவனே.4. நிந்தித்தே வந்திட்டார் நிதம் திரிந்திடும் புரர்நீறா மாறே காணாநீ நிலமகள் துயர்களைவாய்வந்தித்தே நின்றிட்டே வரம் கொளும் பலன் களின்மாறா மாறா தேநாளும் வளர்பணி அதைவிழைவார்பந்தத்தே கொண்டு உய்க்கா பழம் பெரும் கரும் கொடும்பாசா காதா காமாரீ பதமலர் இணைதமையேசிந்திப்பார் கொந்துற்றே தினம் புகழ்ந்திடும் தமிழ்சேண்வாழ் வார்காது ஊடேபாய் சிரவையில் வளர்சிவனே.5. மன்றிற்போய் வென்றிட்டே மதம் கொளும் பெரும் தமிழ்வாணா கீரா காணாய்நீ மலிபொருள் எனும்ஒருவாநன்றிக்கே வித்திட்டார் நலிந்திடும் பவம் தினம்நாடா தேநீ போவாயோ நலம்மொரு சிறிது இலையோபன்றிக்கு ஓர் அம்பு உய்த்தே பணிந்திடும் தனஞ் சயன்பாலோர் பாசா பாராயோ பழவினை வலைகளைவாய்தென்றிக்கோன் மங்குற்றே சிரம் குனிந் திடும் பெரும்சீரார் ஓவா தேவாழ்வார் சிரவையில் வளர் சிவனே.6. அண்டத்தார் நின்றுற்றே யடைந்து அழும் தினம் தனில்ஆசு ஆர் சூர்மா போமாறே சுழல்விழி முருகு அருள்வோய்மண்டிப்போர் கண்டிட்டார் மலைந்து அலைந்திடும் புரர்வாயா லேயே தீயானார் மகிமைகள் புகழ்வனவோஉண்டிக்குஓர் எண்திக்கே உழன்றிடும் பெரும் பவம்ஓயா தோநீ ஓதாயோ உருவிலி எரிகணையைச்சிந்திக்கா புந்திக்கோர் சிவம் தரும் பரம் பொருள்சேவேறு பாராயோ சிரவையில் வளர்சிவனே.7. சந்தத்தால் முற்பட்டே தயங் கிடும் கரம் திகழ்சாமஅ தீதா தூயோனே தழல்நிகர் திருஉருவாபத்துஅத்தா பற்றுஅற்றார் பகர்ந்திடும் பதம் தரும்பாதா வேதா காணானே படிறனின் எதிர்வருவாய்நந்தத்தான் அத்திக்கோன் நயந்திடும் கவின்கொளும்நாதா நாடா தேநாளும் நலம் அழிதா உழல்வேன்சித்தத்தே தித்தித்தே செபம் செயும் தவம் பெறும்தீரா பேய்சூர் காடு ஆடீ சிரவையில் வளர்சிவனே.8. உள்ளத்தே மெள்ளத்தான் உவந்து இடம் பெறும் பரன்ஒரா தேன்நான் ஆவேனோ ஒருகணம் எதிர்வருவாய்கள்ளத்தேன் உய்யத்தான் கடும் சினம் தரும் புலன்காதா தேவீழ் நாள்ஏதோ கருணை ஓர் சிறிது இலையோவெள்ளத்தான் துள்ளுசீர் மினும் பிறை கொளுஞ்சடைமேவா வாழ்வுஈ தாதாவே விதிதலை பறிஅனகாதெள்ளுத்தேன் எள்ளுற்றே சிதைந் திடுஞ் செழுந்தமிழ்ச்சீரார் ஓவா தேவாழ்ஏர் சிரவையில் வளர் சிவனே.9. அன்னத்தான் வெண்நத்தான் அகம் பவம் கடிந்திடும்ஆதி வேதஅ தீதாநீ அருள்புரி பவன் எனவேசொன்னத்தால் துன்னுற்றேன் துவந்துவம் செய்யும் பிணிதோயாது ஆம்வாழ்வு ஈயாயேல் துணைபிரிது எவர்உளரோஇன்னற்போர் பண்ணித்தான் இரும்பதம் தரும் குணம்ஏனோ கூறாய் மாதேவா இதில் ஒரு பெருமையதோதென்னற்கே தின்னத்தான் செலும் தினம் கணின் முனம்சேரா யோநீ தேவேசா சிரவையில் வளர்சிவனே.10. வந்திப்பார் நெஞ்சத்தே வளர்ந்து இலங்கிடும் பெரும்மாயஅ தீதா தூயோனே வரம் இதை அருள்புரிவாய்பந்திப்பார் மிஞ்சுற்றே பயம் கொளும் தினங் கணில் பாரா தேநான் போமாறே பரகத உதவிடுவாய்உந்திப்பூ நந்தர்க்கே உவந்திடும் பதம் தரல்ஓதா நாளே வீணாமே உலகியல் ஒலிதருமோசிந்தித்தே கஞ்சத்தால் தினம் புணர்ந்திடுஞ் செயல்தேயா தோர்வாழ் சீரேசால் சிரவையில் வளர்சிவனே.11. வெண்புட்கோ செம்புட்கோ விடைத்துபள் பறந்து விண்மேலோ கீழோ காணாதாம் விரிசுடர் வடிவுடையோய்கண்புட்கோ ஐங்கைக்கோ கனிந்திடும் பெரும்பரன்காலஅ தீதா வாராயோ கனவிலும் உனைமறவேன்பண்பெற்றே விண்டு உற்று ஓர் பதம் அதைத் தினம் தினம்பாடா வாழ்வே ஈவோனே படிறனின் எதிர்வருவாய்திண்பொற்றேர் கண்டிட்டே சிரம்கரம் கொண்டு அன்பு டன்சேர்வார் ஆனா சீரேநீள் சிரவையில் வளர்சிவனே.12. ஒற்றிக்கோ விற்றுக்கோ உணர்ந்து அடைந்தனன் சரண்ஊரா ராலே ஆகாதாம் ஒருபயன் அருள்பவனேதிற்றிக்கே நந்துற்றே திரிந்திடும் கொடும் பவம்தேவா நீதான் ஓவாயோ திருமிகு முழுமுதலேபற்றுற்றே பச்சைத்தாய் பகிர்ந்துடன் விளங்கு எழில்பாரா தேநாள் வீணாமோ பகர்மொழி வினவிலையோசெற்றற்றார் பற்றற்றார் தினம் செபந்தபஞ் செயும்சீரால் ஓவா தாராவாழ் சிரவையில் வளர்சிவனே.13. பந்தத்தால் நொந்துற்றே பயந்து நெஞ்சு உடைந்தனன்பாராய் காவாய் காபாலீ பணிபவர் துணைகளை வோய்சிந்தித்தே வந்தித்தோர் திரும்பவும் பிறந்திடும்தீதோர் ஆகா மாறேநீ திருவருள் புரிகிலையோபந்திக்கே அம்பு உய்த்தான் பகர்ந்திடும் வணம்செலும்பாதா கோலே யீவோனே பலமுறை உரைசெயவோசெந்திற்கே இன்றொப்பார் செகம் புகழ்ந்திடும் கவின்சீரால் ஏர்சேர் மாவாழ்வாம் சிரவையில் வளர்சிவனே.