SS
சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
(கவியரசு கு. நடேசுக்கவுண்டர் இயற்றியது)எழுசீர் ஆசிரிய விருத்தம்பண் - புறநீர்மை1. பொடிகமழ் நுதலும் திலதமும் கருணைபொங்கிய பங்கய விழியும்கெடிகமழ் பவள வாய்ஒளிர் முத்தம்கோத்தன முறுவலுங் காட்டித்தூடிகம ழிடையுந் துணை முலைக் குடமும்சுரிகுழற் கற்றையும் சுமந்தோய்கடிகமழ் சோலைச் சிரவண புரம்வாழ்கந்தனென் உளங்கவர்ந் தானே.2. இளவள ஞாயி றொளிதிரு மேனியனகணின் றெங்கணும் பரவத்தளவள வரும்பு முறுவலின் நிலவாற்சந்திர காந்தநீர் ததும்பப்பளபள வெனும்வேற் படையர சேந்திப்பசுமயின் மிசையெதிர் தோன்றிவளமள விலலாச் சிரவண புரம்வாழ்மைந்தனென் மணங்கவர்ந் தானே.3. பவளமால் வரைமேற் கவிழுமிந் திரவிற்பான்மையின் பன்மணி மாலைதுவளவமா லகற்றுஞ் சுந்தர நீறும்தூமணக் கலவையுந் துதையக்கவளமா களிறுந் தவளமா லேறுந்கண்டுள நாணவே நடந்து குவளமார் புகழ்சேர் சிரவண புரம்வாழ்குமரனென் னுளங்கவர்ந் தானே.4. நங்கைமீர் ஞால நடையறி யாதநாரியென் றேசன்மின் ஆசைபொங்குமேல் நாணம் போமெனல் காமம்பொருந்தினா ரன்றியா ரறிவார்சிங்கமீப் போர்த்த வருடையின் குருளைதினகர னெனவொளிர் வடிவேல்அங்கைமீ தேந்திச் சிரவண புரம்வாழ்அழகனென் னுளங்கவர்ந் தானே.5. கசந்தது பாலும் கன்னலும் பாகும்கண்டும்வண் டெச்சிலும் அமுதும்பசந்தது மேனி வசந்தமென் காலும்பாய்புலி போலவே சீறும்அசந்ததி யாக்கை மென்மலர்ப் பள்ளிஅழலென வெதும்பிடுஞ் சேவற்றுசந்தனை யேந்திச் சிரவண புரம்வாழ்தோன்றலென் னுளங்கவர்ந் தானே.6. மற்றொரு வரையான் பற்றிலேன் மறந்தும்வாயவன் பேரையே வாழ்த்தும்சொற்றமிழ் மாலை தொடுக்கிலேன் பிறர்க்குத்தொண்டுபூண் டவனையே தொழுவேன்கற்றதன் பயனும் நற்றவப் பயனும்கைவந்த தெனவுளங் களிப்பேன்நற்றவர்க் கரசாய்ச் சிரவண புரம்வாழ்நம்பியென் னுளங்கவர்ந் தானே.7. பொன்னுயர் பொருப்போ செம்மணித் திரளோபொருகடற் பவளத்தின் குவையோமின்னொளிப் பிழம்போ என்னநன் மேனிவிளங்கிடக் களங்கறுந் தொண்டர்இன்னுயிர்த் துணையாய் விழைவர மளித்தேஏந்திழை யாரிரு வருடன்தென்னுயர் பொழில்சூழ் சிரவண புரம்வாழ்சேந்தனென் னுளங்கவர்ந் தானே.8. இந்திர நீலப் பொருப்பின்மே லிரவிஇருந்தது போன்மயின் மீதுவந்திர வலர்க்குப் பேரருள் வழங்கும்வள்ளல் உள் ளினரிடர் நீக்கும்மந்திரம் மணிநன் மருந்துபைம் புனவர்மடந்தைகோன் பாளைமுத் துதிர்க்கும்கந்தியம் பொழில்சூழ் சிரவண புரம்வாழ்கந்தனென் னுளங்கவர்ந் தானே.9. நெக்குநெக் குருகித் தழலுறு மெழுகாய்நினைபவர் காயமே கோயிற்புக்குமிக் கின்பந் தரும்பரம் பொருளிப்புன்மையேன் கன்மனம் உருக்கிஇக்குநெக் கொழுகுஞ் சாறெனத் தமிழ்ப்பாஇயம்புவித் தேற்றருள் பெருமான்மொக்குநெக் களியுண் சிரவண புரம்வாழ்முருகனென் னுளங்கவர்ந் தானே.10. வடிதமிழ்ப் புலவர் வியப்புறும் வண்ணம்வண்ணநற் கவிசொல வல்லான்பொடிதவழ் நெற்றிக் கந்தசுவாமிப்பொய்யிலா முனிவரன் போற்றத்தடிதக வழிக்கும் மதுகொலை யொழித்துத்தண்ணருள் வளர்க்கும் வேளாளக்குடிதழை வுறுசீர்ச் சிரவண புரம்வாழ்குமரனென் னுளங்கவர்ந் தானே.