SS
சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சூரியன் துதிகாசினி இருளை நீக்குங் கதிரொளியாகி யெங்கும்பூசனை யுலகோர் போற்றப் புசிப்போடு சுகத்தை நல்கும்வாசியே ழுடைய தேர்மேன் மகாகிரி வலமாய் வந்ததேசிகா வெனைரட் சிப்பாய் செங்கதி ரவனே போற்றி.சந்திரன் துதிஅலைகட லதனி னின்று மதியும்வந் துதித்தபோதுகலைவளர் திங்களாகிக் கடவுள ரெவரு மேத்துஞ்சிலைமுத லுமையாள் பங்கன் செஞ்சடைபிறையா மேருமலைவல மாகவந்த மதியமே போற்றி போற்றி.செவ்வாய் துதிவசனநல் தைரியத்தோடு மன்னர் சபையில் வார்த்தைபுசபல பராக்ர மங்கள் போர்தனில் வெற்றியாண்மைநிசமுட னவரவர்க்கு நீணிலந் தனில ளிக்குங்குலனில மகனாஞ் செவ்வாய்க் குரைகழல்போற்றி போற்றி.புதன் துதிமதனநூல் முதலா நான்கு மறைபுகல் கல்விமானும்விபுமுட னவரவர்க்கு விஞ்ஞைகள ருள்வெண் டிங்கள்கதனுமா நிலத்தோ ரிச்சை சுகம்பல கொடுக்க வல்லன்புதன்கவி புலவன் சீர்சால் பொன்னடி போற்றி போற்றி.குரு துதிமறைமிகு கலைநூல் வல்லோன் வான வர்க் கரசன் மந்திரிநறைசொரி கற்பகப்பொன் னாட்டினுக் கதிபனாகிநிறைதனஞ் சிவிகை மண்ணி னீடுபோகத்தை நல்கும்இறையவன் குருவியாழ னிருமலர்ப் பாதம் போற்றி.சுக்கிரன் துதிமூர்க்கவான் சூரன் வாணன் முதலியோர் குருவாய் வையங்காக்கவான் மழைபெய்விக்குங் கவிமகன் கனகமீவோன்றீர்க்கவா னவர்கள் போற்றச் செத்தவர் தமையெ ழுப்பும்பார்க்கவன் சுக்கராச்சாரி பாதபங்கயமே போற்றிசனி துதிமுனிவர்கள் தேவ ரேழு மூர்த்திகள் முதலியோர்கள்மனிதர்கள் சகல வாழ்வுன் மகிமைய தல்லா லுண்டோகனிவுள தெய்வ நீயே கதிர்சேயே காக மேறுஞ்சனியனே யுனைத் துதிப்பேன் றமியனேற் கருள்செய்வாயே.ராகு துதிவாகுவோர் நெடுமான் முன்னம் வானவர்க் கமுத மீயும்போகுமக் காலையுன்றன் புணர்பினாற் சிரமேயற்றுப்பாகுசேர் மொழியாள் பங்கன் பான்கையில் மீண்டு பெற்றராகுவே யுனைத் துதிப்பேன் இக்கணமி ரட்சிப்பாயே.கேது துதிபொன்னையி னுரத்திற் கொண்டோன் புலவர்தம் பொருட்டலாகும்தன்னையே கடைந்து முன்னந் தண்ணமுதளிக்க லுற்றபின்னைநின் கரவானுண்ட பெட்பினிற் சிரம் பெற்றுய்ந்தாய்என்னையாள் கேதுவேயிவ் விருநிலம் போற்றத்தானே.ராகு துதிவாகுவோர் நெடுமான் முன்னம் வானவர்க் கமுத மீயும்போகுமக் காலையுன்றன் புணர்பினாற் சிரமேயற்றுப்பாகுசேர் மொழியாள் பங்கன் பான்கையில் மீண்டு பெற்றராகுவே யுனைத் துதிப்பேன் இக்கணமி ரட்சிப்பாயே.கேது துதிபொன்னையி னுரத்திற் கொண்டோன் புலவர்தம் பொருட்டலாகும்தன்னையே கடைந்து முன்னந் தண்ணமுதளிக்க லுற்றபின்னைநின் கரவானுண்ட பெட்பினிற் சிரம் பெற்றுய்ந்தாய்என்னையாள் கேதுவேயிவ் விருநிலம் போற்றத்தானே.