SS
சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
நன்மையுண்மை வீரமீரம் உருவவெடுத்தால் யாரடா?நான்கு வேதம் காட்டுகின்ற பிரம்மமது ஏதடா?தாரகமாய் ஆகுகின்ற பேருமெது பாரடாராமராம ராமராம ராமவென்று தேரடாநேர்மையும் அளித்திடும் நீதியும் அளித்திடும்தீமையை எதிர்த்திடும் வீரமும் அளித்திடும்தீயவரை வெறுத்திடா குணமதும் கொடுத்திடும்ராமராம ராமராம ராமவென்ற நாமமேவென்ற நாமம் ஏதடா? வெல்லும் நாமம் ஏதடா?வெள்ளையனை விரட்டியவர் சொன்ன நாமம் ஏதடா?வெள்ளையுள்ளம் தந்திடும் நாமமெது தேரடாராமராம ராமராம ராமவென்று கூறடாராமராம ராமராம ராமவென்று கூறடாதொட்டசெயல் அத்தனையில் வெற்றிபெற்று வாழடாராமராம ராமராம ராமவென்று கூறடாதொட்டதெல்லாம் வெற்றியாகி வெற்றிவாகை சூடடாராமராம ராமராம ராமவென்று கூறடாதிண்மையுடல் மென்மைகுணம் கொண்டு மண்ணில் வாழடாமனநோயும் அற்றிடும் உடல்நோயும் அற்றிடும்ராமராம ராமராம ராமவென்று கூறடா நல்லவனாய் வாழவும் யோகம் வேணும் காணடாசத்தியனாய் வாழவும் யோகம் வேணும் காணடாசெல்வனாக வாழ்வும் யோகம் வேணும் காணடாயோகம் கொள்ள ராமராம ராமவென்று கூறடாராமராம ராமராம ராமவென்று கூறுவோன்ராமராம ராமராம ராமர்போல ஆகுவான்ராமராம ராமராம ராமர்போல ஆனபின்ராமராம புண்ணியமாம் கிருஷ்ணராவும் ஆகுவான்கிருஷ்ணர்போல ஆவதும் கசக்குமோ குலாமரேலட்டுதின்ன ஆசைகொண்ட கலியுகக் குலாமரேமெய்வலிமை தந்திடும் மெய்ஞானம் தந்திடும்மெய்யான தெய்வத்தை கண்முன்னும் தந்திடும்மெய்மறைக்கும் பொய்களை அறுத்திடும் அறுத்திடும்மெய்யதான ராமராம ராமவென்ற நாமமேவிபத்துகள் தடுத்திடும் சூனியம் முறித்திடும்வினைகளில் தீயதை விரட்டியும் அடித்திடும்தவறுகள் செய்வதை தடுத்திடும் திருத்திடும்நன்மைசெய்ய வைத்திடும் ராம ராமராம நாமமே ஓம்நமோநாராயணாய!!