SS
சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
காப்பு வெண்பாகணபதியூர்க் கோயில் கவின்றடியார் போற்றும்பணபதிமே னிர்த்தப் பதந்தோய்- குணபதியாம்வேணுகோ பாலனிசை விள்ளவிரா மானந்தன்மாணுறுசெம் பொற்பதங்கா வல்.உற்றாரும் பெற்றாரும் மற்றாரு முலகத்துன்னையல்லா தில்லையென்னு முளத்துரமீங் களித்தும்பற்றாரு மேடணைப்பேய் பிடித்தாட்ட நெஞ்சம்பகைப்பாருள் ளமையவைத்துப் படுத்தன்மா பேயோமுற்றாருங் கருணையுளாய் பகைத்தமர்செய் திட்டமூர்க்கருக்கு மருள்புரிந்த முறைமறைந்தாய் கொல்லோசற்றாரு நோக்களிப்பாய் கணபதியூர்க் கோயில்சார்வேணு கோபால சாமியருட் சுடரே.விதியனந்த முடலளிக்கக் கொண்டுவினைக் காற்றால்விண்ணுடன்மண் பாதாளத்தில் வீழ்ந்துசுழன் றவமேநிதியனந்தஞ் சதியனந்தம் பெற்றுமிகச் செருக்கிநிலையழிந்தேன் பாலவினை நீக்கியுல கிடந்தாம்பதியனந்தத் திசைகோயி லெங்கணுஞ்சென் றுனையேபாடியருட் சித்திவிளை யாடிடுமா றருளச்ததியனந்த சயனமுளாய் கணபதியூர்க் கோயில்சார்வேணு கோபால சாமியருட் சுடரே.அண்டபிண்ட மருவுசரா சர நிறைக ளனைத்துமளந்தநின்றாண் மலருடனங் கவைகவள மெனவேயுண்டருளுன் வாய்மலருங் கன்னியமாய் நிற்குமுரமுடையேன் கொல்லோவென் னுடலியிர்ற் கலந்துகொண்டமையுன் னருள்விளக்க மென்னகத்துட் காணக்கூட்டிடுவாய் வைகுந்த நாட்டிடுவாய் சரணம்தண்டலைதோய் வண்டிசையார் கணபதியூர்க் கோயில்சார்வேணு கோபால சாமியருட் சுடரே.துட்டர்களை நிக்கிரகஞ் செய்தலுஞ்சிட் டர்களைச்சுகமுறப்பா லனஞ்செயலுந்த தொன்மையகா லத்தேற்பட்டவரு ணீதியதை யின்றிசையுங் கலியாம்பாதகன்மாற் றிடும்வலிமை படைத்தன்னோ வவனுக்கிட்டமிசைந் தக்கிரமஞ் செய்தியென வரமீந்தெமையலைக்கத் திருவுள்ள மிசைந்தனையோ வருண்மெய்ச்சட்டமிசைத் தாண்டருள்வாய் கணபதியூர்க் கோயில்சார்வேணு கோபால சாமியருட் சுடரே.உள்ளுரிமை பெற்றமையுன் னொளிமணிமே னியைக்கண்டுவந்துருகிக் களிப்புடனின் னோப்பிலருட் புகழ்ச்சீர்விள்ளுரிமை சற்றளித்தா யுலகிலுயிர்த் திரங்கள்வினையகன்றன் பகையுமின்ப விளையாட லியற்றக்கொள்ளுரிமை யருள்விளக்க மீந்தருளச் சிறிதுட்குறித்தருள்வா யடைக்கலமென் குற்றமு தகலத்தள்ளுரிமை கொண்டணியார் கணபதியூர்க் கோயில்சார்வேணு கோபால சாமியருட் சுடரே.பொய்வழக்கோ ரம்புலகத் துணிந்திடும்பா தகராற்புழுங்கியபர் வுற்றிடுமென் புந்திமுடி மீதிற்பைவளருந் துளைவிடப்பற் காளிங்க நாமப்பணிமுடிமே னடம்புரிதாள் பதித்துலகோ ரறியாத்தெய்வரக சியங்களெலா முணர்த்தியெனை யாளுஞ்செவ்வியிதுன் பெருங்கருணைத் திருவுளர்ந் ராதோதைவகிமா தவச்சுதனே கணபதியூர்க் கோயில்சார்வேணு கோபால சாமியருட் சுடரே.வாதனையே கொடுத்துலகிற் கெடுத்துமடித் திடவேமாயைதுணிந் திட்டதருள் வள்ளானீ யென்றுஞ்சோதனையே புரிந்திடவுட் கருதினையே லெவர்பாற்சோற்றிடுவேன் கதியென்னப் பற்றிடுவே னின்பசாதனையே யன்றிமுதிர் சாத்தியமும் வழங்கித்தரணியும்வா னமும்போற்றத் தக்கபுக ழிசைத்துத்கருதியென்னப் பற்றிடுவே னின்பதாதனையேன் றருள்சரணங் கணபதியூர்க் கோயில்சார்வேணு கோபால சாமியருட் சுடரே.புண்ணிறைந்த யாக்கையரு வருப்பகல மூடும்புறந்தோல்கண் டுருகிமென் புந்தியைமெஞ் ஞானவிண்ணிறைந்த வியற்கையின்பம் பெருக்கெடுத்தள் ளூறுன்விரிந்தவருட் பெருஞ்சோதி மேனியைக்கண் டுருகிக்கண்ணிறைந்த வானந்த நீரின்முழுக் காட்டுங்கரையில்பெருங் காதலுறக் கடைக்கணித்தான் டருள்வாய்தண்ணிறைந்த மதிச்சிகரிக் கணபதியூர்க் கோயில்சார்வேணு கோபால சாமியருட் சுடரே.வினைத்தடையா லுனையடைய முடியாதே வாடிவெதும்புகின்றே னாயேனுள் விருப்பமொத்தூன் னுளத்தேநினைத்தருளி லக்கணத்தே யென்மாயை கன்மம்நீங்கிடுமே நன்மையெலா மோங்கிடுமே யுலகிலனைத்துயிர்க்கு மூட்டியுறக் காட்டுமூனக் கடியேனறினித்தே னன்றுவழக் காற்றினுன் னருட்சீர்தனைத்துணைகொண் டுவந்தவருள்வாய் கணபதியூர்க் கோயில்சார்வேணு கோபால சாமியருட் சுடரே.மழையிசையுந் திருமேனி கொண்டுதிருப் பாதம்வணங்கடியா ரானபயிர் வகைகளிக பரத்துத்தழையிசையுந் திடப்புரிவான் கணபதியூர்க் கோயில்சார்வேணு கோபால சாமியருட் சுடரைவிழையிசைதோய் சிரவைபிரா மானற்த குருதாள்வேண்டுகந்த சாமியன்பில் விரும்பியணி பதிகம்குழையிசையுள் என்பதனா லேத்தெடுப்பார் பாலோர்குறையும்ணு காதுசுக நிறையுநிச மாதோ-தவத்திரு. கந்தசாமி சுவாமிகள்