குழல் செய்த புண்ணியம் நான்செய்ய வில்லையா - அழகு குருவாயூர் கண்ணனே நீபதில் சொல்லைய்யா (குழல்)
உதட்டோடு உறவாடி இசைதந்திடும் -குழல் உயர்வான புகழ்பாடி தன்னை மறந்திடும் குழலாக எனைமாற்றி இசை கூட்டுவாய் - அந்த இசையோடு உனைபோற்ற வழிகாட்டுவாய் (குழல்)
பசுவோடு கன்றெல்லாம் ஒன்றாகியே - உன் பதம்நாடி தினம்தேடும் கதை என்னவோ பாலோடு இனிதான சுவைவெண்ணையும் -முராரி புகழ்கேட்டு உருகுவதை நான் சொல்லவோ (குழல்)
நீ நினைத்தால் எல்லாமே கணநேரம்தான் -மன நிம்மதியும் உனைநினைக்க எனைசேரும்தான் மண்உண்டு மண்காத்த திருமாதவா - அழகு மலர்பாதம் தனைதந்து எனைகாக்கவா (குழல்) |