|
யத்பாத கஞ்ரஜஸா பரிபூஷிதாங்கா: யத்பாத பத்ம மதுபாயித மானஹாயாயே! யத்பாத பத்ம பரிகீர்த்தன ஜீர்ணபாசஸ் தத்தாஸனம் துரித கானன தாவபூதம்:
ராகவேந்திரரின் பாதகமலங்களைப் பூஜித்தும், குருராயர்மீது மாறாத பக்திகொண்டும், ஸ்வாமிகளின் ஸ்தோத்திரங்களை மனனம் செய்தும், கீர்த்தனைகள் பாடிக்கொண்டும், நித்தம் அவரே கதியென்று அவரின் மகாத்மியங்களை பிறருக்கு எடுத்துக்கூறியும் பக்தியில் முதிர்ந்திருக்கும் மேன்மையான அந்த பக்தர்களைக் கண்டாலே, இப்பிறவி மட்டுமன்றி மறுமையிலும் சுகத்தை அளிக்கும் ராகவேந்திரரின் பக்தர்களைக் காண்பதே சிறப்புடையதாக இருக்கின்ற போது, குருவினது தரிசனம் இன்னுமின்னும் பலப்பல மடங்கு உயர்ந்தது என்பதனை இந்த ஸ்லோகம் நமக்குணர்த்துகிறது. |
|
|