அன்பர்கள் இடரை அகற்றிடவேண்டி அயோத்தியில் வந்தது ஸ்ரீ ராமஜயம் அசுரரை அழித்து அறந்தழைத்தோங்க அமைதி அளித்தது ஸ்ரீ ராமஜயம் ஆதவன் மரபில் அழகிய உருக்கொண்டு அவதரித்தது ஸ்ரீ ராமஜயம் ஆரணம் கமழும் வேதமாமுனிவன் அருளைப் பெற்றது ஸ்ரீ ராமஜயம் இருள் வடிவான அலகையைக்கொன்று மருள் ஒழித்தது ஸ்ரீ ராமஜயம் இருடியின் மகத்தை இலக்குவனோடு இமைபோல் காத்தது ஸ்ரீ ராமஜயம் ஈசனை ஒத்தகௌதமன் இல்லாள் இடரை ஒழித்தது ஸ்ரீ ராமஜயம் ஈசனோடு இந்திரன் இமையவர் எவரும் ஏத்தநின்றது ஸ்ரீ ராமஜயம் உண்மையின் வடிவாய் பீஜாக்ஷரத்தை ஓர்வாய் என்றது ஸ்ரீ ராமஜயம் <உறுதியை கொடுத்து மறதியைகெடுத்து உலகத்தை காப்பது ஸ்ரீ ராமஜயம் ஊனமில் உடலும் உயரிய பொருளும் உடனே தருவது ஸ்ரீ ராமஜயம் ஊமைபோன்ற உயிர்களும் பேசும் உயர்வை அளிப்பது ஸ்ரீ ராமஜயம் என்றும் நமக்கு இன்பம் அளித்து இங்கே இருப்பது ஸ்ரீ ராமஜயம் எமக்கு இது சாது பிறர்க்கு இது தீது என்பது அற்றது ஸ்ரீ ராமஜயம் ஏதுமற்று ஏங்கி நிற்போர் தமக்கு ஏற்றம் தருவது ஸ்ரீ ராமஜயம் ஏனஉருகொண்ட வனியை ஏந்தி இருக்கையில் வைத்தது ஸ்ரீ ராமஜயம் ஐம்பூதங்களை அடிமையாய்க் கொண்ட அனுமன் உரைத்தது ஸ்ரீ ராமஜயம் ஐம்முகத்தவனும் பங்கயத்தவனும் அமரரும் உரைப்பது ஸ்ரீ ராமஜயம் ஒருவழி நில்லாது அலையுறு மனத்தை ஒருவழிப்படுத்தும் ஸ்ரீ ராமஜயம் ஒருவனும் யான் எனநினை என்று உண்மை உணர்த்தும் ஸ்ரீ ராமஜயம் ஓங்காரப் பொருளே உண்மையின் வடிவாய் ஓர்வாம் என்பது ஸ்ரீ ராமஜயம் ஓவியம்தனிலும் காவியம் தனிலும் ஊக்கமளிப்பது ஸ்ரீ ராமஜயம் ஒளவையைப்போன்று அருணகிரிக்கும் அறத்தை உரைப்பது ஸ்ரீ ராமஜயம் ஒளடதம் போன்று படிபோர் தமக்கு அனைத்தும் அளிப்பது ஸ்ரீ ராமஜயம்.