SS தேவி நவரத்ன மாலிகா ஸ்தோத்திரம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> தேவி நவரத்ன மாலிகா ஸ்தோத்திரம்
தேவி நவரத்ன மாலிகா ஸ்தோத்திரம்
தேவி நவரத்ன மாலிகா ஸ்தோத்திரம்

1. ஹார நூபுர கிரீட குண்டல விபூஷிதாவயவ சோபினீம்
காரணேச வர மௌலிகோடி பரிகல்ப்யமான பத பீடிகாம்
காலகால பணி பாசபாண தநுரங்குசா மருண மேகலாம்
பாலபூதிலக லோசனாம் மநஸி பாவயாமி பரதேவதாம்

பொருள்: ஹாரம், கொலுசு, கிரீடம், குண்டலங்கள் அவயவங்களை அலங்கரிக்க பிரகாசிப்பவளும்; இந்திரன், பிரம்மா முதலிய தேவர்களின் கிரீடங்களால் வணங்கப்பட்ட திருவடிகளை உடையவளும்; மிகக் கருத்த நாகங்கள், பாசம், வில், அங்குசம், சிவந்த ஒட்டியாணம் ஆகியவற்றைத் தரிப்பவளும்; திலகம் போன்ற நெற்றிக் கண்ணினை உடையவளுமான பர தேவதையை மனதால் வணங்குகிறேன்.

2. கந்தஸார கனஸார சாருநவ
நாகவல்லிரஸ வாஸிநீம்
ஸாந்த்யராக மதுராதராபரண
ஸுந்தரானன சுசிஸ்மிதம்
மந்தராயத விலோசனா மமலபால
சந்த்ர க்ருத சேகரீம்
இந்திரா ரமண ஸோதரீம் மனஸி
பாவயாமி பரதேவதாம்

பொருள்: மணமுள்ள வாசனைப் பாக்கு, கருப்பூரம் இவற்றுடன் கூடிய அழகானதும் துளிரானதுமான வெற்றிலையை போட்டுக் கொண்டதால் ஏற்படும் வாசனையை உடையவளும்; சந்தியா காலம் போன்ற அழகான சிவந்த உதடுகளை உடையவளும், நீண்ட கண்களை உடையவளும் களங்கமில்லாத இளம் பிறை சந்திரனை தலையில் அணிந்து கொண்டவளும், லக்ஷ்மி நாயகனான மஹாவிஷ்ணுவின் சகோதரியுமான பரதேவதையை மனதினால் தியானிக்கிறேன்.

3. ஸ்மேர சாரு முக மண்டலாம்
விமலகண்ட லம்பிமணி மண்டலாம்
ஹாரதாமபரி சோபமான
குசபார பீரு தனு மத்யமாம்
வீரகர்வஹர நூபுராம் விவித
காரணேச வர பீடிகாம்
மார வைரிஸஹ சாரிணீம் மனஸி
பாவயாமி பரதேவதாம்

பொருள்: புன்முறுவல் பூத்த வதனமும், மாசற்ற கன்னப்பிரதேசமும், அணிகலன்களாலும் ஹாரங்களாலும் அணி செய்யப்பட்டதும், மிகப் பருத்தவையுமான தனங்களின் பாரத்தினால் வருத்தப்படும் நூல் போன்ற இடையே உடையவளும், வீரர்களின் கர்வத்தை அடக்குவது போன்ற கொலுசுகளைத் தரித்தவளும், பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், சதாசிவன் ஆகியோரைத் தனது சிம்மாசனத்தின் கால்களாய்க் கொண்டவளும், மன்மதனுடைய விரோதியான பரமசிவனின் தர்மபத்தினியுமான பர
தேவதையை மனதார ஸ்மரிக்கிறேன்.

4. பூரி பார தர குண்டலீந்த்ரமணி
பத்த பூவலய பீடிகாம்
வாரிராசி மணி மேலாவலய
வஹ்னி மண்டல சரீரிணீம்
வாரிஸாரவஹ குண்டலாம்
ககனசேகரீஞ் ச பரமாத்மிகாம்
சாரு சந்த்ர ரவி லோசனாம்
மனஸி பாவயாமி பரரேதவதாம்

பொருள்: பூமி பாரத்தைச் சுமக்கும் ஆதிசேஷனின் மணிபதித்த உலக உருவான பீடத்தை உடையவளும், கடலில் உண்டாகும் விசேஷ மணிகளாலான ஒட்டியாணத்தை தரித்தவளும், அக்னி மண்டலத்தையே சரீரமாக கொண்டவளும், கடலின் சாரமான குண்டலத்தை அணிபவளும், ஆகாயமளாவிய சிரஸையுடையவளும், எங்கும் நிறைந்த பரமாத்மா (காற்று) எனப் போற்றப்படுபவளும், அழகிய சூரிய சந்திரர்களையே தன்னிரு விழிகளாகவுடையவளுமான பரதேவதையை மனதால் துதிக்கிறேன்.

5. குண்டல த்ரிவித கோண மண்டல
விஹார ஷட்தல ஸமுல்லஸத்
புண்டரீக முக பேதினீம் தருண
சண்ட பானு தடிதுஜ் ஜ்வலாம்
மண்டலேந்து பரிவாஹிதாம்ருத
தரங்கிணீ மருணரூபிணீம்
மண்டலாந்தமணி தீபிகாம் மனஸி
பாவயாமி பரதேவதாம்

பொருள்: ஸ்ரீசக்ரத்தில் பிந்துவான முக்கோணம், அதைச் சுற்றியுள்ள ஆறு இதழ்களில் பிரகாசிக்கிறவளும் தாமரையை நாணித்தலைகுனிய வைக்கும் முக வசீகரமும் ஒளியும் உடையவளும், சூரியனின் காந்திக்கும் மின்னலுக்கும் ஒப்பானவளும்,
சந்திர மண்டலத்திலிருந்து பீறிடும் அமிர்தமயமான கிரணங்களை நிகர்த்தவளும், சிவந்த உருவத்தை உடையவளும், வட்டமாய் மறைந்த தீப வரிசைகளைக் கொண்டவளுமான பர தேவதையை மனதில் தியானிக்கிறேன்.

6. வாரணானன மயூரவாஹமுக
தாஹவாரண பயோதராம்
சாரணாதி ஸுர ஸுந்தரீ சிகுர
சோகரீக்ருத் பதாம்புஜாம்
காரணாதிபதி பஞ்சக ப்ரக்ருதி
காரண ப்ரதம மாத்ருகாம்
வாரணாந்தமுக பாரணாம் மனஸி
பாவயாமி பரதேவதாம்

பொருள்: யானைமுகன், மயில் வாகனன் ஆகியோரின் தாகத்தைத் தீர்ப்பதற்காக ஞானப் பால் கொடுத்த தனங்களை உடையவளும், தேவமகளிர் பாதத்தில் விழுந்து வணங்கும் போது அவர்களின் திரு முடிகளால் ஸ்பரிசம் செய்யப்பட்ட திருவடிகளை உடையவளும், பிரும்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், சதாசிவன் என ஐந்து சிருஷ்டித் தொழில்களை செய்வோரை இயக்கி வைப்பவளும், ஆதி மாதாவும் விநாயகரின் முகத்தில் மகிழ்ச்சி தோன்றிடச் செய்பவளுமான பரதேவதையை மனதால் துதிக்கிறேன்.

7. பத்மகாந்தி பத பாணிபல்லவ
பயோதரானன ஸரோருஹாம்
பத்மராகமணி மேகலாவலய
நீவி சோபித நிதம்பினீம்
பத்மஸம்பவ ஸதாசிவாந்தமய
பஞ்சரத்ன பத பீடிகாம்
பத்மினீம் ப்ரணவருபிணீம் மனஸி
பாவயாமி பரதேவதாம்

பொருள்: தாமரையைப் போன்ற தளிர்க் கரங்களும் பாதங்களும் உடையவளும், பதுமராக மணியினாலான ஒட்டியாணம் அணிந்தவளும் புடவை முடிச்சுடன் கூடிய இடுப்பினை உடையவளும், பிரும்மா முதல் சதாசிவன் வரையான பஞ்ச மூர்த்திகள் தாங்கும் சிம்மாசனத்தை உடையவளும், லக்ஷ்மியும், ஓங்கார வடிவினளுமான பர தேவதையை மனதால் வணங்குகிறேன்.

8. ஆகம ப்ரணவ பீடிகா மமல
வர்ண மங்கல சரீரிணீம்
ஆகமாவயவ சோபினீ மகில
தேவஸாரக்ருத சேகரீம்
மூலமந்த்ர முகமண்டலாம் முதித
நாதபிந்து நவயௌவனாம்
மாத்ருகாம் த்ரிபுரஸுந்தரீம் மனஸி
பாவயாமி பரதேவதாம்

பொருள்: வேதத்தையும் பிரணவத்தையும் தனது பீடமாய் உடையவளும், அகரம் முதலான 51 எழுத்துகளையும் தனது மங்கள உருவாயுடையவளும், ஆகமங்களையே தன்னுடைய அவயவங்களாகக் கொண்டு ஒளியுடன் விளங்குபவளும், எல்லா வேதங்களில் முடிவுப் பொருளாக உருக்கொண்டவளும், மூல மந்திரமெனப்படும் ஸ்ரீ வித்யா மந்திரமே தனது முக மண்டலமாயுள்ளவளும், நாதம் பிந்து இரண்டும் இணைந்த நாதபிந்து வடிவமாயுள்ளவளும், தினம் தினம் புதிதாகத் தெரியும்
யௌவனத்தையுடையவளும், அட்சரமாயும், திரிபுர சுந்தரி என பெயருள்ளவளாயும் உள்ள பரதேவதையை மனதால் நமஸ்கரிக்கிறேன். இந்த ஸ்லோகத்தில் அன்னையின் மந்திர மகிமை மிகவும் விசேஷமாகக் குறிப்பிடப்படுகிறது.

9. காலிகா திமிர குந்தலாந்த கன
ப்ருங்க மங்கல விராஜினீம்
சூலிகா சிகர மாலிகாவலய
மல்லிகா ஸுரபி ஸெளரபாம்
பாலிகா மதுரகண்ட மண்டல
மனோஹரானன ஸரோருஹாம்
காலிகா மகில நாயிகாம் மனஸி
பாவயாமி பரதேவதாம்

பொருள்: நெற்றிக்கு மேலே கருமேகத்தைப் போன்று வண்டுகளின் வரிசைகளைப் போல் விளங்கும் முன்நெற்றிக் கேசத்தையுடையவளும், மல்லிகை போன்ற மணமுள்ள மலர் மாலைகளை அணிந்தவளும், தாமரை மலர் போன்ற சிவந்த கன்னப்பிரதேசத்தையுடையவளும், சர்வலோக நாயகியான காளி என்ற பெயர் பெற்று விளங்குபவளுமான பரதேவதையை மனதால் வணங்குகிறேன்.

10. நித்யமேவ நியமேன ஜல்பதாம்
புக்தி முக்தி பலதா மபீஷ்டதாம்
சங்கரேண ரசிதாம் ஸதா ஜபேந்
நாம ரத்ன வர ரத்னமாலிகாம்

பொருள்: ஒன்பது துதிகளால் தேவியைப் பணிந்துவிட்டு நாம ரத்னமாகிய இந்த நவரத்ன மாலிகை என்கிற ஒன்பது சுலோகங்களையும் நாள்தோறும் படிப்பவர்கள் போகம், மோட்சம் என்ற இரண்டையும் அடைவர். அவர்களது ஆசைகள் நிறைவேறும் என்பதையே இந்தப் பத்தாவது ஸ்லோகத்தில் பலஸ்ருதியாக ஆதிசங்கரப்பெருமான் சொல்லியிருக்கிறார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar