வாமோர்த்வேசின்ன முண்டம் வரமபிதததோ தக்ஷிணோர்த்மே திக்ஷ்ணம்
கட்கம் சாதேஹ்ய பீதிம் கரகமலதலே பிப்ரதீம் மேக காந்திம்
திக்வஸ்த்ராம் ஊர்த்துவ கேசீம் சவகரக்ருத் காஞ்சிகலாபாம் சவாஸ்ருக்
விஸ்பூர்யத் வ்யாத்தவக்த்ராம் சரிதஜன பலதாம் காளிகாம் தாம் பஜேஹம்
பொருள்: இடது மேல் கரத்தில் கூரிய கத்தியும், அதன் கீழ்க்கரத்தில் வெட்டப்பட்ட தலையும், வலது மேல்கரத்தில் அபயமும், கீழ்க்கரத்தில் வரமும் உடையவள். கருமையான நிறத்தினள். ஆடையற்றவள். மேல்நோக்கிய கேசமுடையவள். சவங்களின் கரங்களை ஒட்டியாணமாக அணிந்திருப்பவள். ரத்தம் சொட்டும் சிவந்த, தொங்கும் நாக்கினை உடையவள். பக்தர்களுக்கு வேண்டியவற்றை அருளுபவளுமாகிய காளியை வணங்குகிறேன்.
மூல மந்திரம்
க்ரீம் க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம் தக்ஷிணே காளிகே
க்ரீம் க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா
காயத்ரீ மந்திரம்
ஓம் மஹாகாள்யை வித்மஹே ச்மசான வாஸின்யை தீமஹி
தந்நோ கோர ப்ரசோதயாத்