ப்ரத்யாலிடபதாம் ஸதைவ தததீம் சின்னம் சிர: கர்த்ரிகாம்
திக்வஸ்த்ராம் ஸ்வகந்பந்த சோணித ஸுதா தாராம் பிபந்தீம்முதா
நாகபத்த சிரோமணிம் த்ரிணயனாம் ஹ்ருத்யுத்பலாங்க்ருதாம்
ரத்யாஸக்த மனோபவோபரி த்ருடாம் த்யாயேத் ஜபாஸன்னிபாம்
பொருள்: இடது காலை முன்னும், வலது காலை பின்னும் வைத்து நிற்பவளும், வெட்டப்பட்ட தலையையும், கூர்மையான பெரிய கத்தியையும், இரண்டு கரங்களில் வைத்திருப்பவளும், நிர்வாணமாக உள்ளவளும், தலையில்லாத தன் உடலில் இருந்து எழும் ரத்தமாகும் அமிர்தத்தை மகிழ்வுடன் அருந்துபவளும், பாம்பைக் கயிறு போலாக்கி, தலையில் மணிகளைக் கட்டிக் கொண்டிருப்பவளும், மூன்று கண்களைக் கொண்டவளும், மார்பில் நீலோத்பல மாலை அணிந்திருப்பவளும், செம்பருத்திப் பூவினைப் போன்ற நிறத்தினளுமான ஸ்ரீ சின்னமஸ்தா தேவியை ரதியோடு சேர்ந்த மன்மதன் மேல் நிற்பவளுமான ஸ்ரீ சின்னமஸ்தா தேவியை தியானிக்க வேண்டும். ஸ்ரீ சின்னமஸ்தா தேவியின் வலது பக்கம் வர்ணினீ தேவியும், இடதுபக்கம் டாகினி தேவியும் இருப்பார்கள். இவர்களும் தேவியின் கழுத்திலிருந்து பீறிடும் இரத்தத்தை அருந்துவார்கள். திகம்பரிகளாகவும், கபால மாலையும் கொண்டவர்கள்.
மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் வஜ்ர வைரோசனீயே
ஹும் ஹும் ப்பட் ஸ்வாஹா
காயத்ரீ மந்திரம்
ஓம் வைரோசின்யை வித்மஹே சின்ன மஸ்தாயை தீமஹி
தந்நோ தேவீ ப்ரசோதயாத்