அத்யுச்சா மலினாம்பரா (அ)கில ஜனோத்வேகாவஹா துர்மனா:
ரூக்ஷõக்ஷித்ரிதயா விசாலதசனா சூர்போதரீ சஞ்சலா
ப்ரஸ்வேதாம் புசிதா க்ஷúதாகுலதனு: க்ருஷ்ணாதி÷க்ஷப்ரபா
த்யேயா முக்தகசா ஸதா ப்ரியகலிர் தூமாவதீ மந்த்ரிணா
பொருள்: மிகவும் உயரமானவள். அழுக்கான ஆடை அணிந்திருப்பவள். நல்ல மனமற்ற அனைவருக்கும் துன்பம் தருபவள். மூன்று கண்களை உடையவள். இடைவெளி உடைய பற்களைக் கொண்டவள். கையில் முறத்தை வைத்திருப்பவள். நிலையற்றவள். வியர்வை உடையவள். பசியுடையவள். சாம்பல் நிறத்தினள். விரித்த சடையினள். கலஹத்தில் மிகுந்த ஆர்வம் உடையவள். இவ்வாறு தூமாவதியை வணங்குபவன் தியானிக்க வேண்டும். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு வேண்டிய அனைத்தையும் நிறைவேற்றுபவள்.
மூல மந்திரம்
த்தூம் த்தூம் தூமாவதீட்ட: ட்ட:
காயத்திரி மந்திரம்
ஓம் தூமாவத்யை வித்மஹே ஸம்ஹாரிண்யை தீமஹி
தந்நோ தூமா ப்ரசோதயாத்