கம்பீராம்ச மதோன்மத்தாம் தப்த காஞ்சன ஸந்நிபாம்
சதுர்புஜாம் த்ரிணயனாம் கமலாஸன ஸம்ஸ்திதாம்
பீதாம்பரதராம் ஸாந்த்ரத்ருட பீன பயோதராம்
ஹேம குண்டல ஸம்பூஷாம் பீத சந்த்ரார்த்த சேகராம்
பீதபூஷண ஸம்பூஷாம் ஸ்வர்ணஸிம்ஹாஸனஸ்திதாம்
ஊர்த்வகேச ஜடாஜுடாம் கராளவதனாம் புஜாம்
ப்ருகுடீ பீஷணானனாம், சம்பகாரண்ய ரூபிணீம்
வாமே பாசாங்குசௌ சக்திம் தஸ்யாதஸ்தாத் வரம் சுபம்
தக்ஷிணே க்ரமதோ வஜ்ரம் கதா ஜிஹ்வா அபயாணி ச
பொருள்: பகளாமுகி தேவி அம்ருதக்கடலின் நடுவில் மணி மண்டபத்தில் ரத்னமயமான மேடையில் தங்க சிம்ஹாஸனத்தில் அல்லது தாமரை மலரில் வீற்றிருப்பவள். கம்பீரமான தோற்றமுடையவள். உருக்கி விடப்பட்ட பொன்னைப் போன்ற மேனியுடையவள். மூன்று கண்களையுடையவள். தங்க குண்டலங்களை அணிந்தவள். பிறைச் சந்திரனை சூடியுள்ளவள். மேல் நோக்கிய ஜடாபாரம் உடையவள். பயமளிக்கும் முகத்தினளாகவும், ஸெளம்ய முகத்தினாளாகவும், காட்சியளிப்பவள். நெரிக்கும் புருவத்தை உடையவள். ஒரு கையில் கதையும், மறுகையில் எதிரியின் நாக்கினையும் கொண்டவளாய் இரு கரத்தினளாகவும் காட்சியளிப்பவள். வஜ்ரம், கதை, நாக்கு, அபயம் கொண்ட நான்கு கரத்தினளாகவும் காட்சி அளிப்பவள். சம்பகவனம் போன்று திகழ்பவள். வெண்மையான, சந்திரனைப் போன்று பிரகாசமான முகத்தினை உடையவளாகிய பகளாமுகியை வணங்குகிறேன்.
மூல மந்திரம்
ஓம் ஹ்ரீம் பகலாமுகீ ஸர்வதுஷ்டானாம் வாசம் முகம்
ஸ்தம்பய ஜிஹ்வாம் கீலய கீலய புத்திம் நாசய
ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா
காயத்திரி மந்திரம்
ஓம் பகலாமுக்யை வித்மஹே ஸ்தம்பின்யை தீமஹி
தந்நோ தேவீ ப்ரசோதயாத்