ஆதாம்ரார் காயுதாபாம் கலித சசிகலா ரச்மி தீப்தாம்த்ரி நேத்ராம்
தேவீம் பூர்ணேந்து வக்த்ராம் வித்ருத ஜபவடீ புஸ்தகா பீதியபீஷ்டாம்
பீனோத்துங்கஸ் தனார்த்தாம் வலிகலிதவிலக்னா மஸ்ருக் பங்கராஜத்
முண்டஸ்ரங்கமண்டி தாங்கீம் அருணதரது கூலானுலேபாம் நமாமி
பொருள்: பத்தாயிரம் உதய சூரியன் ஒளியினள். பிறையின் கிரண்களால் பிரகாசிப்பவள். மூன்று கண்களை உடையவள். பூர்ணசந்திரன் போன்ற முகத்தினை உடையவள். கையில் ஜபமாலை, புஸ்தகம், அபயம், வரதம் தரித்தவள். பருத்த நிமிர்ந்த மார்பகத்தினள். மூன்று மடிப்புடைய இடையினள். ரத்தம் தோய்ந்த முண்டமாலையினை அணிந்தவள். மிகச் சிவந்த பட்டாடை அணிந்தவள். இவ்வாறான ஸ்ரீ பைரவீ தேவியை வணங்குகின்றேன்.
மூல மந்திரம்
ஹஸைம் ஹஸகரீம் ஹஸைம்
காயத்திரி மந்திரம்
ஓம் க்லீம் த்ரிபுராதேவீ வித்மஹே காமேச்வரீ தீமஹி
தன்ன: க்லின்னே ப்ரசோதயாத்
ஓம் த்ரிபுராயை ச வித்மஹே பைரவ்யை ச தீமஹி
தந்நோ தேவி ப்ரசோதயாத்