பிரத்தியங்கிரா யந்திரம்
நரசிம்மருக்கும் சரபருக்குமிடையே உக்கிரமாக சண்டை ஏற்பட்டபோது கண்ட பேருண்டம் என்ற பக்ஷியின் உருவில் நரசிம்மம் யுத்தம் செய்தார். கண்ட பேருண்டம் சரபப் பக்ஷிக்கு வைரியாகும். சரபருக்கு கோபத்தில் அவர் நெற்றிக்கண்ணிலிருந்து உக்கிரப் பிரத்தியங்கிரா என்ற பத்திரகாளி உதித்தாள். இவள் கண்ட பேருண்டத்தின் சக்தியை விழுங்கி விட்டாள். சரபேஸ்வரரின் சக்திகளாக விளங்குபவர்கள் பிரத்தியங்கிராவும், சூலினியும். இவர்கள் இருவரும் சரபரின் மனைவிகள். இருவரும் சரபருக்கு இரு இறக்கைகளாக விளங்குகின்றனர். பிரத்தியங்கிரா என்பது பத்ரகாளியே தான். சரப மூர்த்தி நரஸிம்மத்தை அடக்க உதவ வந்த சக்தி இவளே. பயங்கரமானத் தோற்றத்தின் காரணமாக உக்ரா என்று அழைக்கப்படுகிறாள்.
பிரத்தியங்கிராவுக்கு ஆயிரம் முகங்கள். இம்முகம் எல்லாம் சிங்க முகம் போலவே இருக்கும். இரண்டாயிரம் கைகள், பெரிய சரீரம், கரிய நிறம், நீல ஆடை, சூலம், கபாலம், பாசம், டமருகம் முதலிய ஆயுதங்களைக் கொண்டிருப்பவள். சந்திர கலை, கரிய நிறம், நீல ஆடை இப்படி தியானித்து உபாசித்தால் நாட்டுக்கோ, மக்களுக்கோ சத்ரு பயம் ஏற்படாது. தக்ஷ யக்ஞத்தை அழிக்க சிவபெருமான் அனுப்பிய வீரபத்திரருக்கு துணையாக இருந்து உதவியவள் பிரத்தியங்கிரா தான். இவளை உபாசித்து இவள் அருளைப் பெற்றுவிட்டால் அந்த ராம லக்ஷ்மணர்கள் கூட தன்னை வெல்ல முடியாது என்பதை உணர்ந்த இந்திரஜித் நிகும்பலை என்ற இடத்தில் மிக ரகசியமாக யாகம் செய்தான். தன்னை உபாசிப்பவன் நல்லவனா கெட்டவனா என்பதை கவனிக்கக் கூடியவள் அல்ல இவள். பிரத்தியங்கிராவின் அருள் இந்திரஜித்திற்கு கிடைத்து விட்டால் அவனை யாரும் வெல்ல முடியாது என்பதை ஜாம்பவான் மூலம் அறிந்த ஆஞ்சநேயர் அந்த யாகத்தை முதலில் அழித்து விட்டு மறு வேலை பார்த்தார்.
பிரத்தியங்கிரா தேவி பயத்தை போக்குபவள். எந்தக் காரணத்தினால் பயம் ஏற்பட்டாலும் இவள் நாமாவைச் சொன்னாலே நிவாரணம் கிடைத்து விடும். பிரம்மானந்தத்தை அடைந்தவனுக்கு ஒரு விதமான பயமுமில்லை என்பது ச்ருதி வாக்கியம். ஆனந்தம் ப்ரும்ஹனோ வித்வான் ந பிபேதி குதச்சன ஸம்ஸாரமே பயங்கரமானது. இதிலிருந்து அம்பிகை விடுவிக்கிறாள்.
பீதம்மாம் நிதராம் அனன்ய சரணம் ரக்ஷ அனுகம்பாநிதே
ப்ரஸீத பரதேவதே மம ஹ்ருதி ப்ரபூதம் பயம் விதாரய
- தேவி மஹிம்ன ஸ்தோத்திரம்
ஆயிரம் தலை தத்துவம்
ஆயிரம் தலை, 2000 கைகள் என்றால் அவள் விச்வரூபி என்றே கொள்ள வேண்டும். விஸ்வமென்ற சமஸ்த ஜகத்திலும் பரவி இருப்பவள் என்று பொருள்.
யதாஹி கதலீ நாமத்வக் பத்ரான்யா ந த்ருச்யதே
ஏவம் விஸ்வஸ்ய நான்யத்வம் த்வத்ஸ்தா ஈஸ்வர த்ருச்யதே
- விஷ்ணு புராணம்
முன்பு இல்லை (ப்ராக பாவம்) இனி இருக்கப் போவதில்லை (த்வம்ஸாபாவம்) என்று பல பாவங்கள் இருக்கின்றன. இவைகள் எல்லாம் அம்பிகைக்கு இல்லை. இதை பின் கண்ட வாக்கியங்கள் விளக்குகின்றன.
ஸ பூர்வேஷாமபி குரு : காலேநா நவசச் சேதாத்
- யோக ஸூத்திரம்
புமான் ஆகரசவத் வ்யாபீ ஸ்வாதிர்க்தம் ம்ருஷாயத:
தேசத: காலதச் சாபி ஹ்யநந்தோ வஸ்துத: ஸ்ம்ருத :
- ஸெளர ஸம்ஹிதை
கோபம் என்பது அற்ப குணம்தான். ஆனால் வீரபத்திரரின் கோபம் தர்மாவேசம்தான். சிஷ்ட பரிபாலன துஷ்ட நிக்ரஹ வெறி தான். இதற்குப் பக்கத் துணையாக இருந்தவள் பிரத்தியங்கிரா. அம்பிகைக்கு க்ரோத சமனீ அதாவது கோபத்தை நாசம் செய்பவள் என்று பெயர். கோபமுடையவர் செய்யும் தானம். யக்ஞம், தபஸ் உபாசனை எல்லாம் பச்சை மண்ணாலாகிய குடத்தில் எடுத்த ஜலம்போல போய் விடுகிறது என்கிறது ஆபஸ்தம்ப ஸூத்திரம். தாருகனை அழித்தவளும் பத்ரகாளியான பிரத்தியங்கிராவே. தாருகனை அழிக்க சிவபெருமான் சிருஷ்டித்த இவளுக்கு காலகண்டி என்று பெயர் என்கிறது லிங்க புராணம்.
ஸ ஸர்ஜ காளீம் காமாரி : கால கண்டீம் காபர்தினீம்
பிரத்தியங்கிராவை உபாசித்தால் சத்ரு பயம் நாட்டுக்கோ நாட்டு மக்களுக்கோ ஏற்படாது.
க்ருஷ்ண வர்ணி ப்ருஹத்ரூபி பிருஹத்கண்டி மஹத்பயி
தேவி தேவி மஹாதேவி மம சத்ரூன் வினாசய
என்று சொல்லப்பட்டிருக்கிறது.
பைரவ மஹிஷி
சரபர், பைரவர் எல்லோருமே சிவ அம்சம். பிரத்தியங்கிரா பைரவரின் மஹிஷி. லோகத்திற்கு மரணம் (சிருஷ்டி) ரமணம் (ஸ்திதி) வமனம் (சம்ஹாரம்) செய்வதால் பரமசிவனுக்கு பைரவர் என்று பெயர். ஸ்ரீ புரத்தில் 22, 23 -வது பிராகாரங்களுக்கு நடுவில் மார்த்தாண்ட பைரவர் வசிப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.
பைரவ மூர்த்தி
சிவலீலைகளில் ஒன்று அந்தகன் என்ற அசுரனை பைரவ மூர்த்தியாக சிவபெருமான் வதம் செய்தது. சிவபெருமான் பைரவரை அழைத்து அந்தகனுக்கு அந்திய காலத்தைக் கொடுக்கும் ரகசியத்தைச் சொல்லி அனுப்பினார். பைரவர் அந்தகனை சம்ஹரித்துத் திரும்பி வருகிறார். இதற்கு உதவியாக இருந்தவள் பிரத்தியங்கிரா. பைரவ பத்னியாதலால் பைரவி என்ற பெயரும் உண்டு.
மங்கள ரூபிணி
ஒன்றை விரும்பி ஒன்றை வெறுப்பது என்ற எண்ணம் இருந்தால் ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது. எல்லாவற்றிலும் சரி, சமத்துவ மனோபாவம் ஏற்பட்டால்தான் ஞானத்தை அடைய முடியும். காளியை தாமஸீ என்கிறது தேவி மகாத்மியம். மோக்ஷம் என்பது இவளது கிருபையாலேதான் கிடைக்கிறது. மோக்ஷம் அடைவது என்றால் ஏதோ இறந்த பின்பு கிடைப்பது என்பதில்லை. இவள் அருள் இருந்தால் உயிருள்ள போதே மோக்ஷ நிலை கிடைக்கும். இதற்கு உன்மனீ நிலை என்பர். பிரத்தியங்கிராவின் தயவு இருந்தால் இத்தகைய உன்மனீ பாவம் எளிதில் ஏற்படும்.
ஞான ரூபிணி
இவள் ஞானத்தை தருபவளாதலால் வித்யை ரூபமாகவும், அவித்யை ரூபமாகவும் இருக்கிறாள். வித்யை, ஸ்வாத்மா ரூபமான ஞானம். அவித்யை (ஞானம் ஏற்படுவதற்கு முன்புள்ள நிலை). கடைசி விருத்தியின் ரூபமான ஞானம். இவ்விரண்டு ஸ்வரூபங்களாகவும் அம்பிகை இருக்கிறாள். இவ்விரண்டையும் உடையவன் அவித்யையினால் ம்ருத்யுவை ஜயித்து வித்யையினால் அமிர்தத்துவத்தை அடையச் செய்கிறான்.
வித்யாம் சாவித்யாம் ச யஸ்தத் வேதோபயம் ஸஹ
அவித்யாய ம்ருத்யும் தீர்த்வா வித்யயாம்ருதமசநுதே - ச்ருதி
இந்த இரண்டு ரூபங்களில் வித்யா ரூபத்தால் ஜீவன் விடுவிக்கப்படுகிறதென்றும், அவித்யா ரூபத்தால் கட்டப்படுகிறதென்றும் சொல்லப்படுகிறது.
வித்யா வித்யேதி தேவ்யா த்வே ரூபே ஜானிஹீ பார்த்திவ
ஏகயா முச்யதே ஜந்து : அந்யயா பத்யதே புந : -தேவி பாகவதம்
வ்யக்தா அவ்யக்தம்
முதல் முதலில் ஏற்படும் மஹத் தத்துவம் வ்யக்தம் எனப்படும். எல்லாவற்றையும் விட பெரியதாகையால் மஹத். இது வ்யக்தம், அவ்யக்தம் என்று பிரிந்தது. பூதங்களால் ஏற்படும் விகாரங்களோடு கூடியது வ்யக்தவான ரூபம். இவ்விதமான விகாரங்களுக்கு உட்படாதது அவ்யக்தமான ரூபம், இந்த இரண்டு விதமும் அம்பிகைக்கு உண்டு. தத்துவங்களில் மஹத் முதலிய 23 தத்துவங்கள் வ்யக்தம் என்றும், அவ்யக்தமென்றால் பராப்ரக்ருதி என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
பிரத்தியங்கிரா விதானம்
அஸ்ய ஸ்ரீ அதர்வண பத்ர காளீ மகா மந்திரஸ்ய பிரயங்கிரா ரிஷய : அதர்வண பத்ரகாளீ தேவதா
க்ஷம் பீஜம் ஹும் சக்தி : பட் கீலகம்
மம ஸர்வ துரித நிவிர்த்யர்த்தே ஜபே விநியோக:
ஓம் க்ஷம் பக்ஷ ஜ்வால ஜிஹ்வே கராள தம்ஷ்ட்ரே ப்ரத்யகரே க்ஷம் ஹ்ரீம் ஹும் பட்.
- அங்கன்யாஸம், கரன்யாஸம்
தியானம்
ஸிம்ஹீம் ஸிம்ஹ முகீம் பகவத: ஸ்ரீ பைரவஸ் யோல்லஸ சூல ஸ்தூல கபால பாச டமரு வ்யக்ரோக்ர ஹஸ்தாம் புஜாம்
தம்ஷ்ட்ராகோடி விசங்கடாஸ்ய குஹராமாக்த நேத்ரத்ரயீம் பாலேந்து த்யுதி மௌக்திகாம் பகவதீம் ப்ரத்யங்கராம் பாவயே லம் இத்யாதி பஞ்சபூஜா.
மூல மந்திரம்
ஓம் க்ஷம் பக்ஷ ஜ்வாலா ஜிஹ்வே கராள தம்ஷ்ட்ரே ப்ரத்யங்கரே க்ஷம் ஹ்ரீம் ஹும் பட்
தேவியின் இம்மூலமந்திரத்தை தினமும் பய பக்தியுடன் ஜெயிப்பவர்கள் நோய் நொடியற்று, சத்ரு அழிந்து, பேய் பில்லி சூன்யம் பறந்தோட, பயம் நீங்கி, பாதுகாப்பான வாழ்வில் எல்லா ஆனந்தத்தை யும் அடைந்து ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவியின் அருள்பெற்று, நீண்ட ஆயுளுடன் இம்மண்ணுலகில் நிலைபெற்று வாழ்வார்கள்.
பிரணவத்தில் இருந்து விரிவடைந்திருக்கும் இந்தத் தேவியின் மூலமந்திரம் காயத்ரீ மஹா மந்திரம் சொல்லுவதுபோல் ஐந்து இடைவெளி விட்டுச் சொல்ல வேண்டும்.
ஓம் - என்ற பிரணவத்தை தீர்க்க ஸ்வரத்திலும் அடுத்த க்ஷம் என்பதை ஸ்வரித அதாவது குறுகிய ஸ்வரத்திலும் ஓம் -க்ஷம் என்று ஒரு இடைவெளியிலும்
பக்ஷஜ்வாலா ஜிஹ்வே என்று இரண்டாவது இடைவெளியும் -
கராளதம்ஷ்ட்ரே என்று மூன்றாவது இடைவெளியும் -
ப்ரத் யங்கரே என்று நான்காவது இடைவெளியும் - க்ஷம் - ஹ்ரீம் ஹும்பட் ஸ்வாஹா என்று ஐந்தாவது இடைவெளியும் வைத்து ஒவ்வொரு இடைவெளிக்கும் இடைப்பட்ட காலம் மூன்று மாத்திரை நேரம் எனக் கொள்ளலாம். மூன்று மாத்திரை என்பது மூன்று செகண்டுகள் என்று கொள்ளலாம்.
கருணை உள்ளம் கொண்ட இத்தேவியின் மூல மந்திர அக்ஷரத்தின் பிரணவ கலைகளைக் கூர்ந்து நோக்கின், இதில் சம்ஹாரத்தைக் குறிக்கும் கலைக்கு இடமே இல்லை என்று கூறலாம். 1. ஜ்ஜம் என்ற சித்தி கலையும், 2. ஜம் என்ற சித்திகலையும், 3. கம் என்ற சிருஷ்டி கலையும், 4. த்தம் என்ற வரத கலையும் தான் உள்ளது. இந்தக் கலைகள் அக்னி சூரியக் கலைகளில் அடங்கி ஒளி வீசுகின்றபடியால் ஜ்வாலா என்ற பெயரை அடைகின்ற தேவி சித்தி, சிருஷ்டியை வரமாக அளிக்கும் வரதா எனப் பெயர் பெற்று, ஒளி வீசி, பக்த கோடிகளுக்கு உபாசகர்களுக்கு ஸகல சம்பத்துகளையும் அளிக்கின்ற பிரத காளி என்ற திருப்பெயரையும் பெற்று பிரத்தியங்கிரா தேவியாக என்றும் போற்றித் துதிக்கப்படுகிறாள். தனித்து ஏகாந்தமாக புன்னாக மரங்கள் சூழ்ந்த ஸ்தலத்தில் சர்வமங்களம் பொருந்திய காரிண்யை யாக ஒளிவீசுகின்ற மகா சக்தியான இந்தத் தேவியை போற்றித்துதித்து புகழும் ,பொருளும் சர்வசம்பத்தும் பெறுவோமாக.
அதர்வ ருக் மந்திரம்
ஓம் க்ருஷ்ணவர்ணீ ப்ருஹத்ரூபி, பிருஹத் கண்டீ மஹத்பயீ
தேவி தேவி மஹா தேவி மம சந்ரூன் விநாசய மம:
சத்ரூன் விநாசயோன் நம:
மூல மந்திரம்
கட் பட் ஜஹி மஹா க்ருத்யே விதூ மாக்நி ஸமப்ரபே தேவி தேவி மஹா தேவி மம சத்ரூன் விநாசய, மம சத்ரூன் விநாசயோம் நம:
ஓம் உச்சிஷ்ட புருஷி கும்ஸ்வபிஷி பயமே ஸமுபர்ச்சிதம் யதி சக்யம் சக்யம் வா தன்மே பகவதி சமய ஸ்வாஹா
பிரத்தியங்கிரா யந்த்ரம்
பிந்து, திரிகோண அஷ்ட கோண விருத்த அஷ்டதள, விருத்தத்ரர பூபுரம்.
பிந்து :- ஆதார சக்தி கமலாஸனாய நம: ஸ்ரீ பைரவ ஸஹித ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவ்யை நம:
ஆவரண பூஜை
பூபுரம் :- ருத்ராய நம: அக்னி, யம, நிருதி, வருண வாயு, குபேர, ஈசனாய நம: வஜ்ராய நம: சக்தி, தண்ட கட்க, பாச, அங்குச கதா திரிசூலாய நம:
விருத்தத்ரயே
திவ்யௌக குரவே நம: ஸித்தௌக குரவே நம: மானவெளக குரவே நம: கௌலானந்த நாத பரமகுருவே நம: பரமா சார்ய குரவே நம: பரமேஷ்டி குரவே நம: ஸ்வ குரவே நம:
அஷ்டதளம் மூலே
ஓம் அஸிதாங்க பைரவாய நம
ஓம் ருரு பைரவாய நம
ஓம் சண்ட பைரவாய நம
ஓம் க்ரோதந பைரவாய நம
ஓம் உன்மத்த பைரவாய நம
ஓம் கபால பைரவாய நம
ஓம் பீஷண பைரவாய நம
ஓம் ஸம்ஹார பைரவாய நம
அஷ்டதளாக்ரே
ஓம் பிராம்யை நம
ஓம் மாகேஸ்வரியை நம
ஓம் கௌமார்யை நம
ஓம் வைஷ்ணவ்யை நம
ஓம் வராஹ்யை நம
ஓம் இந்திராண்யை நம
ஓம் நாரஸிம்ஹ்யை நம
ஓம் சாமுண்டாயை நம
அஷ்டதள கிரந்தி ஸ்தானேஷு
ஓம் காமரூப பீடாய நம
ஓம் மலயகிரி பீடாய நம
ஓம் கொல்லகிரி பீடாய நம
ஓம் காலாந்தக பீடாய நம
ஓம் ஸெளஹார பீடாய நம
ஓம் ஜாலாந்திர பீடாய நம
ஓம் உட்டியான பீடாய நம
ஓம் தேவகூட பீடாய நம
விருத்த மண்டலே
ஓம் ஹேதுக பைரவாய நம
ஓம் வேதாள பைரவாய நம
ஓம் த்ரிபுராந்தக பைரவாய நம
ஓம் அக்னி ஜிஹ்வ பைரவாய நம
ஓம் காலாந்தக பைரவாய நம
ஓம் ஏக பாத பைரவாய நம
ஓம் கபால பைரவாய நம
ஓம் பீமரூப பைரவாய நம
ஓம் மலய பைரவாய நம
ஓம் தாடகேஸ்வர பைரவாய நம
அஷ்ட கோணேஷு
ஓம் ஸ்தம்பின்யை நம
ஓம் ÷க்ஷõபின்யை நம
ஓம் திராவின்யை நம
ஓம் ப்ராமின்யை நம
ஓம் மோகின்யை நம
ஓம் ஸ்தம்பின்யை நம
ஓம் ரௌத்ராயை நம
ஓம் சம்ஹாரிண்யை நம
திரிகோணாத் பரித :
ஓம் ஆக்னேயாதி நம
ஓம் ஹிருதயாய வாமின்யை நம
ஓம் சிரஸே நீலின்யை நம
ஓம் சிகாய சக்ரிண்யை நம
ஓம் கவசாய கட்கின்யை நம
ஓம் நேத்ரயாய பாசாங்க்யை நம
ஓம் அஸ்த்ராய காம்பின்யை நம
திரிகோகேணஷு
ஓம் காள்யை நம
ஓம் பத்ர காள்யை நம
ஓம் நித்யா காள்ளை நம:
பிந்து
ஊர்த்வ கேசிம் ச ஸிம்ஹஸ்தம் சந்த் ராங்கித சிரோருஹாம்
கபால சூல டமரு நாகபாச தராம் சுபாம்
ப்ரயத்யங்காரம் பஜேந் நித்யம் ஸர்வ சத்ரு விநாசினீம்
ஸ்ரீ பைரவ ஸஹிதாம் ஸ்ரீ ப்ரத்யங்கரா மஹா தேவீம் ஸம்பூஜ்ய
பூபுரே
ஓம் வடுகாய நம:
ஓம் யோகினீப்யோ நம:
ஓம் ÷க்ஷத்ர பாலேப்யோ நம:
ஓம் கணபதயே நம:
ஓம் ஸுதாயை நம:
ஓம் த்வாதசாதி த்யேப்யோ நம:
ஓம் ஏகாதச ருத்ரேப்யோ நம:
ஓம் ஸர்வேப்யோ பூதேப்யோ நம: