|
ஷீரடி சாயிபாபாவின் மூல மந்திரம்
ஓம் ஸாயி ஸாயி ஜெய ஜெய ஸாயி
சாயிநாதர் திருவடி
ஸாயி நாதர் திருவடியே ஸம்பத் தளிக்கும் திருவடியே நேயம் மிகுந்த திருவடியே நினைத்த தளிக்கும் திருவடியே தெய்வ பாபா திருவடியே தீரம் அளிக்கும் திருவடியே உயர்வை யளிக்கும் திருவடியே
ஷீரடி சாயிபாபாவின் காயத்ரி
ஓம் ஷீரடி ஸாயி நிவாஸாய வித்மஹே ஸர்வ தேவாய தீமஹி தந்தோ ஸர்வப்ரசோதயாத்
ஷீரடி சாயிபாபாவின் த்யான ஸ்லோகம்
பத்ரி க்ராம ஸமத் புதம் த்வாரகா மாயீ வாசினம் பக்தா பீஷ்டம் இதம் தேவம் ஸாயி நாதம் நமாமி :
சாயி பாவனி
1. ஜய ஈஷ்வர் ஜய சாயிதயாளா நீயே ஜகத்தின் பாதுகாப்பாளர்
2. தத்த திகம்பர ப்ரபூ அவதாரம் இவ்வுலகமே உந்தன் கைவசம்
3. ப்ரஹ்மாச்யுத சங்கர அவதாரம் சரணடைந்தோரின் பிராணாதாரம்
4. தரிசனம் தாரீர் ஓ! என் பிரபுவே போதும் இந்த பிறவிப்பிணியுமே
5. வேப்ப மரத்தினடியில் தோன்றினாய் கிழிந்த கப்னியே பொன்னாடையாய்
6. பிஷைபை தோளின் அணிகலனாய் பக்கிர் ரூபத்தில் வலம் வந்தாய்
7. கலியுகத்தில் நீ அவதரித்தாய் ஏழை எளியோரை உய்வித்தாய்
8. ஷீர்டியில் வாசம் செய்தாய் ஜனங்களின் மனதை கொள்ளை கொண்டாய்
9. குழலூதும் கண்ணனும் நீயானாய் வில்லேந்திய ராமனும் நீயானாய்
10. தயை நிரம்பியதே உந்தன் விழிகள் அமுது சொறிந்ததே உந்தன் மொழிகள்
11. புண்ய தலமானதே துவாரகமாயி அங்கு வசித்தாரே எங்கள் சாயி
12. பாபாவின் துனி அங்கு எரியும் நம் பாபங்கள் அங்கு தூசாகும்
13. வழிதவறிய அடியேன் பெருமூடன் நீயே எம்மை வழிநடத்தும் ஆசான்
14. பல்லாயிரம் பக்தர் உன்னைப் பணிந்தனரே கருணாமூர்த்தி எனை நீ மறவாதே
15. மூலே சாஸ்திரி என்ற அந்தணஸ்வாமி உன்னில் கண்டார் குரு கோலப்ஸ்வாமி
16. விஷப்பாம்பு ஷமாவை தீண்டியுமே விஷமிறக்கி அருளினாய் ஜீவனுமே
17. பிரளய மழையை சொல்லால் தடுத்தாய் பக்தர்களை முக்தர்கள் செய்தாய்
18. கோதுமையை அரைத்தாய் அரவையிலே அரவையில் காலராவும் அரைந்ததே
19. உன் திருவடியில் வைத்தேன் என் சிரம் மனமிரங்கி அருளும் எனக்கு வரம்
20. மனதின் விருப்பம் நிறைவேற்றுவாய் பிறவிக்கடலின் துன்பம் நீக்குவாய்
21. பக்த பீமாஜியும் நோயால் தவித்தான் பலவிதமாய் சிகிச்சைகள் எடுத்தான்
22. உந்தன் பவித்ர உதி உண்டான் ஷய ரோகம் போய் சுகமாய் ஆனான்
23. காகாஜி கண்டார் உன் திவ்யரூபம் அவருக்கு அளித்தாய் நீ விட்டல் ரூபம்
24. தாமுவிற்கு அளித்தாய் சந்தானம் அவர் மனம் பெற்றதே சந்தோஷம்
25. கிருபாநிதி, எனக்கு கிருபை செய் தீனதயாளா! என்மேல் தயை வை
26. உடல், பொருள், மனம் யாவும் உமக்கே அளித்திடுவாய் நற்கதி எமக்கே
27. மேகாவும் உன்னை அறியாமலே முஸ்லீம் பேதம் கொண்டானே
28. உன்னில் காட்டினாய் சிவனையுமே மேகாவும் அடைந்தான் பரமபதமே
29. எண்ணெய்க்குப் பதிலாய் நீரூற்றியுமே ஒளி கொடுத்தாய் நீ ஜோதிக்ககுமே
30. அதனைக் கண்டவர் மெய் மறந்தனரே கேட்டவர் வியப்பு மாளவில்லையே
31. சாந்த் படீல் ஆழ்ந்தார் கவலையிலே குதிரையை இருமாதம் காணவில்லையே
32. சாயி, நீ அவனுக்கு இரங்கினாய் தொலைந்த குதிரையை மீட்டுத் தந்தாய்
33. நம்பிக்கை, பொறுமை மனதில் வை சாயி, சாயி என்றே தினமும் ஜபம் செய்
34. ஒன்பது வியாழன் விரதம் செய்வாய் வெற்றி நிச்சயம் உமக்கே என்றாய்
35. தாத்யாவின் உயிர் ஊசலாடியதும் தந்தாயே நீ உன் ஆயுளையும்
36. தாய் பாயாஜா அன்பாய் தந்த ரொட்டி தாத்யா உயிரை காத்ததோ ? சாயி
37. பசு, பட்சிகளிடம் இரக்கம் கொண்டாய் அன்பாலேயே எமக்கு அரசனானாய்
38. எல்லோர்பாலும் உன் அருள் நோக்கு பக்தனுக்களித்தாய் அமுத வாக்கு
39. திருவடி பணிந்த பக்தருக்கே நீயே தந்தாய் அடைக்கலமே
40. அமுதினும் இனிய உன் வசனங்கள் போக்கும் பக்தனின் மன விசனங்கள்
41. தூணில் துரும்பில் இருக்கின்றாயே உன் லீலைகள் அற்புத பாடங்களே
42. உன்னைப் பாட சொற்கள் தேடுகிறேன் அறிவிலி நான் மடமையில் தவிக்கிறேன்
43. தீனதயாளா, நீ கர்ணனினும் வள்ளல் உன்னைத் துதித்தால் தொலையும் இன்னல்
44. ஓ ! சாயி ! என்மேல் தயை கொள்வாய் திருவடிகளில் எம்மை ஏற்றுக் கொள்வாய்
45. காலை, மாலை எவ்வேளையும் நிதமும் சாயி நாமம் நாவும் பாடிட வேண்டும்
46. திடபக்தியுடன் பாடும் பக்தனுமே பரமபதம் நிச்சயம் அடைவானே
47. தினமும் காலை. மாலை இருவேளையும் சாயி புகழ் பாடும் இப்பா வரிகளையும்
48. பக்தியுடன் பாடுபவன் துணையாவார் சாயி அவரே நம்மைப் பெற்ற தாயி
49. சாரி லீலை உரைக்கும் இப்பதிகங்கள் செப்பியவை அனைத்தும் ரத்தினங்கள்
50. நம்பிக்கை, பொறுமையுடன் சாயியை துதிப்போம் தடைகள் நீங்கி வெற்றி அடைவோம்
51. சாயியே அகண்ட சக்தி ஸ்வரூபம் மனதை வசீகரிக்கும் அழகு ரூபம்
52. தூய மனமுடன் ஸ்மரணை செய் என் மனமே தினம் ஜபி சத்குரு சாயி நாமமே
அனந்த கோடி ப்ரஹ்மாண்ட நாயக ராஜாதிராஜ யோகிராஜ
பரப்ரஹ்ம ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு சாயிநாத் மஹராஜ் கீ ஜய்
ஸ்ரீ சத்குரு சாயி நாதார்ப்பணமஸ்து சுபம் பவது
தத்தாத்ரேய பாவனி
ஜய யோகீச்வர தத்த தயாளா, ஜகத்தினை ஆக்கிய மூலாதாரா அத்ரி அநுசூயா கருவியாய் கொண்டாய், ஜக நன்மைக்காகவே அவதரித்தாய்
பிரம்மா, ஹரி, ஹரரின் அவதாரம், சரணாகதர்களின் பிரணாதாரம் அந்தர்யாமி, சத்சித் ஆனந்தன், பிரசன்ன சத்குரு இருதோளுடையன்
அன்னபூரணி யை தோளில் வைத்தாய், சாந்தி கமண்டலம் கரமேந்தினாய் நாலு, ஆறு, பல தோளுடையான், அளவிலா ஆற்றலுடைய புஜமுடையான்
நின்சரண் புகுந்தேன் அறியாமூடன், வாரும் திகம்பரா! போகுதே பிராணன் அர்ஜுனனின் தவக்குரல் கேட்டு கிருதயுகத்திலே, அக்கணமே பிரசன்னம் ஆனாயே
அளவிலா ஆனந்தம், சித்தி அளித்தாய், முடிவில் பரம பத முக்தியும் அளித்தாய் இன்று எனக்கருள ஏன் இத்தனை தாமதம்? உன்னையன்றி எனக்கில்லை புகலிடம்
விஷ்ணுசர்மா பக்திக்கிரங்கினாய், அவனளித்த சிரார்த்த உணவு அருந்தி ரட்சித்தாய் ஜம்ப அசுரனால் தொல்லை தேவருக்கே, தயை புரிந்தாய் நீ அமரருக்கே
மாயை பரப்பி திதிசுதனை, இந்திரன் கரத்தால் வதம் செய்வித்தாய் அளவிலா லீலைகள் புரிந்தாயே, அவற்றை வர்ணிக்க இயலுமோ சிவரூபனே
நொடியில் ஆயுவின் புத்திர சோகம் போக்கினாய், மகனை உயிர்ப்பித்து பற்றற்றவனாக்கினாய் சாத்யதேவ, யது, பிரஹ்லாத, பரசுராமருக்கே, போதித்தாய் நீ ஞானோபதேசமே
அளவிலா அருள் ஆற்றல் உடையோனே, என் குரல் கேட்க ஏன் மறுத்தாயே உன் தரிசனம் காணாமல் நானுமே, இறுதி காணேன், வாரீர் இக்கணமே
த்விஜஸ்திரீயின் அன்பை மெச்சினாயே, பிறந்தாய் நீ அவளின் மகனாகவே ஸ்மர்த்துகாமி, கலியுக கிருபாளனே, படிப்பறியா வண்ணானை உய்வித்தாயே
வயிற்று வலியில் துடித்த அந்தணனைக் காத்தாயே, வல்லபேசனை கயவ, காலனிடமிருந்து காத்தாயே என்னைப்பற்றிய அக்கறை உனக்கிலையே, என்னை நினைப்பாய் ஒருமுறையேனுமே
தழைக்கச் செய்தாயே உலர்ந்த பட்டமரம், என்னிடம் ஏன் இத்தனை உதாசீனம் முதிய மலட்டுப் பெண்ணின் கனவினையே, சேய் அளித்து பூர்த்தி செய்தாயே
அந்தணனின் வெண்குஷ்டம் நீக்கினாயே, அவன் ஆசைகளை நிறைவு செய்தாயே மலட்டெருமையை பால் சொறிய வைத்தாய், அந்தணனின் தரித்திரம் போக்கினாய்
அவரைக்காய் பிச்சையாய் ஏற்றாய், அந்தணனுக்கு தங்கக்குடம் அளித்தாய் பதி இறந்த பத்தினியின் துயர் துடைத்தாய், தத்தன் உன்னருளால் உயிர்த்தெழுந்தான்
கொடூர முன்வினையைப் போக்கினாய், கங்காதரனின் மகனை உயிர்ப்பித்தாய் மதோன்மத் புலையனிடம் தோற்றனரே, பக்த திரிவிக்ரமரை ரட்சித்தாயே
பக்த தந்துக் தன்னிஷ்டப்படியே, ஸ்ரீ சைலம் அடைந்தான் இமைப்பொழுதிலே ஒரே நேரத்தில் எடுத்தாய்எட்டு ரூபங்களே, உருவமற்றும் பலரூபமுடையவனே
தரிசனம் பெற்று தன்யமானரே, ஆனந்தம் அடைந்த உன் பக்தருமே யவனராஜன் வேதனை நீக்கினாயே, ஜாதிமத பேதம் உனக்கில்லையே
ராம, கிருஷ்ண அவதாரங்களிலே, நீ செய்த லீலைகள் கணக்கில்லையே கல், கணிகை, வேடம், பசு, பட்சியுமே, உன்னருளால் முக்தி அடைந்தனரே
நாமம் நவிலும் வேஷதாரியும் உய்வானே, உன் நாமம் நல்காத நன்மையில்லையே தீவினை, பிணி, துன்பம் தொலையுமே, சிவன் உன் நாமம் ஸ்மரித்தாலே
பில்லி, வசிய, தந்திரம் இம்சிக்காதே, ஸ்மரணையே மோட்சம் தந்திடுமே பூத, சூனிய, ஜந்து, அசுரர், ஓடிடுமே, தத்தர் குண மஹிமை கேட்டதுமே
தத்தர் புகழ் பாடும் தத்த பாவனியையே, தூபமேற்றி தினம் பாடுபவனுமே இரு லோகத்திலும் நன்மை பெறுவானே, சோகம் என்பதை அறியானே
யோக சித்தி அவன் அடிமையாகுமே, துக்க தரித்திரம் தொலைந்திடுமே ஐம்பத்திரு வியாழக்கிழமை நியமமுடனே, தத்த பாவனி அன்புடன் படித்தாலே
நிதமும் பக்தியுடன் படித்தாலுமே, நெருங்கான் அருகில் காலனுமே அநேக ரூபமிருந்தும் இறை ஒன்றே, தத்துவமறிந்தவனை மாயை அண்டாதே
ஆயிரம் பெயரிருந்தும் நீ ஒருவனே, தத்த திகம்பரா நீதான் இறைவனே வந்தனம் உனை செய்வேன் பலமுறை நானுமே, வேதம் பிறந்தது உன் மூச்சினிலே
சேஷனும் வர்ணித்து களைப்பானே, பல ஜன்மமெடுத்த பாமரன் எப்படி வர்ணிப்பேனே நாமம் பாடிய அனுபவம் திருப்தி தந்திடுமே, உனை அறியாமூடன் வீழ்ந்திடுவானே
தவசி தத்வமஸி அவன் இறைவனே, பாடுமனமே ஜயஜயஸ்ரீ குருதேவனே
|
|
|