சுத்தமான இடத்தில் உட்கார்ந்து கொண்டு ஜபம் செய்ய வேண்டும்.
ஸங்கல்பம் : சுக்லாம்பரதரம் + சாந்தயே
ப்ராணாயாமம் : ஓம் பூ+ பூர்ப்புவஸ்ஸுவரோம்.
மமோபாத்த - ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா
ஸ்ரீபரமேச்வர ப்ரீத்யர்த்தம்
(காலையில்) ப்ராதஸ் ஸந்த்யா காயத்ரீ மஹாமந்த்ர ஜபம் கரிஷ்யே
(மத்யான்னத்தில்) மாத்யாஹ்னிக காயத்ரீ மஹாமந்த்ர ஜபம் கரிஷ்யே
(ஸாயங்காலத்தில்) ஸாயம் ஸந்த்யா காயத்ரீ மஹா மந்த்ர ஜபம் கரிஷ்யே
என்று சொல்லிக் கொண்டு,
ப்ரணவஸ்ய ரிஷிர்ப்ரஹ்மா (என்று சிரசிலும்) தேவீ காயத்ரீச்சந்த: (என்று முகம் நுனியிலும்) பரமாத்மா தேவதா (என்று மார்பிலும்) கைவிரல்களால் தொடவும்)
பூராதி ஸப்த வ்யாஹ்ருதீனாம், அத்ரி, ப்ருகு-குத்ஸ-வஸிஷ்ட கௌதம - காச்யப ஆங்கீரஸ ரிஷய : (என்று சிரசிலும்) காயத்ரீ உஷ்ணிக் - அனுஷ்டுப் - ப்ருஹதீ : பங்க்தீ த்ருஷ்டுப் ஜகத்ய, சந்தாம்ஸி (என்று முகத்திலும்), அக்னி : வாயு - அர்க்க - வாகீச வருண - இந்த்ர -விச்வேதேவா தேவதா : - என்று மார்பிலும் கையை வைத்துக் கொள்ளவும்.
ப்ராணாயாமம் : ஓம் பூ : + பூர்ப்புவஸ்ஸுவரோம் (10 தடவை ஜபிக்கவும்)
பிறகு ஆயாத்விதி - அனுவாகஸ்ய - வாமதேவ ரிஷி : (சிரசில்) அனுஷ்டுப்சந்த : (முகத்தில்) காயத்ரீ தேவதா (மார்பில்)
ஆயாது வரதா தேவீ அக்ஷரம் ப்ரஹ்மஸம்மிதம் காயத்ரீம்ச்சந்தஸாம் மாதா இதம்ப்ரஹ்ம : ஜுஷஸ்வன: ஓஜோஸி - ஸஹோஸி - பலமஸி ப்ராஜோஸி தேவானாம் தாமநாமாஸி - விச்வமஸி விச்வாயு: ஸர்வமஸி ஸர்வாயு: அபிபூரோம் - காயத்ரீம் ஆவாஹயாமி ஸாவித்ரீம் ஆவாஹயாமி ஸரஸ்வதீம் ஆவாஹயாமி: ஸாவித்ர்யா ரிஷி : விச்வாமித்ர : (சிரசில்) தேவீ காயத்ரீச்சந்த : (முகத்தில்) ஸவிதா தேவதா (மார்பில்).
ஓம் பூர்புவஸ்ஸுவ : தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி தியோயோந : ப்ரசோதயாத் (இந்த மந்திரத்தை காலையில் 108 தடவையும், மத்யான்னத்தில் 28 தடவையும், ஸாயங்காலத்தில் 108 தடவையும் ஜபிக்கவும். பிறகு ப்ராணாயாமம் செய்யவும், பிறகு எழுந்து நின்று ப்ராதஸ் ஸந்த்யா காயத்ரீ உபஸ்தானம் கரிஷ்யே (என்று காலையிலும்) ஆதித்யோபஸ்தானம் கரிஷ்யே (என்று மத்தியான்னத்திலும்), ஸாயம் ஸந்த்யா காயத்ரீ உபஸ்தானம் கரிஷ்யே (என்று ஸாயங்காலத்தில் சொல்லவும்) உத்தமே சிகரே தேவி பூம்யாம் பர்வதமூர்தனி, பிராஹ்மணேப்யோ ஹ்யனுஜ்ஞானம் கச்சதேவி யதாஸுகம்.
காலையில் கூறவேண்டிய உபஸ்தான மந்த்ரம் :
மித்ரஸ்ய சர்ஷணீ த்ருத : ச்ரவோ தேவஸ்ய ஸானஸிம் ஸத்யம் சித்ரச்ரவஸ் தமம், மித்ரோஜனான்யாத யதிப்ரஜானன் மித்ரோதாதார ப்ருதிவீ முதத்யாம்மித்ர: கிருஷ்டீரனிமிஷா பிசஷ்டே ஸத்யாய ஹவ்யம் க்ருதவத் விதேம ப்ரஸமித்ர மர்தோ அஸ்து பயஸ்வான் யஸ்த ஆதித்ய சிக்ஷதிவ்ரதேன, நஹன்யதே நஜீயதே த்வோதோ நைநமகும் ஹோ அச்னோத்யந்திதோ ந தூராத்.
மத்யான்னத்தில் உபஸ்தான மந்த்ரம் :
ஆஸத்யேன ரஜஸா வாதமானோ நிவேசயன் - அம்ருதம் - மர்த்யஞ்ச - ஹிரண்யயேன ஸவிதா ரதேன - ஆதே வோயாதி புவனாவிபச்யன், உத்வயம் தமஸ ஸ்பரி பச்யந்தோ ஜ்யோதிருத்தரம், தேவம் தேவத்ரா ஸூர்யம், அகன்ம ஜ்யோதிருத்தமம், உதுத்யம் ஜாதவேதஸம், தேவம் வஹந்தி கேதவ: த்ருசே விச்வாய ஸூர்யம், சித்ரம் தேவானாம் உதகாதனீகம் சக்ஷúர்மித்ரஸ்ய வருணஸ்யாக்னே: ஆப்ராத்யாவா ப்ருதீவி அந்தரிக்ஷம் ஸூர்ய ஆத்மா ஜகதஸ் தஸ்துஷஸ்ச, தச்சக்ஷúர் தேவஹிதம் புரஸ்தாத் சுக்ர முச்சரத்.
(பச்யேம சரதஸ்ச்சதம், ஜீவேம சரதஸ்ச்சதம், நந்தாம சரதஸ்ச்சதம், மோதாமசரஸ்ச்சதம், பவாம சரதஸ்ச்சதம் ஸ்ருணவாம : சரதஸ்ச்சதம் ப்ரப்ரவாம சரதஸ்ச்சதம் அஜீதாஸ்யாம சரதஸ்ச்சதம், ஜ்யோக்ச ஸூர்யம் த்ருசே) (மேற்படி மந்த்ரங்கள் சூரியனைப் பார்த்து சொல்ல வேண்டியது) யஉதகான் மஹதோர்ணவாத் விப்ராஜமான: ஸரிரஸ்ய மத்யாத் ஸமாவ்ருஷபோ லோஹிதாக்ஷ: ஸூர்யோவிபச்சின் - மனஸாபுனாது.
ஸாயங்காலத்தில் உபஸ்தான மந்த்ரம் :
இமம்மே வருண ச்ருதீஹவம் - அத்யாச ம்ருடய த்வாமவஸ்யுராசகே, தத்வாயாமி ப்ரஹ்மணாவந்தமான: ததாசாஸ்தே யஜமானோ - ஹவிர்ப்பி: அஹேடமானோ வருணேஹபோதி - உருசகும்ஸமான : ஆயு: ப்ரமோஷீ : யச்சித்திதே விசோயதா ப்ரதேவ வருணவிரதம், மினீ மஸி - த்யவித்யவி, யத்கிஞ்சேதம் வருணதைவ்யே ஜனேபித்ரோஹம் மனுஷ்யாச்சரமாஸி, அசித்தீ யத்தவ தர்மாயுயோபிம மாநஸ் தஸ்மா தேனஸோ - தேவரீரிஷ : கிதவாஸோ யத்ரிரிபுர் : நதீவி யத்வாகாஸத்யம் உதயன்னவித்ம, ஸர்வாதா விஷ்ய சிதிரேவதேவ அதாதேஸ்யாம - வருணப்ரியாஸ:
(கீழ் குறிக்கப்படும் மந்திரங்கள் மூன்று வேளைகளிலும் உபஸ்தான மந்திரத்திற்குப் பிறகு சொல்ல வேண்டும்.)
ஸந்த்யாயை நம: ஸாவித்ர்யை நம: காயத்ர்யை நம: ஸரஸ்வத்யை நம: ஸர்வாப்யோ தேவதாப்யோ நமோ நம: காமோ கார்ஷீன் மன்யுரகாஷீன் நமோ நம: அபிவாதயே + அஸ்மிபோ:
ப்ராச்யை திசே நம : தக்ஷிணாயை திசே நம: ப்ரதீச்யை திசே நம: உதீச்யை திசே நம: ஊர்த்வாய நம: அதராய நம: அந்தரி க்ஷõய நம : பூம்யை நம : விஷ்ணவே நம: ப்ரஹ்மணே நம : (தெற்கு முகமாக நின்று) யமாய நம : யமாய தர்மராஜாய ம்ருத்யவே சாந்தகாயச வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச ஒளதும் பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே வ்ருகோதராய சித்ராய சித்ர குப்தாயவை நம: சித்ரகுப்தாயவை நம: ஓம் நம இதி (வடக்கு முகமாக நின்று) ரிதகும் ஸத்யம் பரம் ப்ரஹ்ம புருஷம் கிருஷ்ண பிங்களம் ஊர்த்வரேதம் விரூபாக்ஷம் விச்வரூபாயவை நம : விச்வரூபாயவை நம ஓம் நம இதி நர்மதாயை நம : ப்ராத : நர்மதாயை நமோநிசி நமோஸ்து நர்மதே துப்யம் த்ராஹிமாம் விஷஸர்ப்பதே ஜரத்காரோ : ஜரத்கார்வாம் ஸமுத்பன்னோ மஹாயசா : அஸ்தீக : ஸத்யஸந்நோ மாம் பன்னகேப்யோ அபிரக்ஷது - பன்னகேப்ய : அபிரக்ஷத்வோம் நம இதி அபஸர்ப்ப ஸர்ப்ப பத்ரந்தே தூரம் கச்சமஹாயசா : ஜனமேஜயஸ்ய யஞ்ஞாந்தே அஸ்தீக வசனம் ஸ்மரன்)
பிறகு (கிழக்கு முகமாக நின்று) நம : ஸவித்ரே ஜகதேக சக்ஷúஷே ஜகத் ப்ரஸூதி ஸ்திதிநாச ஹேதவே த்ரயீமயாய த்ரிகுணாத் மதாரிணே விரிஞ்சி நாராயண ஸங்கராத்மனே : த்யேய : ஸதா ஸவித்ருமண்டல மத்யவர்த்தீ நாராயண : ஸரஸிஜாஸன ஸந்நி விஷ்ட : கேயூரவான் மகரகுண்டலவான் கிரிடீ ஹாரீ ஹிரண்மயவபு: த்ருத சங்கசக்ர : சங்கசக்ர கதாபாணே த்வாரகா நிலயாச்யுத, கோவிந்த புண்டரீகாக்ஷ ரக்ஷமாம் சரணாகதம் ஆகாசாத் பதிதம் தோயம் யதாகச்சதி ஸாகரம், ஸர்வதேவ நமஸ்காரம் : கேசவம் ப்ரதிகச்சதி, ஸ்ரீ கேசவம் ப்ரதி கச்சத்யோம் நம இதி : (என்று நமஸ்காரம் செய்யவும்) அபிவாதயே + அஸ்மிபோ : ஆசமனம் 2 தடவை.
பிறகு (கையில் கொஞ்சம் ஜலத்தை எடுத்து கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லி கீழே விடவும்) மந்திரம் - காயேனவாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத்மனாவா ப்ரக்ருதே : ஸ்வபாவாத் கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி.
ஓம் தத்ஸத் - ப்ரஹ்மார்ப்பணமஸ்து.
ஜபம் செய்ய உட்கார்ந்த இடத்தில் ஜலத்தை கீழ்க்கண்ட மந்திரத்தினால் ப்ரோக்ஷித்து நெற்றியில் திலகமிட்டுக் கொள்ளவும்) அத்யானோ தேவஸவித: ப்ரஜாவத்ஸாவீ : ஸெளபகம் - பராதுஷ்வப்னியகும்ஸுவ, விச்வானி தேவஸவித : துரிதானி - பராஸுவ, யத்பத்ரம் தன்ம ஆஸுவ.
ஸந்த்யாவந்தனம் சம்பூர்ணம்.